அம்மன் கோயில்களுக்கு தேடி தேடிப் போகும் விஜய்.. பின்னணியில் இருக்கும் அந்த பிளான் தெரியுமா?

  • சென்னை: விஜய் கோயில் கோயிலாக செல்வது ஏன் என்ற கேள்வி இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சாய்பாபா கோயில், தேவாலயங்களுக்கு சென்றதை போலவே இந்து கோயில்களுக்கும் சென்ற விஜய், சமீபகாலமாக அம்மன் கோயில்களில் அதிகமாக வழிபாடு நடத்துவது ஏன்? பெண்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியா? அல்லது இதற்குப் பின்னால் வேறு அரசியல் கணக்கு இருக்கிறதா? என்ற விவாதமும் அரசியல் களத்தில் எழுந்துள்ளது..

    Advertisement

    தமிழக அரசியலில் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.. அப்படித்தான் அவரது அடுத்தடுத்த கோயில் பயணங்களும் விவாதத்தை கிளப்பியுள்ளன.. குறிப்பாக, தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மூலனூரில் உள்ள வஞ்சியம்மன் கோயிலுக்கு சென்று விஜய் வழிபட்டது முதலே இந்த விவாதமும் சந்தேகமும் வலுவடைந்து வருகின்றன..

    Advertisement

    சர்ச் சாய்பாபா கோயில்

    அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு விஜய் கோயில்களுக்குச் செல்வது இது முதல் முறை கிடையாது.. தேர்தல் பிரச்சாரத்தின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழிபாடு நடத்தினார். பிறகு மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கும் சென்றார். அதேபோல், சர்ச்சுக்கும் சென்று முட்டிப்போட்டு பிரார்த்தனை செய்தார்..

    முதலமைச்சரான பிறகு கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று, அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாள் காணிக்கையாகச் செலுத்தினார். அதன்பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வழிபாடு நடத்தினார். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடியுடன் இணைந்தும் வழிபாட்டில் பங்கேற்றார்..

    Advertisement

    தாராபுரம் வஞ்சியம்மன் கோயில்

    இந்த வரிசையில்தான் இப்போது தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அடுத்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்..

    விஜய் அடுத்தடுத்து கோயில்களுக்குச் செல்வதைப் பார்த்து, இதன் பின்னணியில் அரசியல் கணக்கு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, பெண்கள் ஓட்டு, பெரியார் கொள்கை, சாதி சார்ந்த ஆதரவு எனப் பல கோணங்களில் இந்தப் பயணங்கள் விவாதிக்கப்படுகின்றன..

    பெண்கள் ஓட்டுக்கு குறியா?

    தமிழக அரசியலில் பெண்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்பது எல்லாக் கட்சிகளுக்கும் தெரிந்த விஷயம்தான்.. பெண்களுக்கான இலவச பஸ் பயணம், உரிமைத்தொகை, பல்வேறு நலத்திட்டங்கள் எனப் பெண்களின் ஆதரவைப் பெறுவதற்கு கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன..

    Advertisement

    அப்படிப்பட்ட சூழலில், விஜய் அடுத்தடுத்து அம்மன் கோயில்களுக்குச் செல்வது பெண்களின் ஆதரவைப் பெறுவதற்கான அரசியல் நகர்வா என்ற கேள்வி எழுகிறது. அம்மன் வழிபாடு என்பது நிறைய குடும்பங்களில், குறிப்பாகப் பெண்களின் நம்பிக்கையோடும் குடும்பத்தின் குலதெய்வ வழிபாட்டோடும் நெருக்கமாக இணைந்திருக்கிறது..

    பெரியார் கொள்கை

    பெரியார் கொள்கைகளைப் பற்றிப் பேசும் விஜய், ஒருபுறம் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவது முரண்பாடாக இருப்பதாகவும் ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். வெற்றிவேல் வீரவேல் என்று முழங்குவது, கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருக்க முடியாது என்று பேசுவது, பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபடுவது என அவரது செயல்பாடுகள் அனைத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்பதும் அவர்களது வாதம்..

    Advertisement

    ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்ற விஜய்க்கு, தமிழகத்திலுள்ள தாராபுரம் மூலனூர் வஞ்சியம்மன் கோயில் இதுவரை தெரியவில்லையா? தேர்தல் நேரத்தில்தான் இந்தக் கோயில் இருப்பது நினைவுக்கு வந்ததா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்..

    விஜய் வஞ்சியம்மன் கோயிலுக்கு வந்து சென்றதும் அமைச்சர் ரமேஷ் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், முதலமைச்சர் கோயிலுக்கு வந்து சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதேநேரத்தில், வஞ்சியம்மன் கோயில் சுமார் 9,000 குடும்பங்களின் குலதெய்வமாக விளங்குவதாகவும் கூறியிருந்தார்..

    இதையடுத்து, கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதற்காகத்தான் விஜய் இந்தக் கோயிலுக்குச் சென்றாரா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது..

    Advertisement

    மதம் சார்ந்த அணுகுமுறை

    விஜய்யின் மதம் சார்ந்த அணுகுமுறைகளையும் தேர்தல் பயணங்களையும் விமர்சிக்கும் சிலர், மதுராந்தகம், தாராபுரம் போன்ற குறிப்பிட்ட தொகுதிகளின் தேர்தல் கணக்குகளுக்காக மட்டும்தான் இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்றும் கேட்கிறார்கள்..

    அல்லது, பல்வேறு சமூகங்கள், மத நம்பிக்கைகளைக் கொண்ட வாக்காளர்களிடம் ஆதரவை விரிவுபடுத்தும் முயற்சியா என்றும் விவாதிக்கிறார்கள். மதுரையில் தேர்தல் நடந்திருந்தால் வன்னியர், கவுண்டர், தலித் என வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இதேபோல் திரண்டு வந்திருப்பார்களா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கிறார்கள்..

    பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் தேர்தல் உத்திகளைவிடவும் சாதி சார்ந்த கணக்குகளைத் தவெக கையாள்வதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். இவை அனைத்தும் விஜய்யின் கோயில் பயணங்களைச் சுற்றி முன்வைக்கப்படும் அரசியல் பார்வைகளும் கேள்விகளும்தான்..

    மாற்றுக் கருத்துக்கள்

    இந்த விமர்சனங்களுக்கு மாற்றாகவும் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. முதலில், விஜய் கோயில்களுக்கு செல்வதை மட்டும் வைத்துக்கொண்டு, அவர் பெண்களின் வாக்குகளை குறிவைக்கிறார் அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார் என்று உறுதியாக முடிவு செய்துவிட முடியாது..

    அம்மன் கோயில்களுக்கு செல்வது பெண்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியாக பார்க்கப்படலாம். அதேநேரத்தில், அது அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். கோயில் வழிபாடு மட்டுமே ஒருவரின் அரசியல் கொள்கைகளையோ தேர்தல் நோக்கத்தையோ தீர்மானித்துவிடாது..

    அதேபோல், பெரியார் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதும் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் ஒன்றுக்கொன்று எதிரானவைதானா என்ற கேள்வியும் இருக்கிறது. ஒருவரின் அரசியல் கொள்கையும் தனிப்பட்ட வழிபாட்டு நம்பிக்கையும் வெவ்வேறாக இருக்க முடியாதா என்பதும் விவாதத்துக்குரிய விஷயம்தான்..

    அமைச்சர் ரமேஷ்

    விஜய் பல்வேறு மதங்கள், சமூகங்களை சேர்ந்த மக்களிடம் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார் என்றும் பார்க்க முடியும். ஆனால், அந்த முயற்சிக்கு பின்னால் குறிப்பிட்ட தேர்தல் கணக்கு இருப்பதாக சொல்வதற்கு, கோயில் பயணங்களை தாண்டிய ஆதாரங்களும் தேவை..

    அமைச்சர் ரமேஷ் கூறியபடி வஞ்சியம்மன் கோயில் சுமார் 9,000 குடும்பங்களின் குலதெய்வமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கோயிலுக்கு விஜய் சென்றதற்கான உண்மையான நோக்கம் அதுவே என்று இதை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது. அதேபோல், கோயிலுக்கு வந்து சென்றதை அரசியலாக்க வேண்டாம் என்ற அமைச்சரின் வேண்டுகோளும் விமர்சனங்கள் அனைத்துக்கும் பதிலாகிவிடாது..

    ஒருபுறம் எல்லா மதங்களுக்கும் முக்கியத்துவம் தரும் தலைவராகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், மறுபுறம் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் நம்பிக்கைகளோடு நெருக்கம் ஏற்படுத்திக்கொள்கிறாரா என்ற கேள்வி எழுகிறது..

    பெண்கள் ஓட்டுக்கள்

    ஆனால், அவரது கோயில் பயணங்கள் அரசியல் ஆதரவைப் பெற்றுத் தருமா என்பதைத் தீர்மானிப்பது வழிபாடு மட்டுமல்ல.. கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள், வேட்பாளர்கள், உள்ளூர் பிரச்சினைகள், மக்களிடம் அவர் ஏற்படுத்தும் நம்பிக்கை என நிறைய விஷயங்கள் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும்..

    ஆக, விஜய்யின் அடுத்தடுத்த அம்மன் கோயில் பயணங்கள் தனிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடா, பெண்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரிடம் நெருக்கம் ஏற்படுத்தும் முயற்சியா அல்லது தேர்தல் அரசியலின் ஒரு பகுதியா என்ற கேள்விக்கு இப்போதே உறுதியான பதிலைச் சொல்ல முடியாது.. ஆனால், இந்த ஆன்மீக பயணங்கள் தமிழக அரசியலில் பெண்கள் ஓட்டு முதல் சாதி கணக்கு வரை பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளன என்பதில் சந்தேகமில்லை..!!

    English Summary

    Kollur to Dharapuram Vanchi: Why Is Vijay Visiting Amman Temples? The Real Reason Behind His Visits