சென்னை: தவெக கட்சியின் தலைவர் விஜய் மீதும் அவரை சுற்றியுள்ள அதிகார மையங்கள் மீதும் அதிர்ப்தியில் இருக்கிறார் நாஞ்சில் சம்பத் ; விரைவில் அக்கட்சியின் கொ.ப.செ.பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகப்போகிறார் என்கிற செய்தி கடந்த 3 நாட்களாக பரவி வருகிறது.
அவர் தனது சோசியால் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த செய்திகள் உலா வருகின்றன. ஆனால், அவர் இன்னும் விலகவில்லை. அது குறித்து முடிவும் இப்போது வரை எடுக்கவில்லை. அதேசமயம் விஜய் மீது அதிர்ப்தியில் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இதற்கு சில பின்னணிகள் இருக்கிறது.
கடந்த 2025 டிசம்பரில் தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலின் போது, தென்மாவட்டங்களில் ஒரு சீட் எதிர்பார்த்தார் . ஆனால், அவருக்கு கொடுக்கப்படவில்லை. இது குறித்து விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்த போது, தேர்தலில் சீட் ஒதுக்கப்படவில்லைன்னு வருத்தப்படாதீங்கண்ணே. நாம் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும் என சொல்லியிருக்கிறார் விஜய். இது சம்பத் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இந்த நிலையில், தவெக ஆட்சியைப் பிடித்தது, முதல்வரானார் விஜய். இதனையடுத்து, சமீப நாட்களாக, வாரிய பதவிகள் பலருக்கும் வழங்கப்பட்டது. அப்போது, இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியை எதிர்பார்த்தார் சம்பது. தனது எதிர் பார்ப்பை, முதல்வரின் ஆலோசகர்களில் முக்கியவமானவரிடமும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்திருக்கிறார் சம்பத். ஆனால், நீண்ட நாட்களாக கண்டுக்கொள்ளப்படவில்லை. கடந்த வாரம், இந்த பதவிக்கு நாட்டுப்புற கலைஞரும் பாடகருமான புஸ்பவணம் குப்புச் சாமியை முதல்வர் விஜய் தேர்வு செய்திருப்பதாக தகவல் அறிந்திருக்கிறார் சம்பத். இதனால் அதிர்சியடைந்த அவர், விஜய்யிடமும் அவரது ஆலோசகரிடமும் பேச முயற்சித்துள்ளார். ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. சம்பத்திற்கு அவர்களது தொடர்பு கிடைக்கவே இல்லை. இதனால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் சம்பத். அந்த அதிர்ச்சி அதிர்ப்தியாக மாறியுள்ளது. அதன் வெளிப்பாடு தான்... போனால் போகாட்டும் போடா... என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவு செய்தார் சம்பத். இது மட்டுமல்ல, கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்கிற வருத்தமும், இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரை யாரும் அழைக்கவில்லை என்கிற வருத்தமும் அவருக்கு இருக்கிறது. இடைத்தேர்தல் முடிந்ததும், அவரை கட்சி யிலிருந்து முக்கியமானவர்கள் சமாதானப்படுத்தினால் அமைதியாவார். இல்லை யெனில், தவெகவிலிருந்து விலகுவார் என்கிறார்கள் நாஞ்சில் சம்பத் துக்கு நெருக்கமானவர்கள். இப்படிப்பட்ட பின்னணிகள் தான் சம்பத்தின் அதிர்ப்திக்கான காரணமாக தகவல் கிடைக்கிறது. - சிறப்பு நிருபர் எழில்தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
Nanjil Sampath: போனால் போகட்டும் போடா.. நாஞ்சில் சம்பத் பதிவால் பரபரப்பு.. தவெக மீது அதிருப்தியா?
நீண்ட நாட்களாக கண்டுக்கொள்ளப்படவில்லை
இடைத்தேர்தல் முடிந்ததும் முடிவு