சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தை (FCRA 2026) வாபஸ் பெறக்கோரி ஒருமனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு நிறைவேற்றியிருப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருப்பதாக பாஜக கடுமையாகவிமர்சிக்கிறது. விஜய்யின் தவெக கட்சியை கிறிஸ்தவ கட்சி என்கிற அளவில் பாஜக விமர்சிக்கிறது. இதற்கு காரணங்களையும் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, கிறிஸ்துவ அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், மதக் குறியீடுகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி எதிர்க்கட்சியான பா.ஜ.க கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சிறுபான்மையினரால் நடத்தப்படும் நலத்திட்ட நிறுவனங்களைப் பாதிக்கும் வகையிலுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்ட மசோதா 2026-க்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனை தற்போது மேலும் தீவிரமடைந்தது.
நிதி அமைச்சர் மரியா வில்சன் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் ஜெபமாலையை ஏந்தி வந்ததும், தமிழை கிறிஸ்துவத்துடன் ஒப்பிட்டுப் பேசியதும் இந்த விவாதத்திற்கு மேலும் வலு சேர்த்தன. இதற்கிடையே, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் சென்னையில் நடைபெற்ற கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டார். இச்சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தவெக-வை ஒரு "கிறிஸ்துவக் கட்சி" என முத்திரை குத்தியுள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க, இந்த அரசியல் புயலுக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய்யின் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பி வருகிறது. இந்த சூழலில் தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தை (FCRA 2026) வாபஸ் பெறக்கோரி ஒருமனதாகத் தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு நிறைவேற்றியிருப்பதற்கான காரணங்களை பார்ப்போம். சிறுபான்மையின அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகள், வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்ட மசோதா (FCRA), 2026-ஐக் கடுமையாக எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம், ஒரு அமைப்பின் வெளிநாட்டு நிதி உரிமம் காலாவதியானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, அந்த அமைப்புக்குச் சொந்தமான பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அனாதை இல்லங்கள் போன்ற சொத்துக்களைக் கையகப்படுத்த மத்திய அரசுக்கு இச்சட்டம் அதிகாரம் அளிப்பதே காரணம் ஆகும். சிறுபான்மையினரால் நடத்தப்படும் அறக்கட்டளை நிறுவனங்களை முடக்குவதற்காக, நிதி ஒழுங்குமுறை நடைமுறைகளைச் மத்திய அரசு ஆயுதமாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகளும், இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை போன்ற அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. இந்த மசோதா "நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரம்" ஒன்றை உருவாக்குகிறது. ஒரு நிறுவனத்தின் FCRA பதிவு காலாவதியானாலோ, திரும்ப ஒப்படைக்கப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படத் தவறினாலோ, அந்த வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அனைத்துச் சொத்துக்களும் உடனடியாக அரசுக்கு மாற்றப்படுவிடும். பல மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் உள்நாட்டு நன்கொடைகளை கொண்டு கட்டப்பட்டவை எனச் சிறுபான்மையினர் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சட்டத்தின் கீழ், உள்நாட்டு முதலீடுகளைக் கணக்கில் கொள்ளாமல், முழு நிறுவனத்தையும் அரசு தன்வசப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு தொண்டு நிறுவனம் பின்னர் வெற்றிகரமாகத் தனது உரிமத்தை மீண்டும் பதிவு செய்தாலும், அதன் சொத்துக்களைத் திரும்பப் பெறுவதற்கான உரிமையை இந்த மசோதா பறிக்கிறது. அதை உருவாக்கிய அமைப்பு அச்சொத்துக்களை மீண்டும் பெறுவது நிரந்தரமாகத் தடைசெய்யப்படுகிறது. எந்தவொரு முன்விசாரணையோ அல்லது நீதிமன்ற விசாரணையோ இன்றி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். நிறுவனங்கள் தங்களின் சொத்துக்களை இழப்பதற்கு முன், தங்களைத் தற்காத்துக் கொள்ளச் சரியான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்று எதிர்க்ககட்சிகளால் குற்றம்சாட்டப்படுகிறது.FCRA புதுப்பித்தலை அதிகாரிகள் மறுப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான தெளிவான சட்டப்பூர்வ வழிமுறைகள் இதில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரக்கூடாது என்று திமுக, காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில், தவெக அரசு, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்ட மசோதா (FCRA), 2026-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.. முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அடங்கிய குழுவைச் சந்தித்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் நிறைவேறி உள்ளது. இந்த தீர்மானத்தை சற்றும்எதிர்பார்க்காத எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கடுமையான அரசியல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆ. ராஜமோகனால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம், மத்திய அரசின் இந்தச் சட்டத்தின் மீது தீவிரக் கவலையை வெளிப்படுத்தி இருந்தது தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு காலாவதியானாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாவிட்டாலோ, அவற்றின் சொத்துக்களை நிர்வகிக்க, மாற்ற அல்லது விற்க அரசுக்கு அதிகாரமளிக்கும் சரத்துகள் இதில் அடங்கியுள்ளன. இந்த விதிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நல நிறுவனங்களின் சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக தவெக அரசு வாதிட்டது. தற்போதைய வடிவத்தில் உள்ள இந்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், சொத்து உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகளைப் பாதுகாக்க ஆழமான ஆலோசனைகளை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை இத்தீர்மானம் கேட்டுக்கொண்டிருக்கிறது. முன்னதாக முனைவர் பால் தினகரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அடங்கிய கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் குழு, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தது. நியாயமான மனிதநேய, கல்வி மற்றும் மத நடவடிக்கைகளுக்கு நிர்வாக ரீதியான நெருக்கடிகள் ஏற்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, முன்மொழியப்பட்டுள்ள FCRA திருத்தங்களுக்கு எதிராகத் குரல் கொடுக்குமாறு மதத் தலைவர்கள் மாநிலத் தலைமையிடம் மனு அளித்தனர். இத்தீர்மானத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, ஆளும் கட்சியைக் கிறிஸ்துவ ஆதரவுக் குரலாகவும், "மறைமுக நிகழ்ச்சி நிரல்" கொண்டது என்று சாடியுள்ளது. நிதி அமைச்சர் மரியா வில்சன் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன் ஜெபமாலையை ஏந்தி வந்தது மற்றும் தமிழை கிறிஸ்துவத்துடன் ஒப்பிட்டுப் பேசியது, அத்துடன் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டது ஆகிய அண்மைக்கால நடவடிக்கைகளை, ஆட்சியில் மதப் போக்கைக் கலப்பதற்கான சான்றுகளாக பாஜகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். தீவிரமடைந்து வரும் இந்த விவாதங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய்யின் மௌனத்தைக் கேள்வி எழுப்பியுள்ள பாஜக, மதச்சார்பற்ற தன்மையை விட்டுக்கொடுத்து, சிறுபான்மையினரை மையமாகக் கொண்ட அரசியலுக்கு நிர்வாகம் முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சிறுபான்மை அமைப்புகளின் கடும் எதிர்ப்புஉள்கட்டமைப்பு மற்றும் சொத்துக்கள் பறிமுதல்
சொத்தை நிரந்தரமாக இழப்பார்கள்
சட்டப்பூர்வப் பாதுகாப்பின்மை மற்றும் இயற்கை நீதி மறுப்பு
சட்டமன்றத் தீர்மானம் என்ன
கிறிஸ்துவத் தலைவர்களுடனான சந்திப்பு
தவெக அரசின் நடவடிக்கைகளை விமர்சகர்களும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பது ஏன்?