உயர போகுது மின் கட்டணம்? மின்சார கொள்முதல் விலை உயர்வால் ரேட் ஏறுமா? நிர்மல் குமார் விளக்கம்

  • சென்னை: தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அது இணையத்தில் பரவிய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையே இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார். ரூ.32க்கு தான் மின்சாரம் வாங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

    Advertisement

    சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    Advertisement

    நிர்மல் குமார்

    அவர் மேலும், "தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது. தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் கடந்த ஆண்டு இரண்டு யூனிட்களில் தீ பிடித்தது. அதில் ஒன்று ஏற்கனவே சரி செய்யப்பட்டது. 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாக கூடிய மற்றொரு யூனிட்டை ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.

    புறம்போக்கு நிலத்தில் பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்கு 10-20 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை என்ற செய்திகள் வருகின்றன. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவின் படி புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு மின்சார இணைப்பு வழங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement
    ரூ.35 டெண்டர்.. இப்போ அடுத்த கொடூரம்! உடன்குடி அனல்மின் திட்டம் தனியாருக்கு தாரைவார்ப்பு! ஏன் தவறு?

    புறம்போக்கு நிலங்கள்

    கோவில் நிலங்கள், நீர் நிலங்கள், ரயில்வே நிலங்கள் போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு மின்சாரம் இணைப்பு கொடுக்க முடியாது. இதைத் தவிர்த்து மற்ற புறம்போக்கு நிலங்களில் இருப்பவர்கள் விண்ணப்பித்து மின்சார இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். single phase மின்சாரம் வழங்கப்படும். இதில் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவார்கள். 250 சதுர அடிக்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மின்சார இணைப்பு கொடுக்கப்படும். ஏழை எளிய மக்களுக்காக தான் இதை கொண்டு வருகிறோம். இவர்களுக்கும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

    Advertisement

    ரூ.35 இல்லைங்க

    தமிழ்நாட்டில் மழை தொடங்கி இருப்பதன் காரணமாக 1,000 மெகாவாட் மின் தேவை குறைந்திருக்கிறது. அதன் காரணமாக 1,000 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கொள்முதல் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மேலும், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு வாங்குவதாக தகவல் பரவுகிறது. 35 ரூபாய் என்பது அதிகபட்ச டெண்டர் மதிப்பு.. ரூ.32.47 தான் அதன் விலை. அவர்களின் உற்பத்தி செலவே ரூ.29 ஆகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி விலையை குறைக்க முயல்கிறோம்.

    எரிவாயு மின் உற்பத்தி மூலம் மட்டுமே தற்போது மின்சாரம் கிடைக்கிறது. அது மூலம் தான் நமது மின்சார தேவையை பூர்த்தி செய்கிறோம். மத்திய அரசின் மூலமாகவே எரிவாயு மின்சாரம் வாங்கப்படுகிறது. மத்திய அரசின் NVVN மற்றும் Power trading corporation நிறுவனங்களிடமிருந்து தான் மின்சாரம் வாங்கப்படுகிறது. மின் தேவை காரணமாக ஒரு நாளுக்கு 5 முதல் 10 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஆகிறது.

    Advertisement

    நீண்ட கால டெண்டர்

    கடைசியாக அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோது 2013ல் தான் நீண்ட கால டெண்டர்களை அறிவித்தனர். அதன் பிறகு இதுபோன்ற நீண்ட கால டெண்டர் அறிவிக்கப்படவே இல்லை. இதன் காரணமாகவே அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது தான் நாம் நீண்ட கால டெண்டர் அறிவிக்க போகிறோம். ரூ.6,7,8 -க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கப்பட இருக்கிறது. அதேபோல் ஐந்து ஆண்டுகளுக்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் இதற்கான அறிவிப்புகள் வரும். இப்போது டெண்டர் விடப்பட்டால் அடுத்த 5 மாதத்திற்குள் மின்சாரம் கிடைக்கும்.

    Advertisement
    78 நாள் தீபாவளி போனஸ் தருகிறதா மத்திய அரசு? உண்மையில் எவ்வளவு கிடைக்கும்.. ரயில்வே ஊழியர் விளக்கம்

    மின் கட்டணம் உயராது

    மின்சார கொள்முதல் விலை காரணமாக மின் கட்டணம் உயருமோ என சிலர் அஞ்சுகிறார்கள். அதனால் மின்சார கட்டணம் உயர்த்தப்படாது. இதனால் மின்சார வாரியத்திற்கு மட்டுமே செலவினும் அதிகமாக இருக்கும். இப்போது பேருந்துகளில் நாம் மகளிருக்கு இலவச பயணம் தருகிறோம். அதற்காக மற்றவர்களிடம் பணம் வசூலிப்பதில்லை. அதுபோல தான் மின்சார வாரியத்திற்கு மட்டுமே கூடுதல் செலவு!

    சென்னையில் மின்வெட்டு என்ற தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. தலைமை செயலகத்தில் மின்வெட்டு ஏற்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டது. தலைமை செயலகத்தில் மின்வெட்டு என்பது ஏற்படாது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தவறினால் மின்சாரம் இல்லை, அது சரி செய்யப்பட்டது. தமிழகத்திலும் எங்கும் மின்வெட்டு இல்லை. மின்சார சப்ளை சில காரணங்களால் தடைப்பட்டது. அவை உடனுக்கு உடனே சரி செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

    English Summary

    Tamil Nadu Electricity Minister C.T.R. Nirmal Kumar has clarified that ₹35 per unit is the maximum tender value(தமிழ்நாடு மின்சார கட்டணம்): All things to know about EB rate hike plan tamil nadu.