ஊர்ல எல்லாரும் திமுகவை காப்பியடிச்சு பாஸ் ஆகறாங்க! நாம் மட்டும் பெயில் ஆகிருக்கோம்.. நெட்டிசன்

  • சென்னை: தமிழ்நாடு பாணியிலேயே, கேரளாவில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் சதீஷன் (காங்கிரஸ் அரசு) அறிவித்துள்ளார். இந்நிலையில் ஊர்ல எல்லாரும் திமுகவை காப்பியடிச்சு பாஸ் ஆகறாங்க! நாம் மட்டும் பெயில் ஆகிருக்கோம் என்று தேர்தல் தோல்வியை திமுக ஆதரவாளர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 2021 காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது (இந்த திட்டம் தலைநகர் டெல்லியில் 2019ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் முதலில் அறிமுகம் ஆனது). அதேபோல் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமும் திமுக ஆட்சியில் தான் அமலுக்கு வந்தது. அதேபோல் அரசு பள்ளியில் படித்து முடித்து கல்லூரியில் பயிலும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டமும் அமலுக்கு வந்தது.

    Advertisement

    தமிழ்நாட்டை தொடர்ந்து தேர்தல் நடந்த கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இதே மாடலை காப்பி அடித்து அப்படியே கொண்டு சென்று, காங்கிரஸ் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் பாஜகவும் இதே பாணியில் தான் வென்றது. இப்போது எங்கு தேர்தல் நடந்தாலும் இந்த வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் மறப்பது இல்லை... அந்த அளவிற்கு முக்கியமானதாக மாறிவிட்டது.

    இந்த சூழலில் தமிழ்நாடு பாணியிலேயே, கேரளாவில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் ஜூன் 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் சதீஷன் (காங்கிரஸ் அரசு) அறிவித்துள்ளார். . இந்நிலையில் ஊர்ல எல்லாரும் திமுகவை காப்பியடிச்சு பாஸ் ஆகறாங்க! நாம் மட்டும் பெயில் ஆகிருக்கோம் என்று தேர்தல் தோல்வியை திமுக ஆதரவாளர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்த திமுக ஆதரவாளர் ஒருவர், தமிழ்நாடு இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. ஸ்டாலின் செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்து பலருக்கு முழுமையான விழிப்புணர்வு இல்லை. மகன்/மகளின் பேச்சை நம்பி தவெகவிற்கு வாக்களித்தனர். திமுக மீண்டும் வலுவாக திரும்பி வரும் என்றார்.

    இன்னொரு திமுக நெட்டிசன் கூறுகையில், ஆசிரியர்கள் ஏற்றி விடும் ஏணிகளே. ஏறியவர்கள் மேலே போவார்கள். அதைத்தானே ஆசிரியரும் விரும்புவார். அந்த வகையில் வரலாறும் பெருமையும் ஆசிரியருக்கு அதாவது ஏணிக்கு உரியது. இது திமுக தன்னைப் புதுப்பித்துக் கொள்ளக் கொடுக்கப்பட்டிருக்கும் காலம். தனித்துவமிக்க ஸ்டாலின் நிச்சயம் அதை செய்வார் என்றார்.

    Advertisement

    மூன்றாவது ஒரு திமுக நெட்டிசன் கூறுகையில், பொன் முட்டை இடும் வாத்தை அறுத்து பார்த்த கதையாக பொதுமக்களின் பேராசை.. பெருநட்டம் மட்டுமல்ல, பேராபத்தையும் விளைவித்து விட்டது! என்றார்.

    English Summary

    Kerala's Cong govt (CM Satheeshwaran) mimics DMK's free bus scheme for women from June 15. A DMK fan quips: "Everyone copies DMK & passes exams, but we failed!" (referencing their recent poll loss).