விஜய் வந்தபின்தான் இப்படி.. வேரோடு அறுக்க வேண்டும்.. எடப்பாடி சொன்ன ஒரு வார்த்தை.. கதை ஓவர்?

  • சென்னை: அதிமுகவில் தன்னை எதிர்க்கும் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் தனிமைப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக எந்தவிதமான அரசியலை முன்னெடுக்க வேண்டுமோ அதனை செயல்படுத்தி வருகிறார்.

    Advertisement

    அதனடிப்படையில்தான் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களிடமிருந்த பொறுப்புகளை பறித்தது. சண்முகத்தின் அதிகாரத் தையும் ஆளுமையையும் நிர்மூலமாக்க வேண்டுமானால் வேர்களை வெட்ட வேண்டியதுதான் என்கிற கோட்பாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. அதற்காக, சண்முகத்தின் ஆட்களுக்கும், மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல்களை பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி. இப்படி ஒரு மோதல் உருவாக வேண்டுமென மா.செ. வுக்கு ஆர்டர் போட்டதே இவர் தான் என்கிற பேச்சு விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் இருக்கிறது.

    Advertisement

    எடப்பாடி பழனிச்சாமியின் இப்படிப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சியை தற்போது எடப்பாடிக்கு அருகே இருக்கும் தலைவர்களாலும் ரசிக்க முடிய வில்லை. இதற்கிடையே, மாவட்டம் வாரிய அதிமுக நிர்வாகிகளிடம் விவாதித் து வருகிற எடப்பாடி பழனிச்சாமியிடம், மூத்த தலைவர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை கட்சியில் அவர்களிடமுள்ள பதவிகளை பறித்து வருகிறீர்கள். இது ஒருவித மனப்புழுக்கத்தை கட்சியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுதவிர, விஜய் வந்த பின்தான்.. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைவதும் அதிகரிக்கிறது. இப்படியே போனால், அதிமுக கரைந்து விடும்ங்கிற கவலை எங்களுக்கு.

    இதனை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? அக்கறைக்காட்டுகிறீர்களா? என்று எங்களுக்குத் தெரியவில்லை,. ஆனால், இந்த செயல்கள் தொடர்ந்து நடந்தால் தேர்தல் காலத்திலும் சரி, மற்ற சமயங்களிலும் சரி, கட்சி பணிகளைச் செய்ய நம்மிடம் நிர்வாகிகளே இருக்க மாட்டார்கள் '' என்று சொல்லி வருத்தப்பட்டுள்ளனர் மாவட்ட நிர்வாகிகள்.

    Advertisement

    அவர்களின் கருத்துக்களை பொறுமையாக உள்வாங்கிய எடப்பாடி பழனி ச்சாமி, ''கட்சியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பவர்கள், கட்சியின் சட்ட விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் விரோதமாக நடந்துகொள்பவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுதானே சரியாக இருக்கும். இதில் மூத்த தலைவர்கள், சாதாரண நிர்வாகிகள் என பேதம் பார்க்க முடியாது. அதனால் தான் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் நான் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்பதை உணர்த்தவும் சாதாரண தொண்டர்களுக்கும் கட்சி மீது நம்பிக்கை பிடிப்பு வரும் வகையிலும் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறேன்.

    என்ன நடந்தாலும் அதிமுகவுக்கென இருக்கும் 20 முதல் 27 சதவீத வாக்குகள் எந்த சூழலிலும் எங்கும் மாறாது. புரட்சித் தலைவரும் புரட்சித் தலைவியும் இரட்டை இடையும் உருவாக்கித் தந்த அடித்தளம் அது. இந்த 27 சதவீத வாக்குகள் நம்மிடம் இருக்கும் வரை இங்கு தனி நபர்களின் ஆதிக்கம் எதுவும் கட்சியை கரைத்து விட முடியாது.

    அதேசமயம், ஒவ்வொரு மாவட்டத்திலும் மா.செ. பதவிக்குத் தகுதியுள்ள 5 நபர்கள் இருக்கிறார்கள். தகுதியும், கட்சி நிர்வாகிகளின் ஆதரவும், மக்களிடம் நெருங்கிய தொடர்பும் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் தகுதியும் திறமையும் கொண்ட 5 நபர்கள் அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் இல்லை. அப்படியிருக்கும் போது கட்சி கரைகிறது, காணாமல் போகிறது என ஏன் விரக்தியாகப் பேசுகிறீர்கள்? இனி ஒரு தேர்தல் வரும் போது ஆட்சியும் அதிகாரமும் அதிமுக பக்கம் தான். விரைவில் தேர்தல் வருவதற்கான சூழல் கள் இருக்கிறது. கவலைப்படாமல் இருங்கள்; தலைமை சொல்லும் பணிகளை செவ்வனே செய்யுங்கள். எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று நிர்வாகிகளின் சந்தேகத்திற்கும் கவலைக்கும் பதில் தந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Why is Edappadi Palanisamy angry on AIADMK leaders as they are jumping to Vijay