செங்கோட்டையனுக்கு அவசரத்தை பாருங்க.. ஆமா, அண்ணாமலை குறி வைப்பது இவரையா? திமுகவுக்கு 2 சிக்கல் போல

  • சென்னை: தமிழக அரசியல் களம், திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தாண்டி புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. தவெக, திமுக, அதிமுக போன்றவற்றுடன் அண்ணாமலையின் புதிய இயக்கமும் களத்தில் இறங்கியுள்ளதால், தமிழக அரசியல் பலமுனைப் போட்டியாக மாறியிருக்கிறது. இந்த சூழலில், அண்ணாமலையின் வரவு அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்க போகிறது? அண்ணாமலையின் இயக்கம் யாரை குறி வைத்து பணியாற்ற போகிறது? போன்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.

    Advertisement

    சட்டமன்ற தேர்தல் முடிந்தும்கூட, தமிழக அரசியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.. அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தையே இந்த தேர்தல் முடிவு ஆட்டிப்படைத்துவிட்டது.

    Advertisement

    திமுக, அதிமுக என்று மாறி மாறிப் பார்த்த மக்களுக்கு, புதிதாக வந்த தவெக கைகொடுத்தது... இந்த மாற்றத்தையே திராவிட கட்சிகளால் ஜீரணிக்க முடியாத நிலையில், அண்ணாமலை தன் பங்குக்கு களமிறங்கி உள்ளார்.. பொள்ளாச்சியில் நடத்திய "வீ தி லீடர்ஸ்" மாநாடு, அடுத்தகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

    அண்ணாமலை குறி வைப்பது இவரையா

    அண்ணாமலையின் இந்த புதிய முயற்சி யாரை பாதிக்கும்? ஆளுங்கட்சியான தவெகவுக்கா? அல்லது எதிர்க்கட்சியான திமுகவுக்கா? என்பதுதான் இப்போது எல்லா இடங்களிலும் பேச்சாக உள்ளது.. ஆனால் மாநாட்டில் அண்ணாமலை, தவெகவை பெரிதாக குறை சொல்லவில்லை.. குடும்ப அரசியல் இல்லை என்று பேசி திமுகவையே குறிவைத்தார்.

    Advertisement

    அதாவது தவெகவின் வாக்குகளை உடைப்பதை விட, திமுக மற்றும் அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுக்கவே அண்ணாமலை காய் நகர்த்துகிறாரோ என்ற சந்தேகம் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளது..

    ஆனால் இந்த விஷயத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கவலையே படவில்லை. தவெகவுக்கு இளைஞர்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் ஆதரவு தளபதி போல உறுதியாக இருக்கிறது. அண்ணாமலையின் பாதை வேறு, எங்கள் பாதை வேறு என்று மூத்த தலைவர் செங்கோட்டையன் பேசுகிறார்.

    திமுகவுக்கு செக்

    எனினும், அண்ணாமலை மட்டும், "2026ல் 1.68 கோடி பேர் வாக்களித்து விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் முதல்முறை அமைச்சர்கள். செங்கோட்டையனை தவிர. நிர்வாகம் புதிது. தடுமாற்றம் இருக்கும். அவர்களை கைத்தூக்கி விட தான் வேண்டும்" என்று மென்மையாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    இதை அண்ணாமலை முதிர்ச்சியாகப் பேசுகிறாரா அல்லது எதிர்காலக் கூட்டணிக்கு ஒரு கதவைத் திறந்து வைக்கிறாரா என்பது தெரியவில்லை.. இது போகப் போகத்தான் தெரியும்.

    பாஜகவின் B டீம்

    அதேபோல பாஜகவின் B டீம் என்ற தங்களை விமர்சிப்பதை அண்ணாமலை அறவே மறுத்துவிட்டார். தான் ஒரு தேசியவாதி என்றும், சாதி, மதங்களை வீட்டுக்குள்ளேயே வைத்துவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைப்பதே தனது லட்சியம் என்றும் சொல்லியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு, அரசியல் களம் இனி வளர்ச்சி சார்ந்ததாக மாறும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

    ஆக, 2031 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தியும், திமுகவின் குடும்ப அரசியல் விவகாரத்தை வைத்துதான், அண்ணாமலை தன்னுடைய இந்த வியூகத்தை துவங்கியிருப்பதாக தெரிகிறது.. அண்ணாமலையின் இந்த வியூகம், அவரது தொண்டர்கள் மட்டுமல்லாமல், நடுநிலை வாக்காளர்கள் மத்தியிலும் நிச்சயம் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    Advertisement

    திமுக என்ன செய்ய போகிறது

    ஆனால் இதை திமுக எப்படி கையாள போகிறது என்று தெரியவில்லை.. ஏற்கனவே தவெகவை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளபோது, இதில் அண்ணாமலையையும் ஹேண்டில் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது..

    மொத்தத்தில் அரசியல் களம் முன்பை விட இப்போது முழுமையாக மாறிவிட்டது. திமுக, அதிமுக என்ற நிலை மாறி, தற்போது தவெக மற்றும் அண்ணாமலையின் புதிய அமைப்பு என களம் பலமுனைப் போட்டியாக மாறியிருக்கிறது.

    இளைஞர்களை ஈர்க்கும் அண்ணாமலை, ஆட்சியிலுள்ள தவெக மற்றும் பாரம்பரியமிக்க திமுக ஆகிய சக்திகளுக்கு இடையே நிலவும் இந்த போட்டி, தமிழக அரசியலின் போக்கை வரும் காலங்களில் மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Is Annamalai Targeting the DMK? A New Political Challenge as TVK Makes a Great Escape