பைக், ஆட்டோவிற்கு தடை.. ஹைதராபாத், பெங்களூரு பாணி.. மீனம்பாக்கம் டூ செய்யூர் புதிய மேம்பாலம் வருமா?

  • பெங்களூரு: இந்தியாவில் ஹைதராபாத்தில் சென்னையை போல் அவுட்டர் ரிங்ரோடு நகரத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது.இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள்,ஆட்டோக்கள், டிராக்டர்கள் செல்ல தடையிருக்கிறது. அந்த சாலையில் ஏறவே முடியாத அளவிற்கு சிஸ்டம் அங்கு உள்ளது. சர்வீஸ் சாலையும் தனியாக இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு உள்ளது. அந்த சிஸ்டம் அவுட்டர் ரிங்ரோட்டில் மட்டுமல்ல, மெயின் சாலையில் ஏர்போர்ட் வரையிலுமே உள்ளது. இதன் மூலம் விரைவாக மக்கள் சென்றுவிட முடிகிறது. அப்படியான சிஸ்டம் தான் பெங்களூரு-மைசூர் விரைவுச்சாலையில் கடந்த 2023ம் ஆண்டுமுதலே இருக்கிறது. சென்னையிலும் அப்படியான மேம்பால சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    Advertisement

    பெங்களூரு மற்றும் மைசூர் இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும் விதிமாக 6 வழி விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023ம் ஆண்டு திறந்து வைத்தார். அப்போது அடிக்கடி உயிரிழப்பு, விபத்துக்கள், சுங்கக்கட்டணம் தொடர்பான சர்ச்சை நீடித்தது. தொடர்ச்சியான சேவைச் சாலை இல்லாமல் இருந்தது. அதன்பிறகு சர்வீஸ் சாலையை அமைத்தார்கள். அதன்பின்னர் விரைவுச்சாலையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள இலவச சேவைச் சாலைகளை மட்டுமே பைக் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்துகின்றன. அப்படியான சாலை சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    Advertisement

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நகரை சுற்றி வட்ட வடிவில் ORR எனப்படும் புறவழிச்சாலை இருக்கிறது. இங்கு இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற மெதுவாகச் செல்லும் வாகனங்கள் பிரதானப் பாதையில் செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாகனங்கள் ஏறும் வழிகளிலேயே நுழைவதைத் தடுக்கும் வகையில் துல்லியமானக் கண்காணிப்பு அமைப்புகளும் , பிரத்யேக சேவைச் சாலைகளும் இருக்கின்றன. இதன் காரமாக ORR சாலையில் மட்டுமின்றி, நகரத்தின் பிரதான பகுதியிலிருந்து விமான நிலையம் வரை நீண்டுள்ளதால் மக்கள் எவ்விதத் தடங்கலுமின்றி அதிவேகமாகப் பயணிக்க முடியும்.

    Advertisement

    இதேபோல, கர்நாடகாவில் உள்ள 6 வழிப் பெங்களூரு-மைசூர் விரைவுச்சாலையிலும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் பைக்குகள், ஆட்டோக்கள் மற்றும் விவசாய வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் மட்டுமே பிரதானப் பாதையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்கும் மெதுவான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் சாலை இருக்கிறது. இதனால் விபத்துகள் பெருமளவில் குறைந்து பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது.

    எனவே சென்னையிலும், அத்தகைய அதிநவீன உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் விமான நிலையத்தின் பின்பக்கம் வழியாக மேம்பால சாலையை அமைத்து அதன் மூலம் அவுட்டர் ரிங்ரோட்டை எளிதாக வாகனங்கள் அடைய முடியும். அங்கிருந்து சில நிமிடங்களிலேயே கிளாம்பாக்கம் வந்துவிட முடியும். இதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை அட்டர் ரிங்ரோடு வழியாக மேம்பாலங்கள் அமைத்தால் நெரிசல் பெருமளவு குறையும், அந்த மேம்பாலத்தை அப்படியே செய்யூர் வரை நீட்டித்தால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் கார்கள் 100 கி.மீ வேகத்தில் எளிதாக போக முடியும். இதன் மூலம் மீனம்பாக்கத்திலிருந்து செய்யூரை 1 முதல் 1.5 மணி நேரத்திற்குள் போய்விட முடியும்.

    Advertisement

    அந்த மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், மெதுவான வாகனங்கள் செல்ல தடை விதிக்கக வேண்டும். அவர்களுக்கு என்று பிரத்யேக சர்வீஸ் சாலையை கொடுத்து அதில் தான் அவர்கள் செல்ல வேண்டும் என்று சிஸ்டத்தை கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடியில் எங்கே ஏறினாலும் கட்டணம் செலுத்தாமல் கடக்க முடியாது என்பது போல் மாற்ற வேண்டும். அதேபோல் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் சுங்கச்சாவடியை தாண்டவே முடியாத அளவிற்கு அங்கேயே தடுத்து திருப்பி அனுப்ப வேண்டும். இதன் மூலம் அந்த சாலையில் அதிவிரைவாக வாகனங்கள் மதுராந்தகம் வரை போய்விட முடியும்.

    Advertisement

    அதேபோல் அரசு செய்யூரில் புதிய விமான நிலையம் அமைத்தால், அங்கேயே பிரத்யேகச் சரக்கு மையத்தை அமைத்து, அனைத்து சரக்கு விமானங்களையும் அங்கு மாற்றிவிட முடீயும். இதன் மூலம் ஜி.எஸ்.டி சாலையில் கனரகச் சரக்கு லாரிகளின் எண்ணிகை கணிசமாக குறையும். அதேவேளையில், மீனம்பாக்கத்தைப் பயணிகள் பயன்பாட்டிற்கு மட்டும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.'

    ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற பக்கத்து மாநில நகரங்களில் சாத்தியமாக்கப்பட்டுள்ள இந்த "கட்டுப்பாடான அதிவேகச் சாலை"யை தமிழக அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து சென்னையில் செயல்படுத்தினால், கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை நெரிசல் குறையும். மதுராந்தகம் தாண்டி விழுப்புரம் வரையிலான வளர்ச்சி அடையாத மிகவும் பின்தங்கிய பகுதிகள் அசுர வளர்ச்சி அடையும்.

    English Summary

    Will a new flyover from Meenambakkam to Cheyyur be constructed—modeled after those in Hyderabad and Bengaluru—with a ban on two-wheelers and auto-rickshaws?