Seeman: 5 சட்டசபை தொகுதிகளில் அம்பாசமுத்திரத்தை சீமான் தேர்வு செய்தது ஏன்? 2 காரணங்கள்தான்!

  • சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம், 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றார். சட்டப்படி ஒரு தொகுதியை மட்டுமே ஒரு உறுப்பினர் வைத்துக் கொள்ள முடியும் என்பதால் பெரம்பூரை வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து தவெகவுக்கு தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தேர்தல் முடிவுகள் வெளியான போது திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்ததாக குற்றம்சாட்டி அக்கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்கள பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    அதாவது மதுராந்தகம்- மரகதம் குமரவேல், தாராபுரம்- சத்யபாமா, பெருந்துறை- ஜெயக்குமார், அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா, விராலிமலை- சி. விஜயபாஸ்கர், கரூர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    திமுக ஒரு தீயசக்தி

    "திமுகவை எதிர்ப்பதற்காகவே எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். திமுகவை தீயசக்தி என்றே முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கூறி வந்தனர். அதையெல்லாம் மறந்துவிட்டு திமுகவுடன் எப்படி இணக்கமாக செல்ல முடியும்?" என்ற கேள்விகளை முன் வைத்து இந்த 6 பேரும் அதிமுகவில் இருந்து வெளியேறினர்.

    Advertisement

    ஆக மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம், தாராபுரத்தை தவிர்த்து மற்ற 5 தொகுதிகள் மீது நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த 2 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

    பெரிய வித்தியாசம் இல்லை

    இதில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்றவர்களே இந்த முறை தவெக சார்பில் போட்டியிட்டனர். மரகதமும், சத்யபாமாவும் வெற்றி கண்டிருந்தாலும் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெல்லவில்லை.

    அம்பை இடைத்தேர்தல்.. விஜய்க்கு எதிராக சீமான்? நேரம் எடுத்து கொள்ளும் ஸ்டாலின், எடப்பாடி.. பின்னணி!
    Advertisement

    அம்பையில் சீமான்

    இந்த நிலையில் மற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதில் அம்பாசமுத்திரத்தில் தானே போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

    எந்த சமூகத்தினருக்கு எத்தனை வாக்கு சதவீதம்?

    5 தொகுதிகளில் அவர் அம்பையை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சாமிநாதன், புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அம்பாசமுத்திரத்தில் நான் ஆய்வு செய்த வகையில் முக்குலத்தோர் வாக்குகள் 19 சதவீதம் இருக்கிறது.

    நாடார் சமூக வாக்குகள் ஒரு 15 சதவீதம் உள்ளது. பட்டியல் சமூக மக்களின் வாக்குகள் 28 சதவீதம் இருக்கும். இந்த தொகுதியை சீமான் தேர்வு செய்ததற்கு இரு காரணங்கள் உள்ளன.

    Advertisement

    முதல் காரணம்

    கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் அலையால் நாதகவின் வாக்கு சதவீதம் 4 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆனால் 234 தொகுதிகளில் அம்பாசமுத்திரத்தில் மட்டும் 7.8 சதவீத வாக்குகளை நாதக தக்க வைத்துக் கொண்டது.

    முகம் தெரியாத வேட்பாளர்

    எனவே இந்த தொகுதியில் முகம் தெரியாத நாதக வேட்பாளரை அறிவிப்பதற்கு பதிலாக தாமே போட்டியிட்டால் வாக்குகள் கூடும் என்பது சீமானின் கணக்கு. அதிலும் கடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினரின் பிரச்சாரங்கள், வேட்பாளர்கள் தேர்வு எடுபடாததால் இந்த முறை பொது வேட்பாளரை நிறுத்தி தவெகவின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பதுதான் பல்வேறு கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    Advertisement

    இரண்டாவது காரணம்

    அந்த வகையில் அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக திராவிட கட்சிகள் ஆதரித்தால் அவர் தவிர்க்க முடியாத போட்டியாளராகிவிடுவார். இதனால் நாதக கட்சியின் சரிவில் இருந்து கட்சியை மீட்கலாம் என்பதும் ஒரு கால்குலேஷன்.

    இசக்கி சுப்பையா

    எல்லாவற்றையும் விட அம்பையில் தனி செல்வாக்கை கொண்டிருக்கும் இசக்கி சுப்பையாவை சீமான் வெல்வாரா என ஊடகங்கள் எல்லாம் தலைப்பு செய்திகளாக பேசத் தொடங்கும். அப்போது சீமான் சிறிது காலத்திற்கு லைம் லைட்டிலேயே இருப்பார். இது அவரது கட்சியின் வருங்காலத்திற்கு பலத்தை கொடுக்கும்.

    இடைத்தேர்தல் ஆதரவை கூட்டணியாக பார்க்காதீங்க.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. சீமான் கொடுத்த பதில்!

    சீமான் கணக்கு

    ஆனால் சீமானின் கணக்கு சரியாக இருக்குமா என்றால் இல்லை! அதாவது திராவிட கட்சிகள், பொது வேட்பாளருக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதிலும் சீமானுக்கு நோ சொல்லிவிட வாய்ப்புள்ளது.

    ஏன் முடியாது?

    6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்ததே அதிமுகவும், திமுகவும் சேர்ந்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துதான்! அப்படியிருக்கும் போது அதிமுகவும் திமுகவும் சேர்ந்து எப்படி சீமானுக்கு பிரச்சாரம் செய்ய முடியும்?

    உதயநிதிக்கு பின்னடைவு

    ஒரு வேளை பொதுவேட்பாளராக்கப்பட்டு சீமான் சட்டசபைக்கு வந்துவிட்டால் அங்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதியின் புகழ் மங்கும். தற்போது சட்டசபையில் அத்தனை பேர் பேசினாலும் சவுமியா அன்புமணியின் பேச்சுக்கென ரசிகர் பட்டாளம் ஏற்பட்டுள்ளதோ, அது போல் பாயிண்ட் பாயிண்ட்டாக பேசும் சீமானுக்கு ரசிகர்கள் குவிந்துவிட்டால், உதயநிதியின் பேச்சை ரசிக்க ஆள் இல்லாமல் போய்விடும். இதை திமுகவும் விரும்பாது. எனவே தங்கள் புகழை மங்கடித்துவிட்டு சீமானை பொதுவேட்பாளராக்க திமுக ஒப்புக் கொள்ளாது என பத்திரிகையாளர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Do you know why NTK Seeman wants to contest in Ambasamudhram seat? as there are 5 seats to undergo by election. Here is his calculation which makes him to choose that.