“ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரி ஸ்டாலின்”.. ஆதவ் அர்ஜுனாவுக்கு உதயநிதி கொடுத்த உடனடி ரிப்ளை!

  • சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா குறித்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளுமா என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக பதில் அளித்தார்.

    Advertisement

    இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுவதற்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்யவிருப்பதாக டெல்லியில் இருந்து தகவல் வந்ததாக கூறினார்.

    Advertisement

    மேலும், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், "தொகுதி மறுவரையறை குறித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக, அதுபற்றி முதல் முதலாகப் பேசியது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான்.

    கடந்த ஆண்டில் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநில முதல்வர்களை சென்னைக்கு வரவழைத்து, ஒரு மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்தவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

    Advertisement

    தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நீங்கள் கூட்டும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், "தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று தி.மு.கவுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. அந்தச் சட்டமுன்வரைவின் நகலை எரித்து எதிர்ப்புக் காட்டியவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் தி.மு.க உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசிடம் திமுக முன்வைக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    When Minister Aadhav Arjuna raised a question in the Assembly regarding whether the DMK would participate in the all-party meeting of MPs concerning the constituency delimitation bill, Leader of the Opposition Udhayanidhi Stalin responded to it.