போயஸ் கார்டனில் அவர் வீட்டுக்கு குடியேறுகிறாரா முதல்வர் விஜய்? இதுதான் பின்னணி காரணமா?

  • சென்னை: எவ்வளவு பெரிய விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றிப் பேசாமல் அமைதியாகக் கடந்து செல்லும் இரும்பு போன்ற மனநிலையை விஜய் வளர்த்துக் கொண்டுள்ளார். செய்தியாளர்களை நேரடியாகச் சந்தித்தால் சங்கடமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதால், பிரதமர் மோடி அவர்களைப் போலவே விஜய்யும் செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்கும் பாணியைப் பின்பற்றுகிறார் என்று குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Madras Town Bus என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல வழக்கறிஞர், "கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து பெரிதாக பேசப்பட்டு வந்த விவாகரத்து வழக்கை இப்போது சங்கீதா முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளார். முன்னதாக, நீதிமன்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகாமல், காணொளி வாயிலாக ஆஜராக விஜய் அனுமதி கோரியிருந்தார்.

    Advertisement

    சங்கீதா - விஜய் விவகாரம்

    இந்த விவகாரத்தில் 2 தரப்பினரையும் மீண்டும் இணைப்பதில் அவர்களது மகன் சஞ்சய்யின் பங்கு மிக முக்கியமானது.. சஞ்சயின் சமீபத்திய நேர்காணலும், அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளுமே குடும்பம் மீண்டும் இணைவதை சாத்தியமாக்கியுள்ளன. சங்கீதாவுக்கு எந்தவிதமான பணத்தேவையும் இல்லை. அவர் லண்டனில் புகழ்பெற்ற தொழிலதிபரின் மகளாவார். அதனால் தற்போது 2 குடும்பத்தினரும் சுமூகமாக பேசி மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளனர்.

    விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு குடும்பத்தின் ஆதரவும் பாதுகாப்பும் இப்போதைய சூழலில் மிகவும் அவசியமாகிறது. சங்கீதா இந்த வழக்கை தொடுத்தது விஜய்யை எதிர்ப்பதற்கோ அல்லது அவமானப்படுத்துவதற்கோ கிடையாது.. தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தித் தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தவே அப்படி செய்தார்.

    Advertisement

    போயஸ் கார்டன் வீடு

    நீலாங்கரை வீட்டிலிருந்து சங்கீதா வெளியேற்றப்பட்டதாக முன்பு சொல்லப்பட்ட நிலையில், இப்போது விஜய், சங்கீதா, சஞ்சய், அவர்களின் மகள் என எல்லாருமே ஒரே குடும்பமாக இணைந்து வாழ போகிறார்கள்..

    முதலமைச்சர் தினசரி பனையூரிலிருந்து நகருக்குள் வரும்போது பொதுமக்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, போயஸ் கார்டன் பகுதியிலுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தெரிகிறது.. அந்த வீடு இப்போது நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபாவிடம் உள்ளது.

    நீலாங்கரை வீட்டில் சங்கமம்

    எனவே, சென்னை நகரின் மையப்பகுதியான போயஸ் கார்டன் அல்லது கோபாலபுரம் பகுதிக்கு அருகிலேயே புதிய வீட்டை வாங்கி, அங்கு அனைவரும் ஒன்றாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளனர். இது முதலமைச்சரின் பாதுகாப்புக்கும் வசதியாக அமையும்.

    Advertisement

    சங்கீதா லண்டனில் இருந்தபடியே இந்த வழக்கை கையாண்டு வந்தாலும், பிரச்சனைகளைச் சரிசெய்து மீண்டும் இணையவே விரும்பினார். விஜய் நாட்டுக்கு முதலமைச்சராக இருந்தாலும், வீட்டிற்கு அவர் ஒரு கணவராகவும் தகப்பனாகவும் மட்டுமே இருக்கிறார். அவர் மீதான அரசியல் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை.. ஆனால், அவரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சிப்பது சரியானதல்ல.

    சங்கடம் தந்த திரிஷா விவகாரம்

    விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோது நடைபெற்ற சில பொது நிகழ்வுகளும், த்ரிஷா தொடர்பான செய்திகளும் கட்சி நிர்வாகிகளிடையே பெரும் சங்கடத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தின. முதலமைச்சராக இருக்கும் ஒருவர் அடிக்கடி குடும்ப நீதிமன்றத்தின் வாய்தாக்களுக்குச் சென்று வருவதைத் தவிர்க்கவே, சங்கீதாவிடம் முறையான ஒப்பந்தம் செய்யப்பட்டு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    Advertisement

    எவ்வளவு பெரிய விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றிப் பேசாமல் அமைதியாகக் கடந்து செல்லும் இரும்பு போன்ற மனநிலையை விஜய் வளர்த்துக் கொண்டுள்ளார். செய்தியாளர்களை நேரடியாகச் சந்தித்தால் சங்கடமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதால், பிரதமர் மோடி அவர்களைப் போலவே விஜய்யும் செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்க்கும் பாணியைப் பின்பற்றுகிறார்.

    இப்போது பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக முடிவுக்கு வந்துவிட்டன. முதலமைச்சர் விஜய் , தம் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகளுடன் இணைந்து மீண்டும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை தொடர போகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Will CM Vijay Shift into Poes Garden? Is This the Real Reason Behind His Family Moving to This Iconic House?