திமுக, அதிமுக, பாஜகவுக்கு ஒரே நேரத்தில் ஷாக்? பட்ஜெட்டில் விஜய் அறிவிக்கும் 2 மாஸ்டர் திட்டங்கள்

  • சென்னை: தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆட்சிக்கு வந்துள்ளது தவெக அரசு.. அதற்கேற்றபடி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.. இந்நிலையில், மேல்சபையை கொண்டு வர முதலமைச்சர் விஜய் திட்டமிடுகிறாரா? என்ற கேள்வி அதிகாரிகள் தரப்பில் சைலண்ட்டாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விஜய் மேல்சபையை அமலாக்க போகிறாரா? இதை பற்றின பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

    Advertisement

    மேல்சபை என்றால் என்ன தெரியுமா? சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை அவசரப்படாமல் மறுபடியும் ஒருமுறை ஆராய்ந்து, திருத்தங்கள் சொல்லும் ஒரு "ஆலோசனை சபை" தான் மேல்சபை.

    Advertisement

    தமிழக பட்ஜெட்

    இதில் வழக்கமான அரசியல்வாதிகளைத் தவிர்த்து டாக்டர், ஆசிரியர்கள், கலைஞர்கள் போன்ற வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். அறிவார்த்தமான சபை என்பதால், தவறான அல்லது அவசரமான சட்டங்கள் வருவதை முன்கூட்டியே இதனால் தடுக்க முடியும்.. ஆனால், 1986-ல் எம்.ஜி.ஆர் காலத்தில் இது தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டது. இதைதான் மீண்டும் கொண்டு வர போகிறாராம் விஜய்.

    தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் 5-ந்தேதி நடக்க போகிறது.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டும் அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் விவசாயத் துறைக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்கள்..

    Advertisement

    மதுபானக் கடைகள்

    இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் சில அறிவிப்புகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. அதாவது, தனியாரிடம் இருந்த மதுபான விற்பனை தொழிலை அரசு ஏற்று நடத்துவது என ஜெயலலிதா முடிவு செய்து அதனை அரசுடைமையாக்கினார். அதற்காக உருவானதுதான் டாஸ்மாக் நிறுவனம்.

    மதுபானங்களை அரசே விற்பனை செய்வதால் தானே அரசுக்கு கெட்டப் பெயர் வருகிறது? அதனால், ஜெயலலிதாவால் அரசுடைமையாக்கப்பட்ட மதுபான விற்பனையை இனி தனியார் மயமாக்குவது தொடர்பான சட்டத்திருத்தம் குறித்த அறிவிப்பை செய்து அதனை நிறைவேற்றுவது.

    மேல்சபை அமலாகிறதா

    அடுத்ததாக, தமிழக சட்டமன்றத்தில் செயல்பட்டு வந்த மேல்சபையை, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக கலைத்தார் எம்ஜிஆர்... அவரால் கலைக்கப்பட்ட அந்த மேல்சபையை மீண்டும் கொண்டு வர புதிதாக சட்ட மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது என்கிற அறிவிப்பை செய்யலாம் என்று முதல்வர் விஜய்க்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது.

    Advertisement

    காரணம், மேல்சபை வருவதன் மூலம் தவெகவின் அறிவு ஜீவிகள் பலருக்கும் வாய்ப்புகளை வழங்க முடியும். அது தவெகவின் வளர்ச்சிக்கும், அரசியல் ரீதியாக விஜய்க்கு உதவும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாம்.

    ஆனால், மேல்சபை கொண்டு வர தமிழக சட்டமன்றம் மசோதா நிறைவேற்றினாலும் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வெற்றிப்பெற வேண்டும். முக்கியமாக மத்திய அரசு இசைவு தெரிவிக்காமல் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடியாது என்கிற சட்டரீதியிலான கருத்துக்களையும் விவரித்துள்ளனர்.

    திமுக, அதிமுக, பாஜக

    அதாவது, "மேல்சபையை கொண்டு வருவதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்புவோம். நாடாளுமன்றத்தில் இதனை தாக்கல் செய்ய மத்திய அரசு முரண்டு பிடித்தால், அதை வைத்து பாஜகவுக்கு எதிரான அரசியலை செய்யலாம்.

    Advertisement

    ஒருவேளை மசோதாவை நாடாளுமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தினால் பாஜக, திமுக, அதிமுக ஆதரித்துத்தான் ஆக வேண்டும்... அல்லது அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து மசோதாவை தோற்கடித்தால் அதை வைத்து தமிழகத்தில் அக்கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும்" என்றெல்லாம் ஆலோசித்திருப்பதாக தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

    ஆக, டாஸ்மாக், மேல்சபை என இந்த 2 விஷயங்களை விஜய் தமிழ்நாட்டில் கொண்டு வந்தால், அது நிஜமாகவே ஒரு புரட்சியாக பேசுபொருளாகும்...!!

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Will Vijay's Tamil Nadu Budget 2026 Include Two Major Plans? DMK, AIADMK and BJP on Edge