அதிகாலையில் பேராசிரியர் கலையரசனை தூக்கியது ஏன்?.. அதுவும் கைலியுடன்.. கொதித்த கோடீஸ்வரன்

  • சென்னை: விலைலைவாசி உயர்வு குறித்து பேசிய பொருளாதாரப் பேராசிரியர் கலையரசன் மீது சில நாட்களிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதிகாலையில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது குறித்து, மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கலையரசன் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    தமிழ் நிறம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "பொருளாதாரப் பேராசிரியர் கலையரசன் மீது வழக்குப் பதிவு செய்து, அதிகாலையில் கைது செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மிரட்டல் என்பது சாதாரணமான ஒரு வார்த்தை. இதைத் தாண்டி, தானும் அழிந்து, தன் தலையில் மண்ணையும் போட்டுக்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்களையும் அழித்து, தமிழக அரசியலைப் பின்னுக்குத் தள்ளக்கூடிய அரசாக இது மாறிவிடக்கூடும்.

    Advertisement

    விஜய் எதனால் வெற்றி பெற்றார்?

    விஜய் இன்று எதனால் வெற்றி பெற்றார்? மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியதால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

    பத்திரிகையாளர்கள், கருத்து சொல்பவர்கள், பொருளாதார நிபுணர்கள் எனப் பலரும் தங்கள் மனதில் இருந்த கருத்துகளை வெளியே சொன்னார்கள். அந்த விமர்சனங்களால்தான் ஆட்சி மாற்றமே வந்தது. ஆனால், இன்று உங்கள் மீது அந்த விமர்சனங்கள் வரக்கூடாது என்று நினைக்கிறீர்கள். அப்படியென்றால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக பயப்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.

    கலையரசன் கைது ஏன்

    கலையரசன் ஒரு பொருளாதார பேராசிரியர். நன்றாக படித்தவர், ஆராய்ச்சி செய்பவர், பொருளாதாரம் தெரிந்தவர். திராவிட மாடல் குறித்து புத்தகமும் எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி கூகுளில் தேடினால் அவருடைய கல்வி, ஆராய்ச்சி, பொருளாதாரப் பின்னணி பற்றிய தகவல்கள்தான் வருகின்றன. ஆனால், அவரைப் பற்றி வேறு மாதிரியான தகவல்களைப் பரப்புகிறார்கள்.

    Advertisement

    அப்படிப்பட்ட ஒருவரை அதிகாலையில் கைலி கட்டிக்கொண்டு வீட்டில் இருக்கும்போது கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் தப்பித்து ஓடிவிடுவாரா? கலையரசன் பொருளாதாரம், பணவீக்கம் மோசமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்கள் சிரமப்படுவதாகவும் பேசியிருக்கிறார். இதுதான் அவருடைய கைது நடவடிக்கைக்குக் காரணம் என்று பேசப்படுகிறது.

    எதிர்த்து பேசினால் கைது

    ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில், கலையரசன் பெயரில் போலியான கணக்கு தொடங்கி அதிலிருந்து தவறான செய்திகள் அனுப்பப்பட்டதாகவும், எம்எல்ஏ ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் நேரில் சென்று தனக்கு அந்தக் கணக்கு இல்லை என்று சொன்னதும் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    ஒருவரை கைது செய்ய வேண்டியிருந்தால் முதலில் நோட்டீஸ் கொடுங்கள், சம்மன் அனுப்புங்கள். அதற்குப் பிறகு அவர் நீதிமன்றத்துக்குச் செல்கிறாரா அல்லது விசாரணைக்கு வருகிறாரா என்பதைப் பார்க்கலாம். அதுதான் நடைமுறை. அதை விட்டுவிட்டு அதிகாலையில் நான்கைந்து பேரை அனுப்பி கைது செய்வது ஏன்? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சியை எதிர்த்துப் பேச முடியாத சூழலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோன்ற நிலையைத் தமிழ்நாட்டிலும் உருவாக்குகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

    அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி

    அதேபோல, அதிமுகவில் இருந்து பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்கள். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் பதவி தருவதாக கூறியிருக்கிறார்கள். ஆனால், எதிர்பார்த்த பதவி கிடைக்காததால் பலர் மனவருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களை வேறு யாரும் மீண்டும் அழைத்துச் சென்றுவிடக்கூடாது என்பதும் அரசியல் கணக்காக இருக்கிறது.

    Advertisement

    திமுக வரக்கூடாது, அதிமுகவின் அரசியல் முடிந்துவிட்டது என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

    தியேட்டர் செலவு மிச்சம்

    விஜய் ஒரு நடிகர். முதலமைச்சராக இருந்தாலும் சினிமாவில் பேசுவதுபோல பஞ்ச் வசனங்கள் பேசுகிறார். தியேட்டரில் பார்த்ததை மக்கள் இப்போது சட்டமன்றத்தில் பார்க்கிறார்கள்... பாப்கார்ன் செலவு, பார்க்கிங் செலவு, டிக்கெட் செலவு எல்லாம் மிச்சம் என்றுகூட சொல்லலாம். சினிமாவில் நடித்ததைப் போலவே இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நடிப்புக்கு பின்னால் நம்முடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிறதே, தமிழ்நாட்டின் அரசியல் பின்னோக்கி செல்கிறதே என்று மக்கள் சிந்திக்க தொடங்கவில்லை. குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து கொண்டு செல்கிறார்கள். அதற்காகத்தான் பள்ளிகளுக்குச் சென்று பாடல்கள் பாடப்பட்டன" என்றெல்லாம் தெரிவித்தள்ளார்.

    English Summary

    Why Was Professor Kalaiyarasan Picked Up in a Lungi at Dawn? Kodeeswaran Questions His Arrest