தாலியை விற்றாவது வாங்குவார்களாம்! புதுச்சேரியில் ரூ.15000 ஏலம் போன 1.5 கிலோ மீன்களின் ராஜா புலாசா

  • சென்னை: ஆந்திர மக்களின் விருப்ப உணவாகவும், மீன்களின் ராஜா என்றும் போற்றப்படும் அரிய வகை புலாசா மீன் ஒன்று புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கி, பலருக்கும் ஆச்சரியத்தை தந்துவிட்டது.. வெறும் 1.5 கிலோ எடையே கொண்ட இந்த மீன், கரைக்கு வந்த சில நிமிடங்களிலேயே போட்டி போட்டுக்கொண்டு ரூ.15 ஆயிரம் ஏலத்தில் வந்து நின்றது அதைவிட ஆச்சரியத்தை தந்துள்ளது.. அப்படியென்ன சிறப்பு இந்த மீனில்? எங்கே எப்போது கிடைக்கும் இந்த "ராஜா" மீன்?

    Advertisement

    புலாசா மீன் (Hilsa / Pulasa) பார்ப்பதற்கு வெள்ளி போல பளபளக்கும் உடலமைப்புடனும், கூர்மையான தலையுடனும், தட்டையான உடலுடனும் காணப்படும்.. இந்த ருசி அபாரமாக இருக்கும்.. நிறைய மருத்துவ குணம் கொண்ட மீன்களில் இதுவும் ஒன்றாகும்.

    Advertisement

    குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கேற்ற ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இந்த மீனில் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன.

    புலாசா மீன் நன்மைகள்

    இந்த மீனிலுள்ள புரோட்டீன், வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் தாது உப்புகள் எலும்புகளின் பலத்திற்கும், கண் பார்வைக்கும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன

    இந்த மீன் முக்கியமாக ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி நதி மற்றும் அது வங்காள விரிகுடாக் கடலில் சங்கமிக்கும் முகத்துவாரப் பகுதிகளில் மட்டுமே புலாசா மீன்கள் காணப்படும்..

    Advertisement

    குறிப்பாக பருவகாலத்தில் அதாவது ஆடி-ஆவணி மாத மழைக்காலத்தில் கிடைக்கிறது. கடலில் இருந்து நதியை நோக்கி இனப்பெருக்கத்திற்காக இந்த புலாசா மீன்கள் எதிர்நீச்சலடித்து வரும்போது, இதை மீனவர்கள் பிடிக்கிறார்கள்.. இதன் அரிதான தன்மையினாலும், அரிய சுவையினாலும், இது அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு உயர்தர மீன் வகையாகும்.

    ஆந்திராவில் ராஜா மீன்

    சமீபத்தில்கூட, ஆந்திராவில் பெய்து வந்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.. அப்போது ஏனாம் வழியாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்றில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதால், ஏராளமான மீனவர்கள் மீன் பிடித்தனர்.. அப்போது ராஜிவ் என்பவர் வீசிய வலையில் அரிய வகை புலாசா மீன் கிடைத்தது.

    Advertisement

    பருவமழை காலங்களில் இன பெருக்கம் செய்ய, இந்த மீன்கள் கடலில் இருந்து ஆற்றிற்கு இடம் பெயர்வது வழக்கம். அதிக சுவை மற்றும் புரதசத்து மிக்க இந்த மீனை ஏலம் எடுப்பதில் அப்போதும் போட்டி ஏற்பட்டது.1.8 கிலோ எடை கொண்ட இந்த மீனை பொன்ன மண்ட ரத்தினம் என்பவர் ரூ.22 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்திருந்தார்.. கடந்த வருடம் பிடிப்பட்ட புலாசா மீன்களில், இந்த மீன் தான் அதிகபட்ச விலைக்கு ஏலம் போனது.

    புதுச்சேரி கடலில் அரிய மீன்

    இப்போதும் ஒரு அரிய புலாசா மீன் கிடைத்துள்ளது.. புதுச்சேரி கடற்பகுதியில் உள்ளூர் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றிருக்கிறார்கள்.. அப்போது ஒன்றரை கிலோ எடையுள்ள புலாசா மீன் ஒன்று சிக்கியுள்ளது.. அரியவகை மீன் கிடைத்துள்ளது என்ற தகவல் பரவியதுமே உடனே இதை ஏலம் விற்க முடிவு செய்தனர்.. கரைக்கு புலாசா மீனை கொண்டு வந்ததுமே, பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஏலத் தொகையை உயர்த்தி கேட்டனர்.. இறுதியில் வெறும் ஒன்றரை கிலோ எடையுள்ள மீன், 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

    Advertisement

    வழக்கமாக நூறு கிலோ எடையுள்ள மீன்கள்தான் இந்த அளவுக்கு ஏலம் போகும்.. வெறும் ஒன்றரை கிலோவுக்கு இப்படியொரு விலையா? என்று பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர்..

    15 ஆயிரத்துக்கு ஏலம் போன மீன்

    கடல் நீரிலிருந்து நதி நீரை நோக்கி இனப்பெருக்கத்திற்காக எதிர்நீச்சலடித்து வரும் இந்த புலாசா மீன்கள், மிகவும் அரிதாகவே மீனவர்களின் வலையில் சிக்குபவை ஆகும்.

    அளப்பரிய சுவையும், உடலுக்கு அளப்பற்ற மருத்துவ நன்மைகளையும் வாரி வழங்கும் இந்த மீன் பிடிபடும் போதெல்லாம், அதன் எடையைப் பொறுத்து போட்டுக்கொண்டு மீன் பிரியவர்கள் வாங்கி செல்வார்கள்.. அந்த வகையில் நேற்றைய தினம், மீனவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட மழையை பொழிந்துள்ளது.

    Advertisement

    இத்தனை சிறப்பு வாய்ந்த மீன் என்பதால்தான், இதனை ஆந்திர மக்கள் "மீன்களின் ராஜா" என்று அழைக்கிறார்கள். இதை வாங்கி மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் வழக்கமும் ஆந்திராவில் உள்ளதாம்.. அவ்வளவு ஏன்? புஸ்டேலு ஆமினா புலாசா தின்னிலி அதாவது தாலியை விற்றாவது புலாசா மீனை வாங்கித் தின்றுவிடு என்று ஆந்திராவில் ஒரு பழமொழியே உள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மீனின் மவுசை--!!!

    English Summary

    Why Is Pulasa Called the King of Fish? A 1.5 Kg Pulasa Fish Sells for ₹15,000 in Puducherry