டெல்லியே யோசிக்கிற அளவிற்கு.. விஜிலென்ஸ் ஆக்சன் இருக்கணும்.. அன்பில், நேரு கேசில் விஜய் கறார்!

  • சென்னை: திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட் டதையடுத்து, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச் சருமான கே.என்.நேரு தொடர்புடைய வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ரெய்டு, திமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பரபரப் பை ஏற்படுத்தியது. கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ரெய்டுக்கு வெளிவராத சில பின்னணிகள் இருக்கி றது என்கிறார்கள் மேல்மட்ட நம்முடைய சோர்ஸ்கள்.

    Advertisement

    "கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் முந்தைய திமுக ஆட்சியின் போது தமிழக டிஜிபியிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை, கே.என்.நேருவுக்கு எதிராக ஏற்கனவே ரெய்டு நடத்தி முடித்து விட்டது. தற்போது நடந்திருப்பது இரண்டாவது முறை.

    Advertisement

    திருச்சி இடைத்தேர்தலின் போது, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேசின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதால்தான் அவர்களை குறி வைத்து ஆக்சன் எடுக்கிறது தவெக அரசு என்று மீடியாக்கள் கட்டமைக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை ; அவர்கள் இருவரையும் குறி வைத்ததற்கு வேறு காரணங் கள் இருக்கிறது. குறிப்பாக, கே.என்.நேரு மீது பாய்ந்த ஆக்சனுக்கு முக்கிய பின்னணி இருக்கிறது" என்கிறார்கள் மேலிட சோர்ஸ்கள்.

    நம்மிடம் அந்த பின்னணியை பகிர்ந்து கொண்ட அவர்கள், "திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்றே தெரியாத சூழலில், அதனை மையப்படுத்தி திமுக மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவெகவுக்கு என்ன பிரயோஜனம்? அதனால், இருவர் மீதும் எடுக்கப்படும் ஆக்சன்களுக்கு எதிரான பின்னணி வேறு ரகம்.

    Advertisement

    கே.என். நேருவுக்கு எதிராக திமுக ஆட்சியில் அமலாக்கத்துறைக் கொடுத்த ஆதாரங் களைக் கடந்து, லஞ்ச ஒழிப்புத்துறை முதல் முறை நடத்திய ரெய்டின் போதே எந்த ஆதார ஆவணங்களும் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது நடந்திருக்கும் ரெய்டிலும் நேருவை சிக்க வைக்கிற அளவு க்கு ஆவண ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றவில்லை.

    ஏனெனில், எப்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததோ, அப்போதே, நேரு சுதாரி த்துக்கொண்டார். நேருவின் சகோதர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த விசயத்தில் கில்லாடிகள். முன்னெச்சரிக்கையாக திட்டமிடுவதில் அவர்களை மிஞ்ச யாரும் கிடையாது. அதனால், நிறைய ஆதாரங்கள் அப்போதே அழிக்கப்பட்டுவிட்டன. ரெய்டுக்கு வாங்க ; ஆதாரங்களை அள்ளிக் கொண்டுப் போங்க என்று எந்த ஒரு திமுக தலைவர்களும் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். இருந்ததும் இல்லை.

    Advertisement

    அந்த வகையில், போலீஸ் டிஜிபிக்கு ஆதாரப்பூர்வமாக அமலாக்கத் துறை கொடுத்ததைத் தவிர வேறு எந்த ஆதாரங்களும் பெரிதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கிடைக்கவில்லை.

    அப்படியானால், இந்த இரண்டாவது முறை ரெய்டுக்கு காரணம் என்ன? அது வேறு ஒன்றுமில்லை. நேருவின் லூஸ் டாக் தான். அதாவது, ஆட்சியில் இருப்பவர்கள் மீது ஊழல் வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து அதனை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று தண்டனை பெற்றுத்தர வேண்டுமானால், சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அதனடிப்படையில், அமலாக்க துறையும் சட்டரீதியாக குறிப்பிட்ட வழக்கில் தலையிட முடியும்.

