பாட்டிலுக்கு 10 ரூபாய்னு சொன்னீங்க.. இப்போ நீங்க வாங்காம இருக்கீங்களா.. கேஎன் நேரு - விக்னேஷ் காரசார வாதம்!

  • சென்னை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்னு சொன்னீங்க.. இப்போ நீங்க வாங்காம இருக்கீங்களா.. உங்க காலத்தில சொன்னா ஜஸ்டிபை.. எங்க காலத்தில் வாங்குனா ஊழலா? என்று முன்னாள் அமைச்சர் கே என் நேரு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் விக்னேஷ், 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ய திமுக தான் காரணம் என்றும், அவங்களை 10 ரூபாயை வாங்க தூண்டியது யார்? ஏன் உங்கள் ஆட்சியில் இதை தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் விவகாரம் குறித்து கேஎன் நேரு மற்றும் அமைச்சர் விக்னேஷ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

    Advertisement

    கே என் நேரு கேள்வி

    பாட்டிலுக்கு 10 ரூபாய்னு சொன்னீங்க.. இப்போ நீங்க வாங்காம இருக்கீங்களா..
    நீங்க என்ன செய்றீங்க ஜஸ்டிபை பண்ணுறீங்க. சாக்கு குடுக்கவில்லை.. சணல் கொடுக்கவில்லை. கூலி கொடுக்கல.. அதனால் அந்த 10 ரூபாயை வாங்கியிருக்காங்க அப்படின்னு ஜஸ்டிபை பண்ணீங்க.. நான் கேட்கிறேன்.. உங்க காலத்தில சொன்னா ஜஸ்டிபை.. எங்க காலத்தில் வாங்குனா ஊழலா?

    அமைச்சர் விக்னேஷ் பதில்

    இந்த பத்து ரூபாய் விஷயத்தை விளக்க உரையில் சொல்ல நினைத்தேன். அண்ணன் கேட்டதற்படி இப்போது விளக்குகிறேன். பாட்டிலுக்கு 10 ரூபாயை பொறுத்தவரைக்கும் கொரோனாவுக்கு முன்பு வரை பாட்டிலுக்கு ரூ.2 வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் 5 ரூபாயாக மாறிச்சு. பிறகு 10 ரூபாயாக மாறிச்சு. வெறும் 2 ஆயிரம் ரூபாயில் டாஸ்மாக்கில் ஊழியர்களை வேலையில் பணியமர்த்தினார்கள்.

    Advertisement

    ஊதியம் உயர்வு என அவர்கள் கேட்டு வரும் போது 500, 1000, அதிகபட்சமாக ஒரு இரண்டு முறை 2,000 கொடுத்து இருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த ஊழியர்களுக்கு இப்போது வயது 53. ஆனால் அந்த ஊழியரின் வருமானம் நாங்க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 14 ஆயிரம் தான்.. பிடித்தம் எல்லாம் போக 11,000 தான் சம்பளம். இதை வைத்து அவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்.

    திமுக தான் காரணம்

    11 ஆயிரம் சம்பளம் கொடுக்கிற நீங்க, சரியாக அந்த கடைக்கு கரண்ட் பில் கட்ட வேண்டும் அல்லவா.. கடைக்கு வாடகை கொடுக்க வேண்டும் அல்லவா.. அந்த கடையில் கூட்டி பெருக்குபவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் அல்லவா. இது எல்லாம் கொடுக்க மாட்டீங்க.. குடிப்பதற்காவது தண்ணீர் அங்கு வைத்தீர்களா?.. இங்கு என்ன முறைகேடு நடந்தது என்ன என்றால், என்ன மதுபானம் வேண்டும் என்பதை நுகர்வோர்கள் தீர்மானிக்க முடியாது.

    Advertisement

    ஆட்சியாளர்கள் சொல்வதை தான் நுகர்வோர்கள் வாங்க வேண்டும். டாஸ்மாக் துறையை சீரமைப்பது என்பது சாதாரணமான காரியம் கிடையாது. 20 வருஷமாக ஊறிப்போய் வேரூன்றி இருக்கிறது. 10 ரூபாயை தடுக்கும் போது, ஒரு கடையை சீரமைக்கும் போது 10 ஆயிரம் தேவைப்படுகிறது. அவங்களை 10 ரூபாயை வாங்க தூண்டியது யார்? ஏன் உங்கள் ஆட்சியில் இதை தடுக்கவில்லை.

    நாங்க 5 ரூபாய் தான் வாங்கிக்கொண்டு இருந்தோம். அதிகாரிகள் தான் அதிகமாக வாங்க சொன்னாங்க.. ஊழலை பற்றி நான் எதுவும் இப்போது பேச விரும்பவில்லை. மக்களுக்கு நல்லது செய்யனும். இந்த துறையை சரி செய்யனும் அது தான் என் எண்ணம். 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ய திமுக தான் காரணம். என்று கூறினார்.

    Advertisement

    கேஎன் நேரு:

    செந்தில் பாலாஜி இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை கொடுத்து இருக்கார். 10 ரூபா.. 10 ரூபா என்றும்.. ஊழல் பண்ணினோம் என்று சொன்னீங்க.. இப்போது தெரிகிறதா இந்த 10 ரூபாய்க்கு என்ன செலவு என்று? நீங்களே (அமைச்சர் விக்னேஷ்) இதற்கான விளக்கத்தை சொல்லிட்டீங்க.. ஆக 10 ரூபாய் நாங்கள் வாங்கவில்லை. அங்க வேலை செய்தவர்கள் வாங்கியிருக்கிறார்கள். பிறகு எப்படி எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வீர்கள். எப்படி இது?

    அமைச்சர் விக்னேஷ்:

    அண்ணன் என்ன சொல்ல வருகிறார் என்றால், அந்த செலவுக்காக தான் அவங்க 10 ரூபா வாங்கினாங்களே தவிர நாங்க வாங்கல.. அதை எங்களுக்கு கொடுக்கல என்று சொல்ல வருகிறார். 5 ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தபோது அதனை 10 ரூபாயாக வாங்க சொன்னதே அந்த துறை சார்ந்த நிர்வாகிகளும், துறை சார்ந்த அமைச்சரும் தான் என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.

    Advertisement

    கே என் நேரு:

    சம்பளம் பத்தல அதனால் தான் அவங்க வாங்கினார்கள் என்று அமைச்சர் தான் சொல்கிறார்.. ஆனால் எங்களை எதற்காக ஊழல் ஊழல் என்று சொல்ல வேண்டும் என்