சென்னை: தமிழக முதல்வர் விஜய் மற்றும் தவெகவை காக்ரோச் ஜனதா பார்ட்டி தீவிரமாக ப்ரோமோட் செய்து வருகிறது. இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இளைஞர்களிடம் கவனம் பெற்றுள்ள புதிய கட்சியான 'காக்ரோச் ஜனதா கட்சி' தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் பொது மேடைகளில் முதல்வர் விஜய்யை மிகத் தீவிரமாக விளம்பரப்படுத்தி, அவருக்கு ஆதரவு அளித்து வருகிறது.
அரசியல் வட்டாரங்களில் இந்த நகர்வு மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியுள்ளது. "ஏன் ஒரு புதிய தேசிய கட்சி, தமிழகத்தின் ஒரு புதிய முதல்வரை இவ்வளவு தூரம் கொண்டாடி தீர்க்க வேண்டும்?" என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் அரசியல் கணக்குகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. காக்ரோச் ஜனதா கட்சி தங்களின் பெரும்பாலான பதிவுகளில் முதல்வர் விஜய்யை முன்னிறுத்துவதற்கு மிக முக்கியமான காரணம், வரவிருக்கும் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் தான் என்று அரசியல் வல்லுநர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தம் சுமார் 126 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. டெல்லியில் ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கு இந்த 126 தொகுதிகளும் மிக முக்கியமானவை என்பதை சிஜேபி நன்கு உணர்ந்துள்ளது. டெல்லி அதிகாரத்தை தீர்மானிக்கும் இந்த தென்னகத் தொகுதிகளில், முதல்வர் விஜய்யின் செல்வாக்கும் அவரது தவெக கட்சியின் பங்களிப்பும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று காக்ரோச் ஜனதா கட்சி நம்புகிறது. நடிகராக இருந்து முதலமைச்சராக உயர்ந்த விஜய் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும், வாக்கு வங்கியும் உள்ளது என்பது ரகசியமல்ல. கேரளாவில் விஜய்யின் திரைப்படங்கள் மலையாள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் சாதனை படைப்பவை. அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அசாத்தியமானது. பெங்களூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தமிழ் மக்கள் மட்டுமின்றி, கன்னட இளைஞர்கள் மத்தியிலும் விஜய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தெலுங்கு மாநிலங்களிலும் விஜய்யின் படங்களுக்குப் பெரும் வரவேற்பு இருப்பதால், அங்கும் அவரது அரசியல் நகர்வுகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த அசாத்திய மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, 2029 தேர்தலில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற காக்ரோச் ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தங்களின் பலத்தை நிரூபித்துள்ள தவெகவை அண்டை மாநிலங்களிலும் ஒரு முக்கிய சக்தியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்த ஆரம்பக்கட்ட விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. சிஜேபி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் விஜய்யை தொடர்ந்து பாராட்டுவதன் மூலம், அவரது ரசிகர்களின் ஆதரவையும், ஒட்டுமொத்த தென்னிந்திய இளைஞர்களின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்க்க முடியும் என்று கணக்கு போடுகிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டிற்கு வெளியே கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவில் தங்களுக்குத் தேவைப்படும்போது தவெக கட்சியின் ஆதரவைக் கோருவதற்காகவே, இப்பொழுதிருந்தே முதல்வர் விஜய்யை காக்ரோச் ஜனதா கட்சி மிகத் தீவிரமாக புரமோட் செய்து வருகிறது. 2029-ல் டெல்லியை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் இந்த தென்னக மெகா கூட்டணி வியூகம், இந்திய அரசியலில் இன்னும் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.126 தென்னிந்திய நாடாளுமன்றத் தொகுதிகள்
விஜய்யின் அசாத்திய செல்வாக்கு
காக்ரோச் ஜனதா கட்சியின் அரசியல்