தைரியமா இருமா”.. ரிசல்ட்டுக்கு பிறகு தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவிடம் போனில் பேசிய ஸ்டாலின்!

  • சென்னை: "ஏற்கனவே நாம வாங்குன ஓட்டுகள வாங்கிட்டோம். ஒன்னும் தப்பில்ல. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, மக்களுக்கு நேர்ல போய் நன்றி சொல்லு. இதுல உன்னோட உழைப்பு இருக்கு. தைரியமாவும், சிறப்பாவும் செயல்பட்டீங்க. வாழ்த்துகள்" என தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

    Advertisement

    தாராபுரம், மதுராந்தகம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 9) எண்ணப்பட்டன. இதில் 2 தொகுதிகளிலுமே தவெக வெற்றி பெற்ற நிலையில், இரண்டிலும் திமுக வேட்பாளர்கள் 2ஆம் இடம் பிடித்தனர்.

    Advertisement

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

    தாராபுரம் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சில சுற்றுகளில் அதிமுக முன்னிலை வகித்தது. ஆனால் 5வது சுற்று முதல் அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக தொடர்ந்து முன்னிலை பெற்றது. பின்னர் அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இறுதியில், திமுக வேட்பாளர் சுகன்யாவைவிட 9,471 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்.

    Advertisement

    இரண்டாம் இடம் பிடித்து தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யாவிடம், திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகப் பேசினார். அப்போது, "ஏற்கனவே நாம வாங்குன ஓட்டுகள வாங்கிட்டோம். ஒண்ணும் தப்பில்ல. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு, மக்களுக்கு நேர்ல போய் நன்றி சொல்லு. இதுல உன்னோட உழைப்பு இருக்கு. தைரியமாவும், சிறப்பாவும் செயல்பட்டீங்க. வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

    "இன்னும் கொஞம் வாக்குகள் அதிகமா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்" என தயங்கியபடியே சொன்னார் சுகன்யா. அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், "தைரியமா இருமா.." எனக் கூறித் தேற்றினார். இதையடுத்து, நாளை சென்னைக்கு உங்களைச் சந்திக்க வருகிறேன் என மு.க.ஸ்டாலினிடம் கூறினார் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா.

    English Summary

    “Take some rest for a while, then go in person to thank the people. You performed boldly and excellently. Best wishes,” DMK President MK Stalin told Dharapuram DMK candidate Suganya over the phone.