டெல்லி நீட் போராட்டம் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாதது ஏன்? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

  • டெல்லி: டெல்லியில் 'காக்கரோச் ஜனதா கட்சி' மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து நடத்தி வரும்பேரணியும், அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களும் இந்திய அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளன.

    Advertisement

    நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் டெல்லி வீதிகளில் திரண்டு போராடி வருகின்றனர்.

    Advertisement

    ஆனால், நீட் தேர்வை ஆரம்பம் முதலே மிகக் கடுமையாக எதிர்த்து வரும் தமிழ்நாட்டில், டெல்லியில் வெடித்துள்ள இந்த போராட்டங்களின் தாக்கம் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. "நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தமிழ்நாடு, டெல்லியில் இவ்வளவு பெரிய போராட்டம் நடக்கும்போது ஏன் அமைதியாக இருக்கிறது?" என்ற கேள்வி தேசிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.

    இந்த அமைதிக்கு பின்னால் அலட்சியம் எதுவுமில்லை.. மாறாகத் தெளிவான அரசியல், கொள்கை மற்றும் வரலாற்று ரீதியான மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன.

    Advertisement

    நாம் தனித்து நின்றபோது வடஇந்தியா மௌனமாக இருந்தது

    தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வுக்கு எதிராகத் தனி ஒரு மாநிலமாக நின்று போராடி வருகிறது. அனிதா தொடங்கிப் பல ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயிர்களைப் பலிகொடுத்து, வீதிகளில் இறங்கித் தமிழக மக்கள் கதறியபோதெல்லாம், வடமாநிலங்களோ அல்லது தேசிய ஊடகங்களோ தமிழ்நாட்டின் குரலைக் காதுகொடுத்துக் கேட்கக்கூடத் தயாராக இல்லை.

    அன்று தமிழகத்தின் கண்ணீரும் போராட்டங்களும் மாநிலத்தின் சுயநலம் என்று கூறிப் புறக்கணிக்கப்பட்டன.

    அன்று தமிழகம் தனித்து நின்று நீட் தேர்வின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டியபோது கைகொடுக்காத தேசிய அமைப்புகளின் போராட்டத்திற்கு, இன்றைக்குத் தங்களுக்குப் பாதிப்பு வந்தவுடன் டெல்லியில் திரளும்போது தமிழ்நாடு உடனடியாக ஆதரவுக்கரங்களை நீட்டத் தயங்குவதில் வியப்பொன்றுமில்லை.

    Advertisement

    அடிப்படை கோரிக்கையில் உள்ள வேறுபாடு

    டெல்லியில் CJP மற்றும் வடஇந்திய மாணவர் அமைப்புகள் முன்வைக்கும் முதன்மையான கோரிக்கைகள்:

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
    தேர்வு முறையில் தற்காலிகச் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

    ஆனால், தமிழ்நாட்டின் கொள்கை நிலைப்பாடு முற்றிலும் வேறுபட்டது:

    ஒரு அமைச்சரின் ராஜினாமாவோ அல்லது தேர்வு நடத்தும் முகமையை மாற்றுவதோ தற்காலிகமான தீர்வு மட்டுமே. நீட் என்ற நுழைவுத்தேர்வு அமைப்பே சமூக நீதிக்கு எதிரானது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பது.

    எனவே, நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து, மாநிலங்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழகத்தின் கோரிக்கையாகும்.

    Advertisement

    வெறும் தற்காலிகச் சீர்திருத்தத்தையோ அல்லது ராஜினாமாவையோ கோரும் ஒரு போராட்டத்திற்குள் தமிழ்நாடு முழுமையாக இணைய முடியாது.

    CJP இயக்கத்திற்குத் தமிழகத்தில் கட்டமைப்போ, தலைமையோ இல்லை

    டெல்லியில் உருவான 'காக்கரோச் ஜன்டா கட்சி' (CJP) என்ற இயக்கம், வடஇந்தியாவில் சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவியது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் CJP என்ற அமைப்பிற்கு வலுவான தலைமையோ, மக்கள் தொடர்போ அல்லது அமைப்புக் கட்டமைப்போ கிடையாது.

    தமிழகத்தில் நீட் எதிர்ப்பு என்பது ஏற்கனவே மாநில அரசு, அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட போராட்டமாகும். எனவே, வடஇந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு புதிய இயக்கத்தால் தமிழக மாணவர்களைத் திரட்ட முடிவதில்லை.

    Advertisement

    தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்பு என்பது வெறும் ஒரு வினாத்தாள் கசிவு சார்ந்த போராட்டம் அல்ல.. அது பல ஆண்டுகால சமூக நீதி மற்றும் மாநில உரிமை சார்ந்த போராட்டம். டெல்லி போராட்டக்காரர்கள் இன்றைக்குத் கேட்கும் கேள்விகளைத் தமிழ்நாடு பத்தாண்டுகளுக்கு முன்பே கேட்டுவிட்டது.

    வடமாநிலப் போராட்டக்காரர்கள் வெறும் அமைச்சரின் ராஜினாமாவோடு நின்றுவிடாமல், நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதே உண்மையான தீர்வு என்பதை உணரும் வரை, தமிழ்நாட்டின் தனித்துவமான குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்!

    English Summary

    Why is Tamil Nadu not protesting against against NEET exam paper leak? Real reason