அன்பில் மகேசை கைது செய்ய வேண்டாம்.. லண்டனில் இருந்து உத்தரவிட்ட விஜய்? என்ன காரணம்?

  • சென்னை: லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்யின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் தவெக அரசின் காவல்துறை உயரதிகாரிகள். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதற்காக நடந்துள்ள மோசடி புகார்கள் குறித்து மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அன்பில் மகேஷ் மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று போலீசார் ரெய்டு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த ரெய்டு சம்பவத்துக்கு முன்னதாக, இந்த வழக்கின் முதல் குற்றவாளி அரசக்குமார் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்து வருகிறார். இவருக்கும் அன்பில் மகேஷுக்கும் மூளையாக செயல்பட்ட இரண்டாவது குற்றவாளி (ஏ-2) முத்துக்குமார் கடந்த 3 மாதங்களாக தலை மறைவாக இருந்து வருகிறார். அரசக் குமாரிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலம் முத்துக்குமார் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரை கடுமையாக குற்றம்சாட்டியது.

    Advertisement

    அதனடிப்படையில், முத்துக்குமாரை கைது செய்து அவரி டமும் வாக்குமூலம் வாங்கியப்பிறகு, அன்பில் மகேஷை நெருங்கலாம் என்று தான் காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனராம். முதல்வர் விஜய்யும் அது குறித்து சில அறிவுறுத்தல்களை சொல்லியிருந்ததால், முத்துக்குமாரை கைது செய்யும் நடவடிக்கையை சீக்ரெட்டாக எடுத்து வந்தது போலீஸ்.

    ஆனால், முத்துக்குமார் எங்கிருக்கிறார் என போலீசாரால் கண்டுப் பிடிக்க முடிய வில்லை. லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் முத்துக்குமாரை நெருங்க முடியவில்லை. அதனால், லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பதற்கு முன்பே வெளி நாட்டிற்கு தப்பிச்சென்றிருப்பாரா? என்கிற கோணத்திலும் புலனாய்வு செய்து வந்தது. ஆனால், அதற்கான சுவடுகள் தெரியவில்லை. இந்தியா விலேயே பதுங்கியிருக்கலாம் என்று தேடி வருகிறார்கள்.

    Advertisement

    இந்த நிலையில் தான், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் லண்டனில் இருந்தபடி, நேற்று முன் தினம் விவாதித் திருக்கிறார் முதல்வர் விஜய். அன்பில் மகேஷுக்கு எதிரான வழக்கு அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் நின்றிருந்ததை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

    அதாவது, தவெக ஆட்சி யில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குறிப்பாக திமுகவுக்கு எதிரான புகார்களில் ஏதேனும் நிலுவையில் இருக்கிறதா? என்று உயரதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டபோதுதான், இதனை தெரிவித்திருக்கிறார்கள். அப்போது, சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி அடுத்த கட்ட ஆக்ஷன் களை நீங்கள் எடுக்கலாம் என முதல்வர் சொல்ல, அன்பில் மகேஷ் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என உயரதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

    Advertisement

    அதற்கு முதல்வர் தரப்பில், சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் ; ஆனா, கைது என்கிற அளவுக்கு போக வேண்டாம். சென்னைக்கு நான் வந்ததும் இது குறித்து விவாதிக்கலாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி தான் இன்று அன்பில் மகேஷ் தொடர்புடைய சென்னை, திருச்சி இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது என்று சோதனையின் பின்னணிகளை விவரிக்கின்றன கோட்டையிலுள்ள உள்துறை வட்டாரங்கள்.

    அதனால் முதல்வரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் அதிகாரிகள். சென்னைக்கு முதல்வர் திரும்பியதும் அன்பில் மகேஷ்சுக்கு எதிரான கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. அன்பில் மகேசுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலி னும், உதயநிதியும் பெரிதாக கவலையடையவில்லை என்கிறார்கள் திமுக வினர். இந்த ரெய்டு பற்றி கே.என்.நேரு கண்டன அறிக்கை வெளியிட்டதோடு திமுகவில் ரோல் முடிந்து விட்டதாக அறிவாலயம் நினைக்கிறதாம்.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Why did Vijay order CCB not to arrest Former Minister Anbil Mahesh