மாதிரி பத்திர பதிவு மையங்கள் வரமா சாபமா.. பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பது ஏன் ?

  • சென்னை: மாதிரி பத்திர பதிவு மையம் தொடங்கும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆவண எழுத்தாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். மாதிரி பத்திர பதிவு மையத்தை பத்திர எழுத்தர்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

    Advertisement

    தவெக அரசு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் கணிசமான மக்களுக்கு நன்மை தந்தாலும், அதனால் பாதிக்கப்படுபவரும் இருக்கிறார்கள். வெற்றி பயணத்தால் எப்படி ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதுபோல் மாதிரி பத்திரப்பதிவு மையங்களால் பத்து எழுத்தர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரம் இந்த முடிவு பத்திர பதிவு செய்யும் சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.‌ இது பற்றி பார்ப்போம்.

    Advertisement

    பொதுவாக நீங்கள் நிலம் அல்லது வீடு வாங்குவது, விற்பது, தானமாக வழங்குவது போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் பத்திர எழுத்துக்களை அணுக வேண்டும். அவர்கள் உங்களுக்கு பத்திரங்களைத் தயாரித்து, தேவையான விவரங்களைச் சேர்த்து, பதிவு செய்வதற்கான ஆவணப் பணிகளில் உதவி செய்வார்கள். தொடர்ந்து பத்திர பதிவு அலுவலகம் ஆவணங்களைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் மற்றும் சட்ட நடைமுறைகளை உறுதிப்படுத்தி, பத்திரத்தைப் பதிவு செய்கிறது. இது தான் நடைமுறையில் இருக்கிறது.

    இந்த சூழலில் தமிழக அரசு முதல்கட்டமாக 5 இடங்களில் மாதிரி பத்திரப் பதிவு மையங்களை அமைக்க போகிறது. பின்னர் மேலும் 20 மையங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இவை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் சேவை வழங்குநர்கள் மூலம் செயல்பட இருக்கிறது.

    Advertisement

    சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை, நீண்ட நேரக் காத்திருப்பு, கூட்ட நெரிசல் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களைக் குறைத்து, பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்க இந்த திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

    இதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் இ-டெண்டா் இணையதளம் வாயிலாக நவ. 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தத்துக்கான தொழில்நுட்ப ஏலங்கள் நவ. 17-ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த மாதிரி பத்திரப்பதிவு மையங்களை பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் தற்போது நிலம் அல்லது வீடு வாங்குபவர்கள், விற்பவர்கள் தங்களுடைய பத்திரங்களைத் தயாரிக்க ஆவண எழுத்தர்களை அணுகுகின்றனர். அரசு அமைக்கும் மையங்களிலேயே ஆவணத் தயாரிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகங்களை சுற்றி கடை வைத்துள்ள ஆவண எழுத்தர்களை இனிமேல் அணுக வேண்டிய அவசியமே இல்லை நிலை ஏற்படும்.

    Advertisement

    அரசின் முடிவால் ஆவண எழுத்தர்கள் மட்டுமின்றி, அவர்களிடம் பணிபுரியும் உதவியாளர்கள், தட்டச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம் என பத்திர எழுத்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    ஏற்கெனவே உரிமம் பெற்று ஆவணப் பணிகளைச் செய்து வரும் எழுத்தர்களின் எதிர்காலம் குறித்த அச்சம் எழுந்துள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் சேவை வழங்கப்படும்போது, தனிப்பட்ட ஆவண எழுத்தர்களின் தொழில் வாய்ப்புகள் குறையும் என்ற பயமும் அதிகரித்து உள்ளது.

    இதனால்தான் மாதிரி பத்திர பதிவு மையம் தொடங்கும் முடிவினை கைவிட வேண்டும், பத்திர பதிவுத்துறையில் STAR 3.0 திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பத்திர எழுத்தர் தொழிலை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது அனைத்து சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆவண எழுத்தாளர் சங்கத்தினர் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான ஆவண எழுத்தாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு பயனளிப்பது ஒரு புறமெனில் , அதையே வாழ்வாதாரமாக கொண்டவர்களை பாதிக்கிறது என்ற கவலை மறுபுறம் இருக்கிறது.

    English Summary

    The Tamil Nadu Document Writers' Association has urged the Tamil Nadu government to abandon its decision to launch 'model' document registration centers. In this post, we will explore why document writers are strongly opposing these model registration centers.