பாட்டி கரெக்ட்டா விஜய் ஃபிரேமுக்குள் எப்படி வந்தாங்க?.. தண்ட செலவு இதெல்லாம்.. 10 லட்சம் கோடி கடன்

  • சென்னை: மேட்டூர் அணை திறப்பு விழாவிற்கு வெறும் 3000 கன அடி நீரைத் திறக்கத் தனி விமானத்தில் செல்வதும், பட்டு வேட்டி மற்றும் பட்டு சட்டை அணிந்துகொண்டு 3000 காவல்துறை பாதுகாப்புடன் ரோட் ஷோ நடத்துவதும் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். முன்னாள் முதலமைச்சர்கள் எவ்வளவு எளிமையாகச் சென்று வந்த நிலையில், நேற்று நடந்ததெல்லாம் தண்ட செலவு" என்று மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அரசியல் களம் சேனலில் பேசியிருக்கும் கோட்டீஸ்வரன், "அரசியலுக்கு வந்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் தனது கட்சிக்காரர்களை அரவணைப்பதிலும் பொதுமக்களை அணுகுவதிலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் போன்ற மூத்த அரசியல் தலைவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார்.

    Advertisement

    விஜய் விசிட்

    விஜய் அடிமட்டத்திலிருந்து கிளைச் செயலாளராகப் போராடி வந்தவர் கிடையாது. அவர் ஒரு பிரீமியர் பிராண்ட்! கட்சிக்காரர்களுக்கு எளிதில் காட்சி தருவதில்லை, அவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை, தொண்டர்களை திரை போட்டு அடைத்து வைக்கும் தனித்துவமான அரசியல் பாணியை பின்பற்றுகிறார்.

    மேட்டூர் அணை திறப்பு விழாவிற்கு வெறும் 3000 கன அடி நீரைத் திறக்கத் தனி விமானத்தில் செல்வதும், பட்டு வேட்டி மற்றும் பட்டு சட்டை அணிந்துகொண்டு 3000 காவல்துறை பாதுகாப்புடன் ரோட் ஷோ நடத்துவதும் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். முன்னாள் முதலமைச்சர்கள் எவ்வளவு எளிமையாகச் சென்று வந்தனர்!

    Advertisement

    இதெல்லாம் தண்ட செலவு

    இதெல்லாம் தண்ட செலவு, 10 லட்சம் கோடி கடன் என்று சொல்லிவிட்டு, எதுக்கு இவ்வளவு செலவு பண்றீங்க? அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும்.. முன்னாள் முதலமைச்சர்கள் இதையெல்ம் எளிமையாக சென்று வந்து செயல்படுத்தினார்கள்.. எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வை இவ்வளவு ஆடம்பரமாக மாற்றுவது தேவையில்லாத வீண் செலவு..

    அதேசமயம் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய அளவில் இளைஞர்கள் அவரைப் பிரதமராக எதிர்பார்ப்பதை மறந்துவிடக் கூடாது.

    பாட்டிம்மாக்கு கண்ணாடி

    இதற்கு நடுவில் வழியில் நின்ற பாட்டிக்கு விஜய் தனது கண்ணாடியைக் கொடுத்ததை சோசியல் மீடியாவில் பெரிதுபடுத்திப் பேசுகிறார்கள்.. அந்தப் பாட்டி அந்தக் கண்ணாடியை ஏலம் விட்டால் அந்தப் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு அது உதவியாக இருக்கும். திடீர் விசிட்டுகள் மற்றும் ரீல்ஸ்களை உருவாக்கும்

    Advertisement

    எங்கியோ ஒரு பாட்டிம்மாவை கட்டிப்பிடித்து ஒன்றரை லட்சம் கண்ணாடி தருகிறார்.. காலா படத்தில் கியாரே செட்டிங்கா?ன்னு ரஜினி சார் கேட்பது நினைவுக்கு வருகிறது.. பாட்டியை முதலமைச்சர் சந்தித்து சந்தோஷம்தான்.. ஆனால், இதே சென்னையிலேயே எத்தனையோ சகோதரிகள் தூய்மை பணியாளர்களாக கஷ்டத்தில் இருக்காங்களே? அவர்களுக்கும் இதேபோல சந்திக்கும் வாய்ப்பை தந்து முதல்வர் உதவினால் நல்லா இருக்கும்..

    வழக்கமாக தெருமுனை, சாலைகளில் விஜய் வந்து நின்றாலே, காவல்துறை குறுக்கு மறுக்குமாக ஓடுவார்கள்.. கருப்பு பூனைகள் ஓடுவார்கள்.. கட்சிக்காரர்கள் சுற்றிலும் இருப்பார்கள்..

    ஆனால், நேற்று பாட்டிம்மா நடந்து வரும்போது மட்டும் ஃபிரேம் எப்படி இடையூறே இல்லாமல் வருகிறது? குறுக்கே தொண்டர்கள், ரசிகர்கள், காவல்துறை யாருமே வரலியா? அங்கே திடீர்னு எப்படி ஒரு முதலமைச்சர் வர முடியும்?

    Advertisement

    சர்ப்ரைஸ் விசிட், திடீர் விஜயம் என்கிறார்கள்.. அப்படியானால் ஒரு முதலமைச்சர் ஒரு இடத்துக்கு செல்கிறார்கள் என்றால், அங்கே பாதுகாப்பு இருக்கா இல்லையா? அச்சுறுத்தல் அங்கே ஏதாவது உள்ளதா என்றெல்லாம் பார்க்க மாட்டார்களா?

    Z+ செக்யூரிட்டியில் இருந்துமா இப்படி?

    Z+ செக்யூரிட்டியில் இருந்துமா இப்படி? பாதுகாப்பு இருக்கா இல்லையா என தெரியாமல் எதுக்கு அங்கே திடீர்னு போறீங்க? திடீர் செல்ஃபி எடுக்கிறார், ஆனால் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பை மட்டும் விஜய் நடத்துவதில்லையே ஏன்?

    கேரளா போன்ற மாநிலங்களில் அமைச்சரும் பத்திரிகையாளரும் சமதளத்தில் உட்கார்ந்து துணிச்சலாகக் கேள்வி கேட்கிறார்கள்.. ஆனால், இங்குள்ளவர்கள் கேள்வி கேட்பதை விடுத்து பின்னாடியே ஓடிச் சென்று செல்பி எடுப்பதில் குறியாக உள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு பணமும் சொத்தும் முக்கியமல்ல, அவர்களின் கவுரவமும் சுயமரியாதையும்தான் முதன்மையானது.

    English Summary

    Why Is Grandma Suddenly in the Picture? Vijay’s Frame Has Everyone Talking.. ₹10 Lakh Crore Debt!