சென்னையில் பிரியாணி அண்டாவில் பெண் உடலை வேகவைத்த சம்பவம்.. மணிப்பூரில் சிக்கிய குற்றவாளி! பரபர தகவல்

  • சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் பிரியாணி அண்டாவில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவில் வேகவைத்துவிட்டு தப்பி சென்றவர்களை கடந்த 10 நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அசாமை சேர்ந்த மாணிக் லத்தின் உஸ்கர் என்பவரை மணிப்பூரில் வைத்து கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

    Advertisement

    சென்னை கூடுவாஞ்சேரியில் இளம்பெண்ணை கொலை செய்து உடலை பிரியாணி அண்டாவில் வேகவைத்துவிட்டு வடமாநில தம்பதி எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement


    துண்டு துண்டாக மனித உடல்

    சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த மாத துவக்கத்தில் அதாவது 4 ஆம் தேதி டெல்லிக்கு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சடலம் ஒன்று சிக்கியது. மனித உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் உடல் சுற்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர்..

    பிளாஸ்டிக் கவரில் இருந்த ஜவுளி கடையின் பெயரை வைத்து விசாரணை சென்னை பக்கம் திரும்பியது. சென்னை செண்ட்ரல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்தது. சடலம் இருந்த பையை ஒரு பெண்ணும் ஆணும் எடுத்து வந்த காட்சிகளை பார்த்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்தே அவர்கள் எங்கிருந்து வந்தனர்? என்பதை விசாரித்தனர். இதில், அந்த ஜோடி ஆட்டோ ஒன்றில் சென்றதை கண்டுபிடித்தனர்.

    Advertisement

    பிரியாணி அண்டாவில் உடல்

    அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், குறிப்பிட்ட அந்த ஜோடியை இறக்கிவிட்ட வீட்டை ஆட்டோ டிரைவர் காட்டினார். அந்த வீடு பூட்டி கிடந்த நிலையில் பூட்டை உடைத்து போலீசார் ஆய்வு செய்ததில், வீடு முழுவதும் ரத்த கறையாகவும் பிரியாணி அண்டாவில் உடலை வேகவைத்து போடப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

    உடனடியாக வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது, வீட்டில் ஒடிசாவை சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் என்பவரும் அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைது நிஷா என்ற இளம்பெண் என மூன்று பேர் தங்கியிருந்துள்ளனர். திடீரென அந்த ஜோடி வீட்டை பூட்டிவிட்டு கிளம்பும் போது, ஹவுஸ் ஓனர், ஹயத்துன்நிஷா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், "என் அப்பா இறந்துவிட்டார், அதனால் அக்கா ஹயத்துன்நிஷா முதலில் சென்றுவிட்டார். நாங்கள் இப்போது கிளம்புகிறோம். ஊரிலிருந்து திரும்பி வந்ததுமே வாடகை தந்துவிடுகிறோம்" என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

    Advertisement

    முக்கிய குற்றவாளி கைது

    கொலை செய்யப்பட்ட ஹைதுல் நிஷா தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். கொலையாளிகளுடன் தங்கியிருந்த நிலையில் காணாமல் போனதாக அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். இதையடுத்து கொலை செய்யப்பட்டது ஹைது நிஷா என்பது உறுதியானது. பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்ய பீகார் விரைந்தனர். 10 நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான மாணிக் லத்தின் உஸ்கர் மணிப்பூரில் கைதாகியுள்ளார்.

    அவரை நீதிமன்றத்தில் டிரன்சிஸ்ட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வரும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கைதாகியுள்ள லஷ்கரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு இந்த கொலை சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

    English Summary

    Chennai: The prime suspect involved in the incident where a woman's body was recovered from a biryani cauldron in Kooduvancheri, Chennai, has been arrested in Manipur. Police had been searching for the past 10 days for the individuals who murdered the woman, boiled her body in the biryani cauldron, and fled. Kooduvancheri police arrested Manik Lathin Uskar, a native of Assam, in Manipur. A search is underway for another suspect.