சென்னை: நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளாராம். கட்சிக்கு பெயரும் வைத்துவிட்டாராம். அப்படியே விஜய் கட்சியின் பெயரை போன்றே உள்ளது. ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் மாற்றம்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோர் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களில் தனிப்பட்ட முறையில் ஒருவருமே சோபிக்கவில்லை.
அதிலும் விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோருக்கு கணிசமான வாக்கு சதவீதமே கிடைத்தது. அது போல் விஜயகாந்த் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
ஆனால் இவர்களில் யாருமே தனித்து ஆட்சி அமைக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் கட்சி ஆரம்பித்த இரு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார். கடந்த 2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மை 118 தேவை என்பதால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விஜய் முதல்வராகியுள்ளார். விஜய் கட்சி போட்டியிட்ட போது யாருமே இப்படி ஒரு மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கவில்லை. விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் உள்ளிட்ட சிலர் மட்டுமே வெல்வார்கள். விஜய் எம்எல்ஏவாக மட்டுமே ஆவார் என கணிக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் தாண்டி விஜய்யே அதிர்ச்சியடையும் வகையில் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு தவெக வென்றது. விஜய் வெற்றியடைந்த நிலையில், அவரை வைத்து ஆழம் பார்த்தது போல் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அரசியலுக்கு வர அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதிலும் ஒரு படி மேலே போய் தனுஷ், அரசியல் கட்சியை தொடங்குவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார். இதையடுத்து அடிமட்ட அளவில் இருந்து தனது நற்பணி மன்றத்தை வலுப்படுத்த, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். நற்பணி மன்றங்கள் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்திருந்தார். ஒரு முறை ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் திருவள்ளூர் மாவட்டத்தில் சந்தித்தார். அதற்கு முன்னதாக தனுஷ் ரசிகர்கள் ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தியிருந்தனர். சுருக்கமாக சொல்ல போனால் தனுஷ் அடிக்கடி லைம்லைட்டில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட டெல்லிக்கு சென்றிருந்தார். அங்கு சில முக்கிய அரசியல் கட்சியினரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து சென்னை வந்த அவர், திடீரென மகளிரணியினரை சந்தித்தார். அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்ததுடன் தலா 20 கிராம் எடைக் கொண்ட வெள்ளி காமாட்சி விளக்குகளை பரிசாக கொடுத்திருந்தார். ஒரு பிரபல நகைக் கடையின் பெயருக்கு கீழ் ஏற்கெனவே தாமரை போன்று லோகோ இருந்து வரும் நிலையில் ஸ்பெஷலாக அனைத்து விளக்குகளின் அடிபாகத்திலும் தாமரை சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. இதனால் தனுஷ் மத்திய அமைச்சராகிறாரா என்று கூட பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். தவெகவை பாஜகவின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் தனுஷை வைத்து பாஜக தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் தனுஷ் "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்க போகிறார் என சொல்லப்படுகிறது. இதை பார்க்கும் போது அப்படியே விஜய் கட்சியின் பெயரை போல் இருக்கிறது. விஜய் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம், தனுஷ் கட்சியின் பெயர் தமிழக எழுச்சிக் கழகம். விஜய் கட்சித் தொடங்கிய போது வெற்றிக்கு பக்கத்தில் ஒற்றெழுத்தான "க்" வரவில்லை என தமிழ் அறிஞர்கள் பலரும் சுட்டிக் காட்டியதை ஏற்ற விஜய், தனது கட்சியின் பெயரை திருத்தி வெளியிட்டார். அந்த வகையில் தனுஷ் தொடக்கத்திலேயே எழுச்சிக்கு பக்கத்தில் "க்" வைத்தே வெளியிடுவார் என்கிறார்கள். அது TVK, இது TEK. விஜய்யோடது தவெக , தனுஷோடது தஎக! எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருப்போம்.நடிகர் விஜய்
108 இடங்கள்
தனுஷ் அரசியல் வருகை.. அலர்ட் மோடில் திமுக.. இளைஞரணியை பலப்படுத்தும் பணியில் உதயநிதி ஸ்டாலின்!
விஜய் கட்சி
விஜய் வெற்றி
ரசிகர் மன்றம்
நற்பணி மன்றங்கள்
தனுஷ் வந்து ஆட்டத்தையே காலி பண்ணிட்டாரு! பெரும் அச்சத்தில் விஜய்! இப்படி ஒரு கணக்கு இருக்கா!
லைம்லைட்டில்
செல்பி புகைப்படம்
தனுஷ் மத்திய அமைச்சராகிறாரா?
இது அது இல்ல.. தமிழகத்தில் 234 தொகுதிகளில் ஏசி டியூஷன் சென்டர் தொடங்கும் தனுஷ்?
தமிழக எழுச்சிக் கழகம்
ஒற்றெழுத்து