சென்னை: சென்னை அம்பத்தூரில் சிங்கப்பூர் தரவு நிறுவனமான கேபிட்டல் லேண்ட் எனும் நிறுவனத்தை தொடங்கி வைத்த போது முதல்வர் விஜய்யும், சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யாங்கும் அன்னாசி பழத்தை உருட்டி விட்டனர். இது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூர் நாட்டின் கேபிட்டலேண்ட் எனும் நிறுவனம் சென்னை அம்பத்தூர் பட்டரைவாக்கம் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு 46 மெகாவாட் திறன் கொண்ட புதிய தரவு மையம் அமைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 4 ஏக்கரில் அமைந்துள்ளது. சென்னையில் ஐடி கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ரூ 5 ஆயிரம் கோடியில் 56 மெகாவாட் மின்சாரத்திறன் கொண்ட தரவு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4900 சர்வர் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட தரவு மையத்தில் சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யாங்குடன், முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார். அப்போது சிங்கப்பூர் பாரம்பரிய முறைப்படி, அன்னாசிப் பழத்தை உருட்டி விட்டு இந்த மையத்தை திறந்து வைத்தனர். இந்த நிறுவனம் பயன்பாட்டுக்கு வந்தால் 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். விழாவுக்கு வந்த விஜய்க்கும், சிங்கப்பூர் துணை பிரதமருக்கும் ஆளுக்கு ஒரு அன்னாசி பழம் கொடுக்கப்பட்டு அதை உருட்டி விட சொன்னது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். சிங்கப்பூர் நிறுவனத்தின் தொடக்க விழாக்கள் அல்லது புதிய அலுவலகத் திறப்பு விழாக்களின் போது அன்னாசி பழத்தை கொடுத்து அதை உருட்ட சொல்வது ஒரு பாரம்பரியமான கலாச்சார வழக்கமாகும். அதிர்ஷ்டம் அன்னாசி பழத்தை ஹோக்கியன் (Hokkien) மொழியில் ஓங் லாய் (Ong Lai) என அழைப்பார்கள். இந்த ஓங் லாய் என்ற பெயர் அதிர்ஷ்டம், செல்வத்தை பெருக்கும் என கருதப்படுகிறது. இதனால் அன்னாசி பழம், மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியாவில் புதிய வீடு, புதிய அலுவலகம், புதிய நிறுவனத்தை தொடங்கும் போது வாசலில் இருந்து உள்ளே, அன்னாசி பழத்தை உருட்டி விடுவது வழக்கம். அவ்வாறு உருட்டும் போது "ஹுவாட் அ" என குரல் எழுப்புவதும் வழக்கம். இதன் மூலம் புதிய தொடக்கம் எதுவாக இருந்தாலும் அது சிறப்பாகவும், லாபகரமானதாகவும் இருக்கும் என்பது ஐதீகம். இதனால்தான் சென்னை அம்பத்தூரில் உள்ள சிங்கப்பூர் நிறுவன தொடக்க விழாவில் முதல்வர் விஜய்யிடம் அன்னாசி பழத்தை கொடுத்து உருட்டி விடும் சடங்கு செய்யப்பட்டது. அது போல் சீனாவில் புதுவீடுகளுக்குள் நுழையும் போது அன்னாசி பழத்தை உருட்டுவார்களாம். அது போல் வீட்டின் தரை எங்கும் நாணயங்களை சிதறடித்து ஆரஞ்ச், மாதுளை என அதிர்ஷ்டம் தரும் பழங்களை உள்ளே கொண்டு செல்வதும் வழக்கமாக உள்ளது. ரஷ்யாவில் புதிய வீடு அல்லது அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பு ஒரு பூனையை அனுப்பி வைப்பார்களாம். இந்த பூனைகள் எதிர்மறை ஆற்றலை நீக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நாணயங்களை வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்களாம். இந்தியாவில் பசு- கன்று இந்தியாவில் புதிய வீட்டின் கிரகபிரவேசத்தின் போது பசுவுடன் சேர்த்து கன்றையும் அழைத்து செல்வது லட்சுமி கடாட்சம் என நம்பப்படுகிறது. இது போல் பல்வேறு நாடுகளில் அவரவர் நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.4900 சர்வர் ரேக்குகள்
ஓரடி முன்னால்.. ஈரடி பின்னால் போகும் தவெக அரசு! வளர்ச்சியில் பின்தங்கும் தமிழகம்! விஜய் செயலால் ஷாக்!
சிங்கப்பூர் துணை பிரதமர்
அன்னாசி பழம் ஏன்?
இபிஎஸ் முந்துவதற்குள் உடனே முடியுங்கள்! வேலுமணி - சிவி சண்முகத்தை விரட்டும் முதல்வர் விஜய்!
சிங்கப்பூர், மலேசியா
அம்பத்தூரில் சிங்கப்பூர் நிறுவனம்
சீனாவிலும் இதே பழக்கம்
ரஷ்யாவில் பூனை