சென்னை: காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு அணை கட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகாவின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 3-ந்தேதி பெங்களூர் செல்லவிருக்கிறார் முதல்வர் விஜய். இதற்கு பாமக, அதிமுக கட்சிகளும் சில விவசாய அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், பெங்களூர் செல்லலாமா? வேண்டாமா? என்று குழப்ப மனநிலை யில் இருந்த விஜய்.. அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணிடம் பேசியிருக்கிறார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் அங்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடகா அரசு நீண்டகாலமாக முயற்சி வருவதும் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதுமாக இருக்கிறது. இந்த இரு மாநில நதி நீர் பிரச்சனை காவிரி மேலாண்மை ஆணையத்தில் உள்ளது. தற்போது விஜய் அரசு இதில் என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி உள்ளது.
இந்த நிலையில் பெங்களூர் செல்லலாமா? வேண்டாமா? என்று குழப்ப மனநிலை யில் இருந்த விஜய்.. அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணிடம் பேசியிருக்கிறார். பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்திப்பதால் எந்த சட்டச் சிக்கலும் வராது. தமிழத்தின் நீர் உரிமையின் படி காவிரியிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டிய பொறுப்பு கர்நாடகவுக்கு இருக்கிறது. இது குறித்து நீதிமன்ற உத்தரவுகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பு களும் நிறைய இருந்தும் அதனை கர்நாடக பொறுட்படுத்துவது இல்லை. அதனால், சம்மந்தப்பட அரசின் முதல்வரை சந்தித்து பேசுவதில் ஆரோக்கிய மான முடிவு எடப்பட்டால் நல்லது தானே ! அதேசமயம், கர்நாடகாவை வழிக்கு கொண்டு வர சட்டரீதியிலான முயற்சிகளையும் நாம் தொடர்வோம் என்று விஜய்க்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஒப்பீனியன் தந்துள்ளாராம். அந்த வகையில் பெங்களூர் செல்லலாம் என்று தான் இப்போது வரை தீர்மானித்துள்ளார் விஜய். காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடகாவுக்கு உத்தரவிட்டாலும் ஒரு போதும் அந்த ஆணையத்தின் உத்தரவை மதிப்பதே இல்லை. தமிழகத்தை ஏமாற்றி வருவதிலேயே குறியாக இருக்கிறது இதற்காகவே விஜய் பெங்களூர் செல்ல நினைக்கிறார். ஆனால், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்கள் எதிர்கொண்டால் தான் அவர் முடிவை மறு பரிசீலனை செய்வார் என்கிறார் கள். கர்நாடகா முதல்வர் சிவக்குமாரை சந்திக்கும் போது ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால் அது குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கையை முதல்வர் வாசிக்கலாம் என்றும், அதில் காவிரி நதி நீர் சிக்கலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக நடந்துள்ள காண்ட்ராவெர்சியை பதிவு செய்யலாம் என்றும் விஜய்யிடம் முக்கிய தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறாராம். பார்ட்டி ஃபண்ட் என்ற ஒற்றை வார்த்தை எப்படி திமுகவை கிடுகிடுக்க வைத்ததோ , அதேபோல காவிரி விசயத்தில் திமுக-அதிமுக இரு கட்சிகளை யும் விவரிக்கும் காண்ட்ராவெர்சி தகவல்களும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அதன் மூலம் திமுக - அதிமுக இரு கட்சிகளுக்கும் உங்களால் கிலியை ஏற்படுத்த முடியும் என்று விஜய்க்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது. - சிறப்பு நிருபர் எழில்பெங்களூர் போகலாமா வேண்டாமா?
காண்ட்ராவெர்சியை பதிவு செய்யலாம் - முக்கிய தலைவர்
பார்ட்டி ஃபண்ட் விவகாரம்