TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக்

  • சென்னை: ''பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய்'' என டாஸ்மாக்கில் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி பாடல் பாடி தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஆட்சியை பிடித்தார். தவெக ஆட்சியை பிடித்தால் பாட்டிலுக்கு கூடுதலாக
    ரூ.10 வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று கூறினார். ஆனால் தற்போது வரை அமலாகவில்லை. இந்நிலையில் தான் டாஸ்மாக் சார்பில் தினந்தோறும் மற்றும் மாதந்தோறும் ஆகும் செலவு, லஞ்சம் வழங்குவது பற்றிய டேட்டாக்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தமிழக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது இதனை கையில் எடுத்து தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். திமுக தனது ஆட்சியில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்து ஊழல் செய்கிறது என்று விமர்சனம் செய்தார். அதோடு, ''பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டிலுக்கு 10 ரூபாய்'' என்று பாடல் பாடி கவனம் ஈர்த்தது. மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கும் முறை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    Advertisement

    தேர்தலில் வென்று தவெக ஆட்சியை பிடித்து முதல்வராக விஜய் பதவியேற்றாலும் கூட இன்னும் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜய் உடனடியாக டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதல் கட்டணத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுபானம் குடிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ''பாட்டிலுக்கு எம்ஆர்பியை விட கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதற்கு காரணம் உள்ளது. டாஸ்மாக் கடை வாடகை, மின்கட்டணம், வாடகை கட்டணம் உள்பட பலவற்றை நாங்கள் செலுத்த வேண்டி உள்ளது. அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட வேண்டி உள்ளது. இதற்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாயை சொந்த பணத்தை செலவிட வேண்டி உள்ளது. இதனால் தான் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று நியாயப்படுத்தி வருகின்றன.

    Advertisement

    மேலும் இந்த பணத்தை அரசு வழங்கினால் நாங்கள் ரூ.10 கூடுதலாக வசூலிக்க மாட்டோம். மேலும் சமீபத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அவர்கள் அளித்த மனுவில் டாஸ்மாக்கில் ஒருநாள் ஆகும் செலவு மற்றும் ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு பற்றிய பட்டியலை வழங்கினர். அதில் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. டாஸ்மாக்கின் தினசரி செலவினங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் தான் டாஸ்மாக் ஒன்றுக்கு ஒருநாள் மற்றும் ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு பற்றிய விவரம் வருமாறு:

    ஒருநாள் செலவு விவரம்

    *காலிப்பாட்டில் பெறுவதற்கு - ரூ.800
    * மதுபாட்டில்களக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு - ரூ.2,500
    * காலிப்பாட்டில்களுக்கான கமிஷன் - ரூ.800
    * மதுபான காண்ட்ராக்டர் வாடகை - ரூ.1,000
    * பாட்டில் உடைப்பு - ரூ.1,000
    * மின்கட்டணம் (அரசு வழங்கும் கட்டணம் தவிர) - ரூ.200
    * அலுவலக பயண செலவு - ரூ.200
    *வங்கி செல்ல ஆகும் கட்டணம் - ரூ.200
    * இன்டர்நெட்வசதி - ரூ.200
    * ஹெல்த்ஹேர் செலவு - ரூ.200
    *பாதுகாப்பு செலவு - ரூ.500
    * குடிநீர் செலவு - ரூ.60

    Advertisement

    மொத்தம் - 8,160


    ஒரு மாத செலவு விவரம்

    * மாவட்ட மேலாளருக்கான லஞ்சம் - ரூ.10,000
    * உதவி மேலாளருக்கான லஞ்சம் - ரூ.2,000
    *அலுவலக பணியாளர்களுக்கான லஞ்சம் - ரூ.5,000
    *கலால்அதிகாரிகளுக்கான லஞ்சம் (ஆர்ஐ மற்றும் டிசி) -ரூ.5,000
    * கலால் உதவி கமிஷனருக்கான லஞ்சம் ரூ.5,000
    * கட்டட உரிமையாளருக்கான வாடகை - ரூ.60,000
    * மதுபானம் இறக்கும் செலவு (பாக்ஸ்க்கு ரூ.5)- ரூ.15,000
    * சீனியர் மண்டல மேலாளருக்கான லஞ்சம் - ரூ.5,000
    * அரசியல் நன்கொடை - ரூ.5,000
    * பாட்டில் சேகரிக்கும் காண்ட்ராக்டர் லஞ்சம் - ரூ.3,000
    * மீடியா - ரூ.3,000
    *இதர செலவுகள் - ரூ.10,000
    மொத்தம் ரூ.1,33,000

    Advertisement

    இதுபற்றி சிஐடியுவைச் சேர்ந்த கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கப் பொறுப்பாளர் ஆர்.வேலுசாமி, "டாஸ்மாக் நிர்வாகம் கடைகளின் இருப்பிடத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக வழங்கி வருகிறது. இருப்பினும் அந்த தொகை போதுமானதாக இல்லை. இதனால் மாதந்தோறும் கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் பணம் செலுத்த வேண்டி உள்ளது.

    உதாரணமாக மின்சார கட்டணத்திற்காக டாஸ்மாக் மாதத்திற்கு ரூ.7,000 என நிர்ணயிக்கப்பட்ட தொகையை வழங்குகிறது. ஆனால், டாஸ்மாக் மின் கட்டணம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருகிறது. இதனால் கூடுதல் பணத்தை ஊழியர்கள் வழங்க வேண்டி உள்ளது'' என்றார்.

    Advertisement

    இதுபற்றி டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடைகளின் வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக அதிகரிக்குமாறு துறைக்கு பரிந்துரைத்துள்ளோம். பாட்டில் சேதம் மற்றும் ஊழியர்களின் ஊதியத்தை அரசே ஏற்க வேண்டும்'' என்று கூறியுள்ளோம்.

    இதுபற்றி ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் கே.விக்னேஷ் கூறுகையில், ''டாஸ்மாக்கை முழுமையாக மறுசீரமைப்போம். சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, மின்சாரக் கட்டணங்கள் மையப்படுத்தப்பட்டு, டாஸ்மாக் நிர்வாகத்தால் செலுத்தப்படும். சினிமாவில் வருவது போல் உடனடியாக எதையும் செய்ய முடியாது'' என்று கூறினார்.

    English Summary

    CM Vijay pledged that if the TVK were to assume power, this practice of collecting an additional Rs.10 per bottle would be brought to an end. However, to date, this promise has not been implemented. Against this backdrop, data regarding the daily and monthly operational expenses incurred by TASMAC—including details concerning the payment of bribes—has now come to light.