பாஜக கூட்டணியில் திமுக? இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு திமுக வராது! காங்கிரஸ் தலை ஷாக் தகவல்!

  • சென்னை: இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் திமுக பங்கு பெறாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து டெல்லியில் பேட்டி அளித்தார். அதில், "பாஜக தலைமையிலான கூட்டணியில் திமுக ஒருபோதும் இடம்பெறாது.. பாஜக மற்றும் திமுகவின் கொள்கைகள் முற்றிலும் வெவ்வேறானவை.

    Advertisement

    இரு கட்சிகளின் அடிப்படை சித்தாந்தங்களும் நேர் எதிர் துருவங்களாக இருப்பதால், அவை ஒருபோதும் அரசியல் ரீதியாக ஒன்றிணைய முடியாது.. என்று மிக உறுதியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், திமுக தனது பாசிச எதிர்ப்பு மற்றும் சமூக நீதி கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை காங்கிரஸ் முழுமையாக நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்தியா கூட்டணி கூட்ட புறக்கணிப்பு உண்மைதான்

    கடந்த 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது குறித்து எழுந்த காரசாரமான விவாதங்களுக்கும் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 8-ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், நாங்கள் தவெகவை ஆதரிக்கிறோம். இந்த அரசியல் சூழல் காரணமாக திமுக அந்த கூட்டத்தைத் தவிர்த்துள்ளது" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

    Advertisement

    தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கியதோடு, திமுகவிடம் நன்றி கூட தெரிவிக்காமல் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இணைந்தது. இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. அதன் காரணமாகவே டெல்லி கூட்டத்தை திமுக புறக்கணித்தது என்பதை காங்கிரஸ் இந்த பேட்டி மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    நாடாளுமன்றத்தில் தொடரும் தொடர்பு

    இருப்பினும், இந்த விரிசல் தற்காலிகமானது மற்றும் மாநில அரசியலோடு தொடர்புடையது என்பதை விளக்கும் வகையில் ஜெய்ராம் ரமேஷ் பேசினார். "தமிழகத்தில் அரசியல் நிலைப்பாடுகள் மாறியிருந்தாலும், தேசிய அளவில் நாங்கள் தொடர்ந்து திமுக எம்பிக்களுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளிலும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிராகவும் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்" என்றும் அவர்தெரிவித்தார்.

    Advertisement

    தேசிய அரசியலில் இதன் தாக்கம் என்ன?

    ஜெய்ராம் ரமேஷின் இந்த பேச்சு, திமுக பாஜக பக்கம் சாய்ந்துவிடுமோ என்று பரவி வந்த அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில், மாநில அளவில் கூட்டணி உடைந்தாலும், டெல்லி அளவில் பாசிசத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் திமுகவை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருவதை இது காட்டுகிறது.

    தொகுதி எல்லை மறுவரையறை போன்ற மிக முக்கியமான தேசியப் பிரச்சினைகள் வரவிருக்கும் நிலையில், திமுக போன்ற வலுவான மாநில கட்சியின் நாடாளுமன்ற ஆதரவு காங்கிரசுக்கு முக்கியமானதாக உள்ளது. ஆனால் திமுக இந்த மசோதாவிற்கு இந்த முறை ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனால் காங்கிரஸ் திமுகவை சமாதானம் செய்ய முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன.

    English Summary

    Will DMK Join BJP Alliance? Jairam Ramesh speaks about the break of INDIA Bloc and TVK