ஓடும் பஸ்ஸில் பெண் பயணியால் தள்ளிவிடப்பட்ட கண்டக்டர்.. ஹைதராபாத்தில் வீணாகிய 10 நாள் போராட்டம்

  • ஹைதராபாத்: தெலங்கானா மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்த பெண் நடத்துநர் பிரவலிகா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக ஓடும் பேருந்தில் பெண் பயணி ஒருவர் தள்ளிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பிரவலிகா கடந்த அக்டோபர் 25ம் தேதி தொடங்கி 10 நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    தெலங்கானா மாநிலம் மானுகுருவில் அரசு போக்குவரத்துககழக பணிமனையில் நடத்துனறாக பணியாற்றி வந்தவர் தான் 24 வயதான பிரவலிகா பத்ராத்ரி. இவர் நடத்துனராக உள்ள அரசு பேருந்து, மானுகுருவிலிருந்து பத்ராசலம் நோக்கி 'பல்லே வெலுகு'என்ற ஊரை நோக்கி சென்றது. இதில் மௌனிகா என்ற பெண் பயணி தனது மகனுடன் ஏறினார்.

    Advertisement

    அப்போது பேருந்து கோத்தகுடம் மாவட்டம் அஸ்வாபுரம் மண்டலத்தில் உள்ள மிட்டகுடெம் கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. ​​சிறுவனுக்கான பயணக் கட்டணம் மற்றும் 100 ரூபாய் நோட்டிற்கான மீதிப் பணம் தொடர்பாக நடத்துநர் பிரவலிகாவுக்கும் அந்தப் பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில்லறை இல்லாததால், நடத்துநர் பிரவலிகா பயணச்சீட்டை வழங்கிவிட்டு, மீதிப் பணத்தை பிறகு பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

    பேருந்து மிட்டகுடெம் பகுதியை அடைந்தபோது, ​​இந்த வாக்குவாதம் தீவிரமாகி உள்ளது. அப்போது, ​​அந்தப் பெண் பயணி பிரவலிகாவை ஓடும் பேருந்திலிருந்து வெளியே தள்ளிவிட்டதா சொல்லப்படுகிறது. சாலையில் விழுந்த பிரவலிகாவின் வலது காலின் மீது பேருந்தின் பின் சக்கரங்கள் ஏறியதில், அவரது கால் நசுங்கியது. அவரது இடது காலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது.

    Advertisement

    முதலில் பத்ராசலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நடத்துநர் பிரவலிகா , பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட பெண் பயணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் கைது செய்தனர்.

    பாஜக எதிர்ப்பு.. மும்பை மாநகராட்சியால் நீக்கப்பட்ட நடிகை வீடியோ.. மீண்டும் பதிவிட ஐகோர்ட் உத்தரவு

    இதனிடையே நடத்துநர் குண்ட்லா பிரவலிகா , கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    பிரவலிகாவின் மறைவு குறித்து தெலங்கானா மாநில போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்ததாகவும் தெரிவித்தார். பிரவலிகாவுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்ததாகவும், அவர் குணமடைவார் என்று நம்பியிருந்ததாகவும் கூறினார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அமைச்சர், அரசும் போக்குவரத்து கழகமும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்று உறுதியளித்தார். மேலும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    ஆசிரியர் கி.வீரமணி பையனுக்கு விநாயகர் கோவிலில் என் தலைமையில் காதல் கல்யாணம்.. கராத்தே தியாகராஜன்
    Advertisement

    தெலங்கானா மாநில அரசு போக்குவரத்துக்கழக (TGSRTC) துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நாகிரெட்டியும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்; இது போக்குவரத்து கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார்.

    English Summary

    Telangana RTC woman conductor Pravalika dies after 10 days of treatment. Manuguru depot woman conductor Gundla Pravalika, who suffered critical injuries after allegedly being pushed out of a moving Telangana State Road Transport Corporation (TGSRTC) bus by a woman passenger following an argument over ticket fare and change, died while undergoing treatment at a private hospital in Hyderabad on Tuesday night.