'ரேஷன் ஏடிஎம்' தமிழ்நாட்டிற்கும் வருமா.. விஜய்யை டேக் செய்யும் மக்கள்.. வியக்க வைக்கும் வீடியோ

  • சென்னை: இன்றைக்கு பட்டனை தட்டினால் மதுபாட்டில்கள் வரும் என்கிற அளவில் தொழில்நுட்பங்கள் பல்வேறு மாநிலங்களில் மேம்பட்டு விட்டன. ஆனால் ரேஷன் பொருட்களை மட்டும் பெறுவதற்கு அந்த சிஸ்டம் இன்று வரை இல்லை.. ரேஷன் கடை எப்போது திறப்பார்கள். எப்போது கூட்டம் குறையும் என்று மக்கள் காத்திருக்கும் நிலை தான் இருக்கிறது. இந்த சூழலில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் - பீர்கான் பகுதியில் 'அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்' என்ற புதிய தானியங்கி ரேஷன் விநியோக முறை தொடங்கப்பட்டிருக்கிறது. இது வங்கி ஏடிஎம் போலவே 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் எந்நேரமும் தங்களது ரேஷன் அரிசியைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதுற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    1990களில் பிறந்தவர்களை ரேஷன் கடைக்கு போ என்று சொன்னால், இன்றும் நடுங்கி போவார்கள்.. அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்தாலும், சிங்கப்பூரில் வேலை செய்தாலும், சென்னை சோழிங்கநல்லூரில் வேலை செய்தாலும் பழைய வாழ்க்கையை அனுபவம் கசப்பானதாகவே இருக்கும். ஏனெனில் ரேஷனில் அரிசி வாங்க வேண்டும் என்றால் ஒரு நாள் முழுக்க காத்திருக்க வேண்டும்..காலையில் அடிதடியாக இருக்கும். எப்போது ரேஷன் கடை விநியோகிப்பாளர் வருவார் என்று மக்கள் காத்துக்கிடப்பார்கள். ஆனால் மாதத்தில் 10 நாட்கள் கூட போட மாட்டார்கள். ஐந்து நாளில் தான் போடுவார்கள். அன்றே அத்தனை பேரும் லைனில் நிற்பார்கள்.

    Advertisement

    மாத கடைசியில் போனால், ஆயில் இல்லை, பருப்பு இல்லை, அடுத்த வாரம் வா என்று எல்லாம் கூறி அலைகழித்து ஏமாற்றி விற்பவர்களும் (சிலர் மட்டும்) இன்னமும் இருக்கிறார்கள். இன்னும் சில ரேஷன் கடைகளிர் வெளியூர் கார்டு என்றால், 20 கிலோ அரிசிக்கு 15 கிலோ கொடுத்து ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் எல்லா ரேஷன் கடைகளிலும் 100 ரூபாய் அளவிற்கு பொருட்களை வாங்கினால் தான் ரேஷனில் பொருளே தருவார்கள். உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ரேஷனில தரும் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும். இப்படித்தான் இருக்கிறது. முந்தைய காலத்தை ஒப்பிடும் போது, ரேஷனில் பிரச்சனைகள் பெருமளவு குறைந்துவிட்டது. ஆனால் லைனில் நிற்பது என்பது கிராமங்களில் இன்று வரை தீர்ந்தபாடில்லை..

    Advertisement

    இந்த சூழலில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் - பீர்கான் பகுதியில் 'அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்' என்ற புதிய தானியங்கி ரேஷன் விநியோக முறை தொடங்கப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம் போலவே 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் எந்நேரமும் தங்களது ரேஷன் அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் போது, ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. 24 மணி நேரமும் இயங்குவதால், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை முடிந்து வந்த பின்னர் உணவு பொருட்களை பெற்று செல்ல முடியும்.

    Advertisement

    நீங்கள் ரேஷன் கார்டு எடுத்து சென்றால், ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்த உடன், ரேஷனில் உள்ள மிஷினில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை காட்டும். அதில் உங்கள் பெயரை செலக்ட் செய்து. கைரேகை வைக்க வேண்டும். கைரேகை வைத்த உடன் இயந்திரமே அதனை சரிபார்த்துவிடும்.

    சரிபார்ப்பிற்குப் பின், அரிசி மற்றும் உணவுப்பொருட்களை தேர்வு செய்தால், துல்லியமாக அளந்து உணவு பொருட்களை உங்களுக்கு விநியோகித்துவிடும். இந்த மெஷினை கையாள ஆட்களும் தேவையில்லை, எடைக் குறைப்பும் இருக்காது: எடையைக் குறைத்து அளப்பது அல்லது மனிதத் தவறுகள் நடப்பது சாத்தியமே இல்லை. ரேஷனில் ஏமாற்றவே முடியாது

    Advertisement

    ஒரே நேரத்தில் இந்த இயந்திரத்தில் 2,500 கிலோ அரிசியைச் சேமித்து வைக்க முடியும். அரிசியை நிரப்புவதும், விநியோகிப்பதும் முழுமையாகத் தானியங்கி முறையில் நடந்துவிடுகிறது. சத்தீஸ்கரில் இந்த ஏடிஎம் மையத்தை 'ஜோதி குரூப்' என்ற உள்ளூர் பெண்கள் சுயஉதவிக் குழுவினர் நிர்வகிக்கிறார்கள். அதேபோல் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின்கீழ் இது செயல்படுவதால், வேறு மாநிலம் அல்லது வேறு மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது ரேஷன் கார்டைப் பயன்படுத்தி இங்கேயே அரிசி பெற்றுக் கொள்ள முடியும்.

    ரேஷன் விநியோகத்தை மிகவும் எளிமையாகவும், வெளிப்படையாகவும் மாற்ற ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் இந்த முன் மாதிரியான சிறந்த முயற்சிக்கு ஆதரவு அளித்துள்து. மக்கள் வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுப்பது போல, எளிதாக கைரேகை வைத்து எந்த நேரத்திலும் தங்களுக்குரிய ரேஷன் அரிசியைப் பொதுமக்கள் சுலபமாக எடுக்க முடியும் என்ற திட்டம் சத்தீஸ்கரில் வரவேற்பு பெற்றுள்ளது. நம்மூர் மக்கள் இந்த வீடியாவை பார்த்து சிலிர்த்து போய், முதல்வர் விஜய்யை டேக் செய்து, இதேபோன்ற சிஸ்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவாருங்கள் என்று கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த சிஸ்டத்திற்கு முதல்வர் ஒப்புக்கொண்டால், தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.

    English Summary

    Will 'Ration ATMs' come to Tamil Nadu? People are tagging the Chief Minister Vijay regarding this. In Chhattisgarh, these operate 24 hours a day, much like bank ATMs, allowing the public to collect their ration rice at any time. Let us look at this in detail.