    Advertisement
    Vijay sad: ஜோ ஜோ என அழைத்த பெரியம்மா அமல் காலமானார்! உடைந்து நீலாங்கரை ஹோமிற்கு சென்ற விஜய்

    அதனால்தான், பணி நியமன விவகாரத்தில் நேருவுக்கு எதிராக எங்க ளுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நேரு மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடுங்கள் என்று திமுக ஆட்சியின் போது டிஜிபியிடம் புகார் கொடுத்தது அமலாக்கத்துறை. ஆதாரங்களையும் இணைத்திருந்தது. திமுக ஆட்சியில் இந்த புகார் கிடப்பில் போடப்பட்டது ; எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திமுக ஆட்சி முடிந்து தவெக ஆட்சி அமைந்ததும், அதிமுக எம்.பி. இன்ப துரை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் படி கே.என். நேருவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த துறையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தானே அமலாக்கத்துறை யினர் திமுக ஆட்சியில் முயற்சி எடுத்தார்கள். அந்த முயற்சிக்கு, திமுக ஆட்சியில் பலன் கிடைக்கவில்லை. தவெக ஆட்சியில் பலன் கிடைத்தது.

    Advertisement

    அதனால், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பதால், நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை உடனடியாக களமிறங்கியிருக்க வேண்டாமா? ஆனால், அப்படி எந்த ஒரு ஆக்சனும் அமலாக்கத்துறையிடம் இல்லை. நேருவுக்கு எதிரான ஆதாரங்களுடன் அப்படியே அமைதியாகி விட்டது அமலாக்கத் துறை.

    இந்த நிலையில், தன்னை சந்திக்கும் முக்கியமான நபர்களிடமும் நேரு பேசும் போது, இயல்பாக அமலாக்கத்துறை தொடர்பான புகார் குறித்து பேச்சு எழுகிற போது, அதெல்லாம் சரியாய்டுச்சுப்பா... டெல்லியில் எல்லாம் முடிந்து விட்டது. அதனால் அமலாக்கத்துறை பத்தியெல்லாம் கவலை வேண்டாம் என பகிர்ந்துகொள்கிறார்.

    அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்துக்குள் நுழைய தடை? விஜய் அரசுக்கு எச்சரிக்கை

    இந்த விசயமெல்லாம் அன்பில் மகேசுக்கு தெரிய வருகிறது. அவர் தரப்பில் வெவ்வேறு இடங்களில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இந்த விசயம், உளவுத் துறைக்கும் தெரிய வந்த நிலையில், அதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். அதாவது, அமலாக்கத்துறையின் ஆக்சனை நேரு தரப்பில் மட்டுமடுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் எடுக்கப்பட்ட முயற்சியால் இது நடந்துள்ளது. சில வர்த்தகத் தொடர்புகளும் இதில் உள்ளன என்றெல் லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இதன்பிறகு, அமலாக்கத்துறை ஆக்சன் எடுக்கிறதா? இல்லையா? என்பது நமக்கு முக்கியமில்லை ; நம்மிடம் ஏற்கனவே இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கலாம். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது. லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக இயங்கலாம் என முதல்வர் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. சுருக்கமாக சொல்வ தானால், ஊழல்களுக்கு எதிராக ஆக்சன் எடுக்க தயங்க மாட்டோம் என சொல்லும் அமலாக்கத்துறையே யோசிக்கும் வகையில் தமிழக லஞ்ச ஒழிப்பு த்துறையின் ஆக்சன் இருக்கட்டும். இதை வைத்து டெல்லிக்கு யோசிக்கட்டும் என்கிற பின்னணியின் அடிப்படையில்தான் நேருவுக்கு எதிரான இந்த இரண்டாவது ரெய்டு. டெல்லியை சரிகட்டி விட்டோம் ; இனி பிரச்சனை இருக்காது என நேருவும் அவரது தரப்பும் பகிர்ந்துகொண்டதுதான் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது" என்று விரிவாக விவரிக்கிறார்கள்.

    “லைட்டை எரிய விட்டு டார்ச்சர்.. 4 கிலோ குறைந்த அன்பில் மகேஷ்”.. நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

    இதற்கிடையே, அன்பில் மகேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு, அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ். அப்போது, நேருவுக்கு எதிராக பல விசயங்களைச் சொன்ன மகேஷ், "அவரை உங்களால் நெருங்க முடியுமா? முடியாது. ஏன்னா... டெல்லியோடு நெருங்கிய வர்த்தகத் தொடர்பில் இருக்கி றார். எனக்கு எதிராக அரசக்குமாரை சொல்ல வைத்ததும் அவர்தான். இதை எல்லாம் உடைத்து வெளியே வருவேன்" என்று போலீஸ் விசாரணையில் அவர் சொன்னதாக போலீஸ் தரப்பில் உலாவி வருவதாகவும் தகவல்கள் கிடைக் கின்றன.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Why is Vijay keen on taking action against DMK Strongmen Anbil Mahesh and KN Nehru?