சென்னை வந்த அமித் ஷா.. ஒரு அமைச்சரை கூட மரியாதைக்கு அனுப்பாத விஜய்.. என்ன நடந்தது?

  • சென்னை: தமிழகம் மற்றும் புதுசேரிக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. தவெக அரசு அமைந்த பிறகு தமிழகத்திற்கு அவர் வந்துள்ள முதல் பயணம் அது.

    Advertisement

    அமைச்சர்கள் யாரும் அமித்ஷாவை வரவேற்க வரவில்லை

    ஆனால் இந்த பயணத்தில் நடந்த சில சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதில் முக்கியமானது அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் அமித்ஷாவை வரவேற்க வரவில்லை. அதேசமயம், சென்னை போலிஸ் கமிஷனர் அமல்ராஜ், அமித்ஷாவை வரவேற்க வருவார் என செய்தி பரவியிருந்தது. ஆனால் அவரும் வரவில்லை.

    Advertisement

    இணை ஆணையர் விஜயகுமார் மட்டும் வருகை

    சென்னை தெற்கு இணை ஆணையர் விஜயகுமாரை மட்டும் அனுப்பி வைத்தது தவெக அரசு. அதேபோல, தேர்தலுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு அமித்ஷா வரும் போதெல்லாம், என்.டி.ஏ. கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்கிற முறையில், அமித்ஷாவை வரவேற்கும் முதல் மரியாதை எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் கிடைக்கும்.

    முதல் மரியாதை நயினார் நாகேந்திரனுக்கு

    எடப்பாடிக்குப் பிறகு தான் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மற்ற தலைவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், தற்போது அந்த முதல் மரியாதை நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்கப்பட்டது. நயினார் தான் அமித்ஷாவை முதலில் வரவேற்றார். அதன் பிறகுதான் எடப்பாடி மற்றும் அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு கொடுக்கப்பட்டது. இந்த வரிசையை பார்த்து, எடப்பாடியிடம், "என்ன இது? நாம் தான் முதலில் நிற்போம். இப்போது ஏன் மாற்றப்பட்டுள்ளது? " என்று அக்ரி கிருஷ்ணமுர்த்தி கேட்டுள்ளார்.

    Advertisement

    அமித்ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச விரும்பியுள்ளார் எடப்பாடி

    அதற்கு, "எனக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு பேசுவோம் " என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், சென்னைக்கு வரும் அமித்ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச விரும்பியுள்ளார் எடப்பாடி. ஆனால், "அமித்ஷா வரும் போது அதற்கு வாய்ப்பில்லை. பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்து டெல்லிக்கு புறப்படும் சமயத்தில் வாய்ப்பிருந்தால் உங்களுக்கு சொல்லப்படும் " என்று டெல்லியிலிருந்து ஏற்கனவே தகவல் தந்து விட்டார்களாம்.

    1 மணி நேரம் காலத்தாமதம் - அமித் ஷா கோபம்

    இந்த நிலையில், டெல்லியிலிருந்து சென்னைக்கு அமித்ஷா வரும் போதே 1 மணி நேரம் காலத்தாமதமாகி விட்டது. அதனால் உடனே திருவண்ணாமலைக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டியிருந்ததால், யாரிடமும் பேசவில்லை அமித்ஷா. மேகமூட்டம் அதிகமாகி திருவண்ணாமலையில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தால், திருவண்ணாமலை நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டியதிருக்கும் என்று அமித்ஷாவிடம் சொல்லப்பட்டிருந்தது. அதனால், சென்னையில் யாருக்கும் தனிப்பட்ட சந்திப்புக்கு அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என்று சொல்கிறார்கள் பாஜகவினர்.

    Advertisement

    அதாவது அமித் ஷாவிற்கு கூடுதல் நேரம் கிடைத்தும் கூட அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லையாம். புதுச்சேரி நிகழ்வை முடித்துவிட்டு சென்னை திரும்பும் போது ஏற்போர்ட்டில் நேரம் இருந்தால் சிலரை அமித்ஷா சந்திப்பார். இல்லையெனில் உடனே டெல்லிக்கு கிளம்பிவிடுவார். ஆனாலும், அமித்ஷாவை ஒரு ஐந்து நிமிடம் சந்திக்க அதிமுக தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாம். அதிமுகவில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்த சந்திப்புகளை மேற்கொள்ள சிலர் முயற்சி செய்கிறார்களாம்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Why did TVK Vijay not send any ministers to meet Union Minister Amit Shah?