விஜய்யை யாரு முருங்கைக்காய் பறிக்க சொன்னது? டேமேஜ் செய்யப்பட்ட இமேஜ்!

  • சென்னை: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தரை மட்டத்திற்கு இறங்கி வேலை பார்த்துள்ளார் முதல்வர் விஜய். முன்னாள் முதல்வர்களான, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் நினைத்துக் கூட பார்க்காத, "முருங்கைக்காய் பறித்தல்" உட்பட பல வகை எடுபடாத பிரச்சாரங்களை செய்து காட்டி தனது இமேஜை குறைத்துக்கொண்டுள்ளார் அவர்.

    Advertisement

    இடைத் தேர்தல்களில், முதல்வர்கள் பொதுவாக களத்திற்கு செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பிரச்சாரம் மட்டும் செய்துவிட்டு வருவார்கள். ஆனால் விஜய்யோ, டீ குடித்து, டிராக்டர் ஓட்டி, முருங்கைக்காய் பறித்து.. என, பல வகை வித்தைகளை செய்துள்ளார். ரேக்ளா வண்டியில் போனது அதில் இன்னொரு வகை.

    Advertisement

    ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மொத்த அமைச்சர்களையும் இடைத் தேர்தல் நடக்கும் களத்திற்கு இறக்கிவிடுவார். வெற்றி பெற்றால்தான் அமைச்சர் பதவியில் தொடர முடியும் என்ற அறிவிக்கப்படாத கண்டிஷன் அதன்பின்னணியில் இருக்கும். உயிரைக் கொடுத்து வேலை பார்த்து வெற்றியோடுதான் ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்திப்பார்கள்.

    விஜய்யும் சினிமாத் துறையில் இருந்து வந்தவர். ஜெயலலிதாவை பார்க்க கூடிய கூட்டம்போலவே நட்சத்திர அந்தஸ்துக்காக ஒரு கூட்டம் கூடுவதை மறுக்க முடியாது. எனவே விஜய் இதுபோன்று கீழே இறங்கி பிரச்சாரம் செய்திருக்க தேவையில்லை என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. எட்ட முடியாத தூரத்தில் வைத்திருப்பதுதான் நட்சத்திர அந்தஸ்தை காப்பாற்ற உதவும் யுக்தி. மக்களுக்கு தேவை எனும்போது வந்து நின்று உதவிகளை செய்துவிட்டு கோட்டைக்கு திரும்பிவிடுவதுதான் "கல்ட்" அந்தஸ்த்தை தக்க வைக்கும்.

    Advertisement

    விஜய் விஷயத்தில் எல்லாமே உல்டா. விஜய் 5 நிமிஷம் பேசினாலே கொளத்தூரில் தவெக ஜெயித்துவிட முடிகிறதாம். அதை பெருமையாக சொல்லிக் கொண்டதே விஜய்தான். பெருமை பறைசாற்றிக்கொண்ட, சில நாட்களிலேயே ரோடு ஷோ போய், ரேக்ளா வண்டியில் உட்காருவது அவரது கருத்துக்கே முரணாகப் போய்விட்டது.

    விஜய்யிடம் மக்கள் எதிர்பார்த்தது நல்ல சில மாற்றங்களைத்தான். அதை செய்திருந்தாலே ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்குகள் வரிசையாக வந்து விழும். அதுதான் தமிழ்நாட்டின் வாடிக்கை. ஆனால், தவெக அரசு இதுவரை செய்ததில் பெரும்பாலானவை மக்கள் எதிர்க்கும் திட்டங்கள்தான் என்பதால்தான் இவ்வளவு இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டியதாயிற்று.

    Advertisement

    விஜய் நடந்துகொண்டது அவரது கல்ட் இமேஜுக்கு மட்டுமல்ல, அவரே பெருமை பேசிய பேச்சுக்களுக்கும் நேர் எதிர்மாறானது. ஒருவேளை இரு தொகுதிகளிலும் தவெக தோற்றால், விஜய்யே இப்படி தீவிர பிரச்சாரம் செய்தும் தோற்றுவிட்டதே என்று அக்கட்சியின் இமேஜ் அதலபாதாளத்திற்கு பாயும். வெற்றியே பெற்றாலும், கஷ்டப்பட்டு போராடி கடைசி நேரத்தில் பெற்ற வெற்றி என்றுதானே வரலாற்றில் இடம்பிடிக்கும்?

    English Summary

    Do you know why Vijay’s campaign wasn’t a good move in Dharapuram and Madurantakam?