சென்னை: கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. விசா இல்லாமல் குறிப்பிட்ட நாட்கள் வரை சில நாடுகளில் தங்க பல்வேறு நாடுகளும் அனுமதி அளிக்கின்றன. ஆனால், பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இருந்தாலும் இந்தியர்கள் இரண்டு நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லமாலயே பயணம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?
ஆமாங்க உண்மைதான். இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளாக உள்ள நேபாளம் மற்றும் பூடான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இந்தியர்கள் சென்று வர பாஸ்போர்ட் அவசியம் இல்லை. பிறகு அந்த நாட்டிற்கு எந்த பெர்மிஷனும் இல்லாமல் போக முடியுமா? என்று நினைக்கலாம். இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம். இந்தியாவின் ஐந்து மாநிலங்கள் நேபாளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவில் இருந்து சாலைமார்க்கமாகவே நேபாளத்திற்கு சென்று வர முடியும். அவ்வளவு ஏன் இரண்டு நாடுகளுக்கும் இடையே ரயில்கள் கூட இயங்குகின்றன. பீகாரின் ஜெய்நகர் டூ நேபாளத்தின் குர்தா வரை டெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியர்கள் நேபாளம் செல்ல வேண்டும் என்றால், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்து இருப்பது கட்டயாம். புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அனுமதிக்கப்படுகிறது. ஆதார் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கிடையாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்து இருப்பதே சிறந்தது. இந்தியாவின் மற்றொரு நெருங்கிய அண்டை நாடாக இருப்பது பூடான். முடியாட்சி நடைபெற்று வரும் பூடான் இந்தியாவில் அசாம், அருணாசல பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களோடு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. பூடானுக்கு சென்று வர இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் கிடையாது. அதேபோல, விசாவும் தேவை கிடையாது. ஏதேனும், அந்த நாட்டிற்கு செல்ல விரும்பினால் குறைந்தது 6 மாத கால செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது இந்திய வாக்காளர் அட்டை என ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்து இருக்க வேண்டும். குழந்தையாக இருந்தால் அசல் பிறப்பு சான்றிதழ் உடன் கொண்டு செல்ல வேண்டும். பூடானிற்கு செல்ல விசா தேவையில்லை என்றாலும் அந்த நாட்டில் தங்கியிருக்க ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1,200 நிலையான வளர்ச்சி கட்டணமாக செலுத்த வேண்டும். சாலை வழியாக வருபவர்கள் நுழைவு அனுமதி பெற்ற பிறகே நாட்டிற்குள் நுழைய முடியும். விமானத்தில் வந்தால் விமான நிலையத்தில் இதற்கான அனுமதியை பெற வேண்டும். பயண விதிகளை உள்ளூர் நிலவரங்களுக்கு சில நேரம் மாற்றப்படுவதால், இந்த நாடுகளுக்கு செல்ல விரும்பினால் அந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ தளங்களில் ஒருமுறை உறுதி செய்து கொள்வது அவசியம் ஆகும்.நேபாளம்:
பூடான்:
கட்டணம் செலுத்த வேண்டும்