வன்னி அரசை உச்சிகுளிர பாராட்டி தள்ளிய விஜய்! சர்ப்ரைஸால் திக்குமுக்காடிட்டாரு அமைச்சரு! ஏன் தெரியுமா

  • சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து, அமைச்சர் வன்னி அரசு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.. எதிர்க்கட்சிகள் தங்களை அசிங்கப்படுத்த நினைத்த ஒரு வார்த்தையை, தங்களின் கொள்கை முழக்கமாக மாற்றி முதலமைச்சரின் பாராட்டையும் பெற்றுள்ளார் அமைச்சர் வன்னி அரசு. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!!

    Advertisement

    சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் விசிக, ஐயுஎம்எல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

    Advertisement

    காஸ்ட்லி சோபா மாடல்

    இந்த ஆட்சி மாற்றத்திற்கு இடையே, கூட்டணி தலைவர்களை தவெக தலைவர் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாகவே, புஷ்பா பட பாணியில் காஸ்ட்லி சோபாக்கள் முன்னதாகவே அவர்களின் கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.. இந்தச் சம்பவத்தைக் கடுமையாக சாடிவரும் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தற்போதைய தவெக ஆட்சியை "சோபா மாடல் அரசு" என்று விடாமல் விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு, தனியார் செய்தி ஊடக நேர்க்காணலில் பங்கேற்றிருந்தார் அமைச்சர் வன்னி அரசு.. அப்போது பேசும்போது "தவெக அரசு சோபா மாடல் அரசுதான், S-Social Justice, O-Organised Action, F-Freedom, A-Anti Corruption & Caste இதுதான் SOFAவுக்கு விளக்கம்" என்றெல்லாம் கூறியிருந்தார்.

    Advertisement

    வன்னி அரசு தந்த சூப்பர் விளக்கம்

    அதுமட்டுமல்ல, முதல்வர் விஜய் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதை விட தனது செயலில் அந்த பதிலை காட்டுகிறார். கடந்த திமுக அரசின் நிலைப்பாடுகள் தவெக அரசிலும் தொடர்கின்றன. திமுக மற்றும் தவெக ஆட்சிக்கு இடையே கொள்கை அளவில் பெரிய வித்தியாசம் இல்லை" என்றெல்லாம் வன்னி அரசு அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்,

    அமைச்சர் வன்னி அரசின் இந்த பதிலடி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தை பெற்று வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்துத் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் வன்னி அரசின் சமீபத்திய டிவி நேர்காணலை தான் பார்த்ததாகவும் முதலமைச்சர் விஜய் மிகுந்த மகிழ்ச்சியுடன் வன்னி அரசுவிடமே குறிப்பிட்டாராம்.

    Advertisement

    வன்னி அரசுக்கு விஜய் பாராட்டு

    இதைத்தான் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு எக்ஸ் தளப்பதிவில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.

    அப்போது முதல்-அமைச்சர் விஜய் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும், அதில் சோபா மாடல் (SOFA MODEL) ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்" என்று பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    வன்னி அரசுக்கு விஜய் தந்த பாராட்டும், அதற்கு வன்னி அரசு பதிவிட்ட ட்வீட்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    English Summary

    Why Did Vijay Unexpectedly Praise the DMK Government? Minister Left Stunned by the Surprise Move