எதிரிகள் சர்வ நாசம்.. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி

  • சென்னை:தமிழக முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லி பயணத்தை வரும் 12ம் தேதி முடிக்கும் முதல்வர் விஜய் அங்கிருந்த நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சென்று வந்த நிலையில் தற்போது விஜய் செல்வதன் பின்னணியில் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை மரியாதை நிமித்தமாக விஜய் சந்தித்து பேசினார்.

    Advertisement

    அதன்பிறகு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். நாளை முதல்வர் விஜய் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இந்த கூட்டத்தை முடித்த பிறகு டெல்லியில் ஓய்வெடுக்கும் விஜய் ஜூன் 12ம் தேதி அங்கிருந்து புறப்படுகிறார்..அங்கிருந்து விஜய் தமிழகம் திரும்பாமல் நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டெல்லியில் இருந்து விமானத்தில் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூர் கோவிலுக்கு செல்கிறார். அங்கிருந்து காரில் விஜய் மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியின் சுற்றுப்பயணத்தை முதல்வர் விஜய் முடிக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து விஜய் தமிழகம் திரும்பாமல் நேரடியாக கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    டெல்லியில் இருந்து விமானத்தில் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூர் கோவிலுக்கு செல்கிறார். அங்கிருந்து காரில் விஜய் மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார். இந்த கோவில் மிகவும் பிரபலமாகும். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இன்னும் சொல்லப்போனால் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதாவும் இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி உள்ளனர்.எம்ஜிஆர் தங்கவாள் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு அடிக்கடி செல்வதற்கு ஆன்மீகம், ஜோதிடம் மற்றும் அரசியல் ரீதியாக காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் முப்பெரும் தேவியர் உள்ளனர். கொல்லூர் மூகாம்பிகை அம்மனாக மகாலட்சுமி (செல்வம்/செல்வாக்கு), மகாசரஸ்வதி (அறிவு/அரசியல் சாணக்கியத்தனம்), மாகாளி (வீரம்/எதிரிகளை வெல்லும் சக்தி) ஆகிய முப்பெரும் தேவியரின் வடிவமாகத் திகழ்கிறார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.

    Advertisement

    அரசியல்வாதிகளுக்கு தேவையான அதிகாரம், செல்வாக்கு மற்றும் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை கோவிலில் உள்ள முப்பெரும் தேவிகள் கொடுப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த கோவிலில் வேண்டி கொண்டால் மொத்த அதிகாரமும், அதனை சிறப்பாக நிர்வகிக்கும் ஆற்றலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு உள்ளது.

    மேலும் கோவிலில் சண்டி ஹோமம் (சத்ரு சம்ஹாரம்) நடத்தும்போது அரசியலில் எதிர்ப்புகளும், துரோகங்களும், மறைமுக எதிரிகளும் வீழ்த்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இந்த கோவிலின் தீவிர பக்தர். அவர் தங்கவாள் காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    Advertisement

    அதேபோல், தான் ஜெயலலிதாவும். தமிழகத்தில் 2002ம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற பிறகு 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சண்டி ஹோமம் நடத்தினார்.

    அதேபோல் ஜெயலலிதா தனது அரசியல் வாழ்வில் சோதனையான காலகட்டங்களைச் சந்தித்தபோது, இங்கு வந்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களை செய்துள்ளார். இதனால் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்யும் சண்டி ஹோமம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

    English Summary

    Tamil Nadu CM Vijay has left for Delhi today on a three-day visit. Reports indicate that upon concluding his Delhi trip on the 12th, he will travel directly to the Kollur Mookambika Temple in the Udupi district of Karnataka. Since former Tamil Nadu Chief Ministers MGR and Jayalalithaa previously visited this temple, Vijay's visit has sparked considerable speculation regarding the underlying reasons.