அந்த வீடியோவில் இருப்பது கீர்த்தனா இல்லை.. மலேசியா பெண் வீடியோ மூலம் விளக்கம்

  • சென்னை: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. குறிப்பிடத்தக்க சில திட்டங்கள் அறிவித்தாலும், முதலமைச்சர் தவெக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். அமைச்சர் கீர்த்தனா மாடர்ன் உடை அணிந்து காரில் இறங்குவதாக வீடியோ பரவியது. அதில் இருப்பது நான் இல்லை என கீர்த்தனா விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என மலேசியா நாட்டு பெண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து மலேசியா பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் சில விளக்கமளிக்க வேண்டும். சுருக்கமாக முடித்துவிடுகிறேன். அமைச்சர் இந்த மாதிரி டிரஸ் போடலாமா என கேட்கின்றனர். வீடியோவில் இருப்பது அமைச்சரல்ல. அது நான். இப்படி கேட்பவர் யாரும் மலேசியர்கள் இல்லை என நினைக்கிறேன். அதனால் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. நான் போலீஸிலும் புகார் அளித்துள்ளேன். இந்த பிரச்சனையால் நான் வேதனையடைந்தேன். அந்த வீடியோவில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

    Advertisement

    வீடியோவில் என்ன பிரச்சனை

    இதனால் நான் மிகுந்த வேதனையடைந்தேன். நான் காரில் இருந்து இறங்கி வேலைக்கு செல்கிறேன். இதை யாரோ வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து நான் உரிய நடவடிக்கை எடுப்பேன். இதை ஒரு பிரச்சனையாக எடுத்து இந்தியாவில் உள்ள அமைச்சரை விமர்சிக்கிறார்கள். அதில் சிலர் நல்ல விதமாகவும், சிலர் நெகடிவாகவும் கமென்ட் செய்கிறார்கள். எனக்கு ஆதரவளித்தவருக்கு மிகவும் நன்றி. சிலர் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தவறாகவும் பேசுகிறார்கள்.

    பலர் ட்ரோல் செய்கிறார்கள். மோசமாக எடிட் செய்து அவதூறு பரப்புகிறார்கள். இது என்னை பாதித்தாலும் நான் உடைந்துவிடவில்லை. வீடியோ வைரலாகி என்ன ஆகப்போகிறதோ என பயந்தேன். என் உறவினர்கள், நண்பர்கள் இது உன் தவறு இல்லை. நீ கவலைப்பட வேண்டாமென கூறினார். பலர் நாகரீகமாக உடை அணியுங்கள் என்கின்றனர். நான் என்ன நாகரீகமாக உடை அணியவில்லை என்று தெரியவில்லை. நான் மலேசியாவில் வேலைக்கு செல்கிறேன்.

    Advertisement

    பரப்ப வேண்டாம்

    என் வேலைக்கு ஏற்ற உடையை அணிகிறேன். இந்த உடை அணிந்ததால் தான் வீடியோ போட்டதாக கூறுகிறார்கள். நான் எப்படி உடை அணிந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள். அந்த வீடியோவில் என்னை கூறவில்லை. அந்த வீடியோவை பரப்பி தவறாக பேசுவதை நிறுத்துங்கள். வீடியோ வைரலாகிவிட்டது. செய்தி தொலைக்காட்சியில் வந்துவிட்டது. ரிப்போர்ட் செய்து வீடியோ எடுக்க சொல்வதில் பயனில்லை. அது எனக்கு பிடிக்கவுமில்லை.

    நான் இந்த விஷயத்தில் இருந்து நகர்கிறேன். அந்த அப்டேட்டை இனி சமூகவலைதளங்களில் பதிவிட போவதில்லை. என்னை தொடர்பு கொண்டு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. முதலில் நான் இதை ஜோக்காக எடுத்தேன். நாளடைவில் இது சீரியஸ் ஆனது. இதைப்பற்றி பேசுவதற்கு நான் டிப்ரெஸன் ஆகிறேன். இது எல்லாம் முக்கியமான செய்தியா என்று கேள்வி எழுந்துள்ளது. மலேசியா போலீஸில் புகாரளித்து தேவையான நடவடிக்கை எடுத்துள்ளேன். இப்போதும் அந்த வீடியோவை பலர் பகிர்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    A Malaysian woman has clarified that she was the person in the viral video and not Minister Keerthana, saying she has filed a police complaint over its circulation.