எடப்பாடிக்கு ஈகோ யுத்தம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அதிமுகவிற்கு ஒரு ஆசிட் டெஸ்ட்! ஏன்?

  • சென்னை: இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள், மற்ற கட்சிகளைவிட பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் மிக முக்கியமான அரசியல் கௌரவப் போராக மாறியுள்ளது. "எங்கள் கோட்டையை நாங்கள் மீட்டெடுப்போம்" என்ற முழக்கத்தோடு அதிமுக களமிறங்கியுள்ள இந்தத் தேர்தல், அக்கட்சியின் எதிர்காலத்திற்கு ஏன் வாழ்வா-சாவா போராட்டம் என்பதை எளிய முறையில் புரிந்துகொள்ளலாம்.

    Advertisement

    சொந்த தொகுதிகளைப் பறிகொடுத்த வலி: பின்னணி என்ன?

    கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றனர்:

    Advertisement

    மதுராந்தகம்: அதிமுகவின் கே. மரகதம் குமரவேல் சுமார் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    தாராபுரம்: அதிமுகவின் பி. சத்யபாமா சுமார் 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

    ஆனால், வெற்றி பெற்ற இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். தங்களுடைய இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதும், அதே தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடப்பதும் அதிமுக தலைமைக்கு விழுந்த மிகப்பெரிய அரசியல் அடியாகப் பார்க்கப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஏன் இது நேரடி சவால்?

    1. எடப்பாடி செல்வாக்கு:

    அதிமுகவில் வெற்றி பெற்றவர்கள் "தனிநபர் செல்வாக்கால் ஜெயித்தோம்" எனக் கூறி கட்சி மாறினர். ஆனால், "அவர்கள் ஜெயித்ததற்கு இரட்டை இலை சின்னமும், அதிமுகவின் தொண்டர் பலமுமே காரணம்" என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக எடப்பாடிக்கு இது ஈகோ ரீதியிலான யுத்தம்.,

    Advertisement

    2. கொங்கு மண்டலக் கோட்டை:

    குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் தொகுதி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பலம் கொங்கு மண்டலத்திலேயே வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிமுக வென்ற தொகுதியை மீண்டும் தக்கவைக்கத் தவறினால், அது அவரது சொந்த அரசியல் தளத்திற்கே பலவீனமாக அமையும்.

    3. கட்சியின் தலைமை ஆளுமை:

    அதிமுகவின் முழுமையான ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள்ள நிலையில், ஆளும் கட்சி மற்றும் பிற கட்சிகளின் கடுமையான போட்டியை மீறி இந்தத் தொகுதிகளை மீட்டெடுத்தால் மட்டுமே கட்சியின் கட்டுக்கோப்பும், அவரது தலைமையும் மேலும் வலுவடையும். முக்கியமாக அதிமுக வென்ற தொகுதியில் தவெக வென்றால் அது எடப்பாடிக்கு சிக்கலாகும் . கட்சியே அவரை விட்டு போகலாம். மேலும் பல எம்எல்ஏக்கள் இதை பார்த்து ராஜினாமா செய்யலாம். இதனால் அதிமுகவின் இருப்பே கேள்வி ஆகி உள்ளது.

    Advertisement

    தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு என்ன விளைவுகளைத் தரும்?

    நிலைமை 1: இரண்டு தொகுதிகளையும் அதிமுக மீட்டெடுத்தால்

    அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படும். கட்சி தாவியவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டார்கள் என்றும், அதிமுகவின் வாக்கு வங்கி அசைக்க முடியாதது என்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்படும். தற்போது அதிமுகவிடம் உள்ள 47 எம்எல்ஏக்கள் பலம் 49 ஆகும்.

    நிலைமை 2: ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றால்

    ஒரு இடத்தில் வெற்றி பெற்றாலும், அதிமுகவின் அடிப்படை பலம் களத்தில் நீடிக்கிறது என்பதை நிரூபிக்க முடியும். அது கட்சிக்குக் கௌரவமான சமரச வெற்றியாக அமையும்.தற்போது அதிமுகவிடம் உள்ள 47 எம்எல்ஏக்கள் பலம் 48 ஆகும்.

    Advertisement

    நிலைமை 3: இரண்டிலும் அதிமுக தோல்வியடைந்தால்

    ஏற்கனவே அதிமுக வசமிருந்த 2 தொகுதிகளையும் இழந்தால், அது தலைமைக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவாக அமையும். ஆளுங்கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்குவர். அதோடு மேலும் பல எம்எல்ஏக்கள் இதை பார்த்து ராஜினாமா செய்யலாம்.

    English Summary

    Why Madurantakam & Dharapuram Bypolls Are an Acid Test for Edappadi Palaniswami