ஆண்களுக்கும் இலவச பேருந்து பயண திட்டம் வருமா?” - நிதி அமைச்சர் மரிய வில்சன் சொன்ன பதில்!

  • சென்னை: அரசு பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணச் சலுகை வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "இதனை முதலமைச்சரிடம் கொண்டு சேர்ப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வடசென்னை காசிமேடு பழைய ஏலக்கூடம் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய வசதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மீன் விற்பனைக்கு ஏதுவான குடையமைப்புப் பணியை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மரிய வில்சன் தனது சொந்த நிதியில் மேற்கொண்டு, அதனை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார்.

    Advertisement

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பாமாயில் கொள்முதலில் ரூ.600 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், துவரம் பருப்பு கொள்முதல் விலை குறைந்ததற்கு திமுக அரசே காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், "140 நாட்கள் ஆட்சி பொறுப்பேற்றதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நல்ல திட்டங்களை மக்களுக்கு அரசு செய்து வருகிறது" என்றார். மேலும், நல்லது நடந்தால் அதற்கு திமுக அரசுதான் காரணம் என்று கூறிக் கொள்வதும், தவறு நடந்தால் அதற்கு தவெக அரசுதான் காரணம் எனக் கூறுவதுமாக இருப்பதாக அமைச்சர் மரிய வில்சன் விமர்சித்தார்.

    Advertisement

    தாராபுரம் தவெக சத்தியபாமா குறித்து உருவ கேலி செய்யப்பட்டதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "அப்பாவுக்கும் மகனுக்கும் பெண்களை கேலி செய்வதுதான் பிழைப்பே" எனக் காட்டமாக தெரிவித்தார்.

    அரசு பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று ஆண்களுக்கும் விரைவில் இலவச பயணச் சலுகை வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், "இதனை முதலமைச்சரிடம் கொண்டு சேர்ப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Responding to a question from reporters about whether free travel concessions on government buses would be extended to men, Finance Minister Marie Wilson stated, "I will convey this to the Chief Minister."