இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன?

  • சென்னை: அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா ஆகியோரிடம் இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    Advertisement

    இதுகுறித்து பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று முழு மனதோடு கழகத்தில் இணைந்துள்ளோம்.

    Advertisement

    இன்று உங்களுக்கு தெரியும் பேரவை தலைவரை சந்தித்து மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் நடந்து முடிந்த 2026 தேர்தலில் போட்டியிட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்து இருக்கிறார்கள்.

    நாங்கள் எதற்கு பதவி விலகினோம் என்ற காரணத்தை இந்த நேரத்தில் மக்களிடத்தில் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகிறோம். தேர்தல் முடிவு வெளியான மே 4 ஆம் தேதிக்கு பிறகு 7ஆம் தேதி முதல் பல்வேறு பிரச்சனைகள் அதிமுகவில் நடந்தன.

    தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்தார்கள். இரண்டு நிலைப்பாடுகளை எடுத்தார்கள். திமுக உடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு. மற்றொன்று தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயலாற்றுவது.

    Advertisement

    எங்களுக்கு திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பமில்லை.
    பல்வேறு சட்டசபை உறுப்பினர்கள் மனதிலும் இதே எண்ணம்தான்.
    சிவி சண்முகம் தலைமையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடாது என்றுதான் 30 சட்டசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டோம் . தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு நிலைப்பாட்டை தான் நாங்கள் எடுத்தோம்.

    அதிமுகவில் இருந்து தான் ஆதரவு கொடுத்தோமே தவிர நாங்கள் கட்சியிலிருந்து போகவில்லை.
    ஆனால் அன்றிலிருந்து எங்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் அவதூறாக வைக்கப்பட்டன.

    எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவாக்கப்பட்ட அதிமுக 54 ஆண்டு கால வீர நடை போட்டுக் கொண்டிருக்கும் இயக்கம். அந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை.

    Advertisement

    தொகுதியில் எங்களைப் பற்றி அவதூறு பரப்பி எங்கள் கழகத்தை சார்ந்தவர்களே எங்களை பற்றி பல விமர்சனங்களை செய்தார்கள்.

    எங்கள் நிலைப்பாடு என்னவென்றால் ஏற்கனவே எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக 2021ல் எவ்வளவு சிரமப்பட்டோம் என்று எங்களுக்குத் தான் தெரியும். எங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள் ஆனால் எங்களின் 10 சதவிகித கோரிக்கைகள் கூட நிறைவேற்றவில்லை திமுக ஆட்சியில் இருந்தார்கள்.

    இந்த முறையும் நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்பட முடியாது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் 2026 இல் மக்களை சந்தித்தபோது கடந்த முறை உங்களை தேர்ந்தெடுத்தும் எந்த விஷயமும் செய்யவில்லை. இந்த முறையும் தேர்வு செய்யறோம் நீங்கள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார்கள்.

    Advertisement

    எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்கள் தொகுதி மக்கள் எங்களை வெற்றி பெற செய்து இருக்கிறார்கள் அவர்கள் உணர்வுகளை புரிந்து தான் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறோம்.

    இது எங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு தான் சுயநலத்திற்காக எடுக்கவில்லை. சுயமரியாதைக்காகவும், தொகுதி மக்கள் நலனுக்காகவும் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம்.

    முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளோம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதும் ஆட்சி அமைக்கும் பொழுது முதல் கையெழுத்து பெண்களுக்காக பாதுகாப்பா உள்ளிட்டவற்றையும் முன்னெடுப்பார்.

    இதேபோல் இப்போதைய முதலமைச்சரும் பெண்கள் நலன் சாந்தித் திட்டங்களை அறிவித்திருக்கிறார். ஒரு படி மேலாக செல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகத்தை திமுக வந்தவுடன் மூடினார்கள்.

    Advertisement

    ஏழை எளிய மக்கள் வயிறார உண்ட திட்டத்தை மூடி விட்டார்கள். நாங்கள் யாரும் கோரிக்கை வைக்காமல் முதல்வர் விஜய் பதவியேற்றவுடன் அம்மா உணவகம் மீண்டும் அமல்படுத்த அறிவித்திருக்கிறார்.

    அவர் பதவியேற்ற 15 நாட்கள் கூட ஆகவில்லை பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார். மக்கள் அனைவரும் அவரிடம் எதிர்பார்க்கிறார் நல்லாட்சி கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளோம் கட்சி தலைவர் முடிவெடுப்பார்கள். அதற்கு கட்டுப்படுவோம் என்றார். அப்போது இடைத்தேர்தலில் மீண்டும் அதே சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.

    English Summary

    Former AIADMK MLAs Maragatham Kumaravel, Jayakumar and Sathyabama, who recently joined Tamilaga Vettri Kazhagam, responded to questions on whether they would contest again from the same constituencies in the upcoming by-elections, sparking fresh political discussions in Tamil Nadu.