இப்படி நடந்து இருக்க கூடாது.. உதயநிதி செஞ்ச சம்பவம்.. கடுப்பான விஜய்.. தேடி வந்த தர்மசங்கடம்!

  • சென்னை: தஞ்சாவூர் பேரணியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட சில கருத்துகளுக்காக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை நீலாங்கரையில் வைத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

    Advertisement

    ஆனால், அந்த வழக்கில் அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான முயற்சிகளும், தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவதற்கான திட்டங்களும் அடுத்தடுத்து சந்தித்த பின்னடைவுகள், ஆளும்கட்சிக்கும் காவல் துறை உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை, சாலை வழியாக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்வதிலேயே காவல் துறைக்கு தொடர் சவால்கள் எழுந்தன. கும்பகோணம் வழியிலோ அல்லது அரியலூர் வழியிலோ அவரைப் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதற்குத் திட்டமிட்ட காவல் துறையினர், வழியெங்கும் திரண்ட திமுக தொண்டர்களின் மறியலாலும் கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் திணறிப்போயினர். ஒருகட்டத்தில் எந்த வழியில் செல்வது என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது.

    அதேவேளையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட தஞ்சாவூர் நகரக் காவல் நிலையப் பகுதியில் நிலவிய சூழல் காவல் துறையினருக்கு மேலும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பிரதான காவல் நிலையத்தைச் சுற்றி, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் மூத்த நிர்வாகிகளும் திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பியபடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர் நகர எல்லைக்குள் உதயநிதியை அனுமதிப்பது சட்டம் - ஒழுங்கு பிரச்னையை மோசமாக்கும் என்பதை உணர்ந்த உயர் அதிகாரிகள், வேறு வழியின்றித் தங்கள் திட்டத்தை உடனடியாக மாற்றிக்கொண்டனர்.

    Advertisement

    தஞ்சாவூருக்குள் நுழைய முடியாமல் தவித்த காவல் துறை வாகனப் பேரணி, திடீரென யூ-டர்ன் அடித்து, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செங்கிப்பட்டி காவல் நிலையத்தை நோக்கித் திருப்பி விடப்பட்டது. அங்கேயே உதயநிதி ஸ்டாலினிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி நிலையப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

    இந்தச் சம்பவங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காவல் துறையின் உயர்நிலை அதிகாரிகள் சிலர், இந்த ஒட்டுமொத்தக் கைது நடவடிக்கையிலும் திட்டமிடல் முற்றிலும் முடங்கிப் போனதாக சுட்டிக்காட்டுகின்றனர். "உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைக்க உண்மையிலேயே அரசு விரும்பியிருந்தால், அதை அதிகாலை நேரத்திலேயே முறையான காவல் அதிகாரிகளைக் கொண்டு திட்டமிட்டுச் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, பகல் நேரத்தில் அரைகுறை திட்டமிடலுடன் களமிறங்கியதே இந்தத் பின்னடைவுக்குக் காரணம்" என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    முதலமைச்சரின் நேரடி உத்தரவு இருந்தபோதிலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட சொந்தக் காவல் நிலையத்திற்கே ஒருவரைக் கொண்டுவந்து விசாரிக்க முடியாமல், வழியிலேயே காவல் நிலையத்தை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ்நாடு காவல் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அதிரடி நகர்வுகளும், காவல் துறையின் குளறுபடிகளும் இறுதியில் முதலமைச்சருக்கே பெரும் தர்மசங்கடத்தையும் அரசியல் ரீதியான விமர்சனங்களையும் தேடித்தந்துள்ளதாகக் காவல் துறை வட்டாரங்களிலேயே பேச்சுக்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Why does Vijay feel like he failed in the Udhayanidhi Stalin arrest?