ஹைகோர்ட் போட்ட போடு.. திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் வெற்றியை எதிர்த்த மனுவை வாபஸ் பெற்ற பெண்

  • சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் வெற்றிக்கு எதிராகவும், வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் வாக்காளர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கண்டித்ததோடு, ஃபைன் போடுவோம் என்று வார்னிங் செய்ததால் அந்த பெண் மனுவை வாபஸ் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் 2011ல் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் மார்கண்டேயன். பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த 2021ம் ஆண்டில் திமுக சார்பில் 2வது முறையாக எம்எல்ஏவானார். சமீபத்திய தேர்தலில் மீண்டும் திமுகவில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட 3வது முறையாக எம்எல்ஏவாகி உள்ளார்.

    Advertisement

    கடந்த ஜூலை மாதம் மார்கண்டேயன் சர்ச்சையில் சிக்கி கைதானார். தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் அவர் வெளியே உள்ளார்.

    இந்நிலையில் தான் பெண் வாக்காளர் விமலா தேவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்கண்டேயன் வெற்றிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார். மார்கண்டேயன் தனது சொத்து விவரங்களை மறைத்து வெற்றி பெற்றதால் அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக விமலா தேவி தாக்கல் செய்த மனுவில், ''நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் மார்கண்டேயன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்எல்ஏவாக உள்ளார். ஆனால் மார்கண்டேயன் மற்றும் அவரது மனைவி ரெபேக்கா அனிதா ஆகியோர் சொத்து விபரங்களை மறைத்துள்ளனர். அசையா சொத்துகள் குறித்த விவரங்களை அவர்கள் சரியாக தெரிவிக்கவில்லை.

    Advertisement

    மார்கண்டேயன் அனுபவம் வாய்ந்த எம்எல்ஏவாக இருந்தாலும் கூட வேண்டும் என்றே சொத்து விவரங்களை மறைத்துள்ளார். இப்படி சொத்துகளை மறைப்பது என்பது தேர்தலை பொறுத்தமட்டில் குற்றமாகும். இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் னெ்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் ஆளுநரிடம் மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விளாத்திகுளம் தொகுதியில் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி எஸ்ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''தேர்தலில் ஒருவரின் வெற்றியை எதிர்த்து மனுத்தாக்கல் செயவ்தற்கான 45 நாள் கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. அதோடு இந்த குறிப்பிட்ட விஷயத்தில் வேறு சட்ட ரீதியான தீர்வு ஏதுவும் இல்லை.

    Advertisement

    இதனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் அபாராதம் விதிக்க நேரிடும்'' என்று கூறினர். இதையடுத்து மனுதாரர் விமலா தேவி தரப்பு மனுவை திரும்ப பெற்றார். இதனால் மார்கண்டேயனுக்கு எதிராக வந்த தேர்தல் வெற்றி தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

    English Summary

    A woman voter filed a petition in the Madras High Court challenging the election of Markandayan, the DMK MLA for the Vilathikulam constituency in Thoothukudi district, and seeking to have his victory declared invalid. However, she withdrew the petition after the High Court reprimanded her and warned that a fine would be imposed.