சென்னை: ஊழல் நடந்ததற்கான ஆதாரம் என்னுடைய டேபிளில் இருக்கிறது.. என்று முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் ஓப்பனாக பேசினார். ஆனால் ஆதாரம் இருக்கிறது என்று கூறிய விஜய்.. அதன் மீது எந்த ஆக்சனும் எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, வீட்டு வசதி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் ஆதாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவாதத்தின் போது முதல்வர் விஜய் பேசிய கருத்துக்கள் விவாதம் ஆகி உள்ளது.
சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசிக்கொண்டிருந்த தருணத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் வெடித்தது. அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட வீட்டு வசதி திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் முறையற்ற நடைமுறைகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், முந்தைய ஆட்சியில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் ஏதேனும் அரசிடம் உள்ளதா என எழுந்து நின்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "நாங்கள் எதைச் சொன்னாலும் எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள். ஆனால், ஆதாரங்களை முன்வைக்கும் போது அவர்கள் தவறை ஒப்புக்கொள்கிறார்கள். ஒருவேளை முதல்வரிடம் உள்ள முழுமையான ஆதாரங்களை அவர் வெளியிடத் தொடங்கினால், எதிர்க்கட்சியினர் என்ன மாதிரியான நிலைக்கு ஆளாவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்" என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார். இந்த விவாதத்தின் உச்சக்கட்டமாக குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் விஜய், "எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆதாரம் கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் பேசும்போதே, மூன்று துறைகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான கோப்புகள் எனது மேஜையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அது வெறும் மேடைப் பேச்சுக்காகச் சொல்லப்பட்ட வார்த்தை அல்ல. கூறப்படும் அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய வலுவான ஆதாரங்கள் அரசிடம் உள்ளன. அந்தக் கோப்புகளைத் திறக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள். சரியான நேரத்தில், உரிய தகவல்கள் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தப்படும். மக்களுக்கு எதை, எப்போது, எப்படிச் சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் என்னை இந்த இடத்தில் அமர வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார். விஜய்யின் இந்த பேச்சு பொது வெளியில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் நடந்ததற்கான ஆதாரம் என்னுடைய டேபிளில் இருக்கிறது.. என்று முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் ஓப்பனாக பேசினார். ஆனால் ஆதாரம் இருக்கிறது என்று கூறிய விஜய்.. அதன் மீது எந்த ஆக்சனும் எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஊழலுக்கான முழுமையான ஆதாரங்கள் கையில் இருப்பதாகக் கூறும் போது, அதன் மீது உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவோம் என்று காத்திருப்பது ஏன் என்ற நியாயமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், ஒரு முதல்வராக உடனடியாக சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதைவிடுத்து, தேர்தல்களையோ அல்லது அரசியல் சூழல்களையோ மனதில் தகவல்களை வெளியிடாமல் ஒத்திவைப்பது தவறான முடிவு என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மக்கள் அளித்த அதிகாரத்தின் நோக்கம், முறைகேடுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கத்தான்.. ஆனால் அதை விஜய் செய்யாமல் காலம் தாழ்த்துகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முதல்வரின் கருத்துக்களுக்குப் பிறகு தனது உரையைத் தொடர்ந்த ஐ. பெரியசாமி, "நீங்கள் அன்பால் வென்றதாக கூறுகிறார்கள்.. நானும் அப்படித்தான் மக்களிடம் அன்புடனும் பரிவுடனும் பேசிப் பழகியதால்தான் ஒரே தொகுதியில் இருந்து ஏழு முறை வெற்றி பெற்றுள்ளேன். அதிலும் குறிப்பாக இரண்டு முறை தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறேன்" என்று ஆணித்தரமாகத் தனது பதிலை பதிவு செய்தார். இருதரப்பினரின் இந்த அனல் பறக்கும் வாதங்களால் தமிழக சட்டசபை வளாகம் இன்று முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.சட்டப்பேரவையில் விவாதத்தின் பின்னணி
முதல்வரின் தலையீடு
எழும் அரசியல் கேள்விகள்