தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பதை போக போக பாருங்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

  • சென்னை: "தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பது போகப் போக தெரியும்.. பொறுத்திருந்து பாருங்கள்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனைக்கு கடந்த ஆட்சியாளர்கள் தான் காரணம் என அமைச்சர் விஸ்வநாதன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    அதற்கு பதில் அளித்த அவர், மின்சார பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம் என்றும், 6000 கோடி மின்சார உபகரணங்கள் வீணாகிவிட்டது என்று சொல்வதும் பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விட்டதாக பூனை நினைப்பது போலிருக்கிறது. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கிறார்கள் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ நடந்திருக்கிறது நான் அதை ஒப்புக்கொள்கிறார்கள்." என்றார்.

    மேலும் ஆறு மாசம் கூட தாங்காது என்று சொன்ன தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தது பற்றிய கேள்விக்கு, "தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பது போகப் போக தெரியும்.. பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்.

    Advertisement

    திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவது பற்றிய கேள்விக்கு, " இது முழுக்க முழுக்க பழி வாங்கும் நடவடிக்கை தான். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், "தற்போதைய ஆட்சியின் மீது அதிருப்தி தான் உள்ளது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், பாலியல் குற்றங்கள், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

    முதலமைச்சர் விஜய், காலையில் அலுவலகத்திற்கு வந்து மாலையில் வீடு திரும்புவது போன்ற செயல்பாடுகளால் மட்டும் ஆட்சியை நடத்த முடியாது. திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததை நம்பி வாக்களித்த மக்கள், அவர் ஆட்சியிலும் கதாநாயகனைப் போல் செயல்படுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது ஏமாற்றத்தில் இருக்கின்றனர். மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் அரசு நிர்வாகத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

    English Summary

    "Whether the TVK government will last for five years remains to be seen—just wait and watch," said DMK leader MK Stalin.