30 லட்சம் பணம் தரப்போவது யார்... இர்பான் அல்லது காப்பீடு நிறுவனமா.. நீதிமன்றத்தில் வலுவான வாதம்

  • சென்னை: சென்னையை அடுத்த மறைலைநகரில் பிரபல யூடியூபரான இர்பானின் சொகுசு கார் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக விபத்து ஏற்பட்டால், அதனால் இறந்து போனவர்களுக்கு காரில் போடப்பட்டுள்ள காப்பீடு படி, காப்பீடு நிறுவனம் தான் தர வேண்டும். ஆனால் இர்பான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தவில்லை.. இர்பானின் காரை அசாருதின் என்பவர் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை.. எனவே இந்த பணத்தை காப்பீடு நிறுவனம் தந்தாலும், அதனை இர்பானிடம் வசூலிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இர்பான் தான் 30 லட்சம் பணத்தை தர வேண்டும்.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பார்ப்போம். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் தனியார் கல்லூரி காவலாளியான 55 வயதாகும் பத்மாவதி என்ற பெண் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி, சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பிரபல யூடியூபர் இர்பானின் சொகுசு கார் மோதி சம்பவ இடத்திலேயே பத்மாவதி பரிதாபமாக இறந்து போனார்.

    Advertisement

    இர்பானின் டிரைவர் முகமது அசாருதீன் என்பவர் காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதனால் இந்த விபத்து நேரிட்டதாவும் குற்றச்சாட்டு எழுந்தள்ளது. அத்துடன் விபத்தையடுத்து உரிய இழப்பீடு வழங்கக்கோரி உயிரிழந்த பத்மாவதியின் மகன் பிரகாஷ், மகள் ஷீலா, தாயார் தனபாக்கியம் ஆகியோர் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி நசீர் அலி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளர் இர்பான் மற்றும் வாகனத்தின் இன்சூரன்ஸ்தாரர் தருணி பூஜா ஆகியோர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்ற முகமது அசாருதீனின் டிரைவிங் லைசென்சை தாக்கல் செய்தார். அவர் வைத்திருந்தது காரை ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை என்றும், மோட்டார் சைக்கிள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கான ஆட்டோ ஓட்டுவதற்கான லைசென்ஸ் என்பதும் ஆவணம் மூலம் தெரியவந்தது.

    Advertisement

    முகமது அசாருதீனின் டிரைவிங் லைசென்சை தாக்கல் செய்வதற்கு இர்பான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியும் தாக்கல் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் வாகனம் இர்பான் பெயரில் இருந்தது. இர்பானின் வாகனத்துக்கு 'இண்டஸ் இன்ட் ஜெனரல்' நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு ரூ.30 லட்சத்து 69 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.
    இந்த இழப்பீட்டு தொகையை வட்டி மற்றும் செலவு தொகையுடன் வாகன உரிமையாளரான இர்பானிடம் இருந்து வசூலித்துக்கொள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உரிமை அளிக்கப்படுகிறது" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

    இதனை கவனித்து பார்க்கும் போது, நீதிமன்ற உத்தரவின்படி, இந்த தொகையை முதலில் இன்சூரன்ஸ் கம்பெனி தான் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், அதை இர்பானிடம் இருந்து வட்டியுடன் சேர்த்து வசூலித்துக் கொள்ள நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பதால் மொத்த தொகையையும் இர்பான் தான் தர வேண்டும். டிரைவர் விபத்து ஏற்படுத்தியிருந்தாலும், காரின் உரிமையாளர் இர்பான் என்பதால், தகுதியான லைசென்ஸ் இல்லாத நபரிடம் வாகனத்தைக் கொடுத்ததற்காக உரிமையாளர் என்ற முறையில் அனைத்து சட்டப்பூர்வ மற்றும் நிதி சார்ந்த சிக்கல்களையும் அவர் தான் எதிர்கொள்ள வேண்டும். விசாரணையின் போது இர்பான் தரப்பிலோ அல்லது டிரைவர் தரப்பிலோ யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவோ அல்லது லைசென்ஸ் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ இல்லை என்பது இந்த வழக்கில் இர்பானுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இர்பானிடம் பணம் உள்ளது ஓகே. ஆனால் பணமே இல்லாத ஏழை யாராவது வாகனத்தை ஓட்டி இதே போல் விபத்தை ஏற்படுத்தினால், வசூலிக்கவே முடியாது. அப்படியான சூழல்களில், பொதுவாக நீதிமன்றங்கள் என்ன செய்யும் என்றால், காப்பீடு நிறுவனம் கட்டாயம் பணத்தை தந்துவிட வேண்டும். பணத்தை சாதாரண கார் உரிமையாளரிடம் வசூலிக்க முடியாத பட்சத்தில் அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடும். காரை பறிமுதல் செய்துவிடும். சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடும்.

    English Summary

    Maraimalai Nagar luxury car incident: Will YouTuber Irfan or the insurance company pay the ₹30 lakh? Strong arguments presented in court