சென்னை: ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஏற்கெனவே விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விசாரித்து வந்த நிலையில் மற்றொரு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி உள்ளே வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கும் நிலுவையில் உள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கு தினந்தோறும் புதிய திருப்பங்களையும் அதிர்ச்சிகளையும் கொடுத்து வருகிறது. ஜெம் வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் கிடைத்த வீடியோக்கள் தெளிவாக இல்லை என்பதால் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என திமுக முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் ஜெம் வீரமணி வழக்கு தவெக அமைச்சர்கள் சொல்வது போல் திமுக ஆட்சியில் முடித்து வைக்கப்படவில்லை என்றும் ஆதாரம் கிடைத்தவுடன் நடவடிக்கை என்று நிலுவையில் வைக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். திமுக ஆட்சியில் தெளிவாக இல்லாத ஆதாரம், தவெக ஆட்சியில் எப்படி கிடைத்தது? என்றெல்லாம் கேள்வி எழுந்தது. மேலும் ஜெம் வீரமணி சாதாரண வீரமணியாக இருந்திருந்தால் இத்தனை காலம் சும்மா விட்டிருப்பார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஜெம் வீரமணியோ, தான் சிறுமிகளை ஒன்றும் செய்யவில்லை என்றும், ஜோதிடர் பரிகாரத்தின் பேரில் சிறுமிகளுக்கு மணப்பெண் அலங்காரம் போட்டும் தனக்கு மணமகன் அலங்காரம் போட்டு அவர்களுடன் அமர்ந்ததாக தெரிவித்திருந்தார். எனினும் அவரை கடந்த மாதம் 28 ஆம் தேதியே கைது செய்துவிட்டனர். இந்த குற்றங்களுக்கு உதவியாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜெம் வீரமணி தனது பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்படாமல் இருக்க காவல் துறை உயரதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை ரூ 70 கோடி பணத்தை செட்டில் செய்ததாக கூறப்படுகிறது. இந்த ரூ 70 கோடியை வீரமணிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த சொத்தை விற்க ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் உதவியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும், ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் சென்றிருந்தனர். ஆனால் அங்கு அவர் இல்லை, வெளிநாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த சென்னை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த மகேஷ்குமார், ராஜலட்சுமி, உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெம் வீரமணி வழக்கு யார் உத்தரவின் பேரில் முடித்து வைக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அது போல் ஏற்கெனவே இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் விசாரித்து வரும் நிலையில் மற்றொரு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி ஏன் திடீரென உள்ளே நுழைந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராஜலட்சுமி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு நிலுவையில் உள்ளது. சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ராஜலட்சுமி, எழும்பூரில் விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தார். அவர் 2017ஆம் ஆண்டு முதல் கடந்த 2025 ஆம் ஆண்டு காலகட்டம் வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ 5.42 கோடி வரை சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜலட்சுமி வீட்டில் கடந்த 2017ஆம் ராஜலட்சுமியின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபச்சார தடுப்பு பிரிவுக்கு வரும் முன்னர் அவர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.ஆதாரம் பிளர்
ஜெம் வீரமணி
யார் யார் கைது?
எஃப்ஐஆரில் ஜெம் வீரமணி பெயர்
சொத்து விற்பனை
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு
விபச்சார தடுப்பு பிரிவு
ஜெம் வீரமணி வழக்கை முடித்து வைத்தது ஏன்?
யார் இந்த இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி?