சென்னை: தமிழக அரசின் முக்கிய துறையில் பொறுப்பு வகித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி கே.பி.கார்த்திகேயன், தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் மீது சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் கவனம் பெற்றுள்ளது. இதில் என்ன பின்னணி? இதுகுறித்து எக்ஸ்க்ளுசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழக அரசின் பேரூராட்சிகள் துறையின் மேலாண் இயக்குநராக இருக்கும் கே.பி.கார்த்திகேயன் ஐஏஎஸ், மத்திய அரசு பணிக்கு செல்கிறார். தமிழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, இப்போது டெல்லிக்கு மாற்றப்படுவது கவனம் பெற்றுள்ளது. அதுவும் நகராட்சி நிர்வாகத்துறையில் இவர் பணியாற்றியபோது சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த மாற்றம் நடந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையின் துணை செயலாளர் அஜீத்குமார் ரஞ்சன், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்... அந்த கடிதத்தில் கே.பி.கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, மத்திய பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் டெல்லியில் உள்ள பொருளாதார விவகாரத்துறையின் துணைச் செயலாளராக கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் 4 ஆண்டுகள் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... அதே நேரத்தில், இதற்கு முன்பாக வேறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதன்படி செயல்பட வேண்டியிருக்கும். தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையில் புதிய பணியை ஏற்கும் வகையில் கார்த்திகேயனை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, புதிய பொறுப்பை ஏற்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 வாரங்களுக்குள் கே.பி.கார்த்திக்கேயன் தனது புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் பணியில் சேர வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் புதிய பொறுப்பை ஏற்கத் தவறினால், மத்திய அரசின் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் அவரை பணியமர்த்துவதற்கு தடை விதிக்கும் அதிகாரமும் மத்திய அரசுக்கு இருக்கிறது. எனவே, இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு முக்கியத்துவம் பெறுகிறது. கே.பி.கார்த்திகேயன் தமிழகத்தில் திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர்... அப்போது அந்த துறையின் அமைச்சராக கே.என்.நேரு இருந்தார். நகராட்சி நிர்வாகத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் கார்த்திகேயன் மீதும் குற்றச்சாட்டுகள் எதிரொலித்தன. இப்படிப்பட்ட சூழலில், இப்போது அவர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசின் பேரூராட்சிகள் துறையின் மேலாண் இயக்குநராக இருந்து வந்த அவருக்கு, டெல்லியில் பொருளாதார விவகாரத்துறையின் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நியமன உத்தரவு, கார்த்திகேயனின் அடுத்தகட்ட பணியை தீர்மானித்துள்ளது. புதிய பொறுப்பை ஏற்க 3 வார காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதும், அந்த காலக்கெடுவை தவறவிட்டால் மத்திய பணியமர்த்தும் திட்டத்தில் தடை விதிக்கப்படலாம் என்ற நிபந்தனையும் இந்த உத்தரவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்...!! - நமது சிறப்பு நிருபர் எழில்கேபி கார்த்திகேயன் ஐஏஎஸ்
மத்திய அரசு உத்தரவு - காலக்கெடு
கேஎன் நேரு - சர்ச்சைகள்