சிக்கலாகிடும்.. 2 விஜயபாஸ்கர்களுக்கும் அவசர அவசரமாக விஜய் பதவி கொடுத்தது ஏன்? ரியல் காரணம்

  • சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக வில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கும் திடீரென தவெகவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், சட்டசபை உறுப்பினர்களுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் தொகுதி) ஆகியோர் தங்களது எம்எல் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    அடுத்தடுத்து வெளியேறிய அதிமுக தலைகள்

    இவர்களுடன் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எஸ். ஜெயகுமார், தாராபுரம் தொகுதி பி. சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகிய 6 பெரும் தலைவர்கள் அதிமுகவிலிருந்து விலகி, ஆளும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    ஏற்கனவே விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது இந்த 6 தொகுதிகளும் சேர்ந்து மொத்தம் 7 சட்டசபை இடங்கள் காலியாக உள்ளது.

    பதவியை எதிர்பார்க்காதீர்கள் - விஜய் போட்ட உத்தரவு

    ஏற்கனவே "அதிமுகவிலிருந்து மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள் இப்போது பதவியை எதிர்பார்க்காதீர்கள்; கட்சி பணிகளில் கொஞ்ச நாள் பணி செய்யட்டும். பிறகு பார்க்கலாம்" என்று கட்சியின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்திடம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார் முதல்வர் விஜய். இந்த தகவல், சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் வெக்ஸ் ஆகியிருந்தனர்.

    Advertisement

    இந்த நிலையில், சமீபத்தில் புஸ்சியை சந்தித்த விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட முன்னாள் அதிமுக வி. ஐ. பி. க்கள், " அமைச்சர் பதவியும் உடனே இல்லை. இடைத்தேர்தலும் எப்போது நடக்கும் என தெரியவில்லை. கட்சியில் பொறுப்பு கிடைக்குமா என்றால் அதுவும் மூடு மந்திரமாகவே இருக்கிறது.

    அதிமுகவுக்கே சென்று விட்டால் அது நமக்குத்தான் பலகீனம்

    நாங்கள் பொறுமையாக இருக்கலாம். ஆனா, எங்களை நம்பி எங்களோடு தவெகவுக்கு வந்தவர்கள் சோர்வாகியிருக்கிறார்கள். எங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என அவர்கள் நினைக்கின்றனர். இது தொடர்ந்தால், அவர்கள் அதிமுகவுக்கே சென்று விட்டால் அது நமக்குத்தான் பலகீனமாக மாறும் " என்று சொல்லி வருத்தப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இந்த ஆதங்கம், முதல்வர் விஜய்க்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்தான், உடனடி பொறுப்புகள் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதன்படி வழங்கப்பட்டுள்ளன என்று 'முன்னாள்' களிடமிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

    தவெக தலைமைக்கு விஜயபாஸ்கர் நெருக்கடி

    அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து அரசியல் செய்ய தனக்கு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று தவெக தலைமைக்கு விஜயபாஸ்கர் நெருக்கடி கொடுத்ததார். ஆனால் அந்த பதவி வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய அறிவிப்பின்படி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களுக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் ஆகிய இரண்டு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

    Advertisement

    முக்கியமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இசக்கி சுப்பையாவிற்கு எதிர்பார்த்தபடியே தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படாமல்.. புதிதாக அமைப்பு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Why did Vijay give TVK postings to 2 Vijayabaskars in the party? All of a sudden