Diwali: தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் சிறப்பு தொகுப்பு? தமிழக அமைச்சரவையில் முடிவு?

  • சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்குவது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களின் மனங்களை குளிர வைக்க இந்த ஒரு திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதாவது புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, வடகிழக்கு பருவமழை + எல் நினோ பாதிப்பு குறித்தும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அத்துடன் முக்கிய அஜென்டாவாக ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்பு ஆகும்.

    தீபாவளி பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் மளிகை தொகுப்பு வழங்க தவெக அரசு முடிவு செய்துள்ளதாம். தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

    இந்த விலையேற்றம் ஏழை எளிய மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் தீபாவளிக்கு பலகாரம் செய்ய தேவையான மளிகை பொருட்களை கொடுப்பது குறித்து அரசு முடிவு செய்துள்ளது.

    Advertisement
    ரேஷன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட்! 2 கிலோ ரூ.30-க்கா? தமிழக அரசு திட்டம்

    சமையல் எண்ணெய், நெய், மைதா, கடலை மாவு, ரவை, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, வெல்லம், முந்திரி- திராட்சை உள்ளிட்ட பொருட்களை கொண்ட ஒரு மளிகை தொகுப்பை வழங்க முடிவு செய்துள்ளதாம். இந்த மொத்த பொருட்களும் ரூ. 500 முதல் ரூ 600 -க்கு கிடைக்கும்.

    இதை மொத்தமாக டெண்டர் எடுத்து வாங்கினால், ரூ 100-க்கு மேல் குறைத்து வாங்கலாம் என்பதால் தமிழக அரசு டெண்டர் விட முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.29 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றால் ரூ 900 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்க வேண்டும்.

    Advertisement

    வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போதுதான் ரொக்கத் தொகையும், சிறப்பு மளிகை தொகுப்பும் வழங்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகைக்கே வழங்கலாம் என விஜய் முடிவு செய்துள்ளதால் நிதிக்காக என்ன செய்வது என அதிகாரிகள் யோசனையில் இருந்து வருகிறார்களாம்.

    English Summary

    Will Tamil nadu cabinet discuss about Diwali special grocery as gift? As rice price and groceries price increases, TVK government wants the people to make cool with these diwali gift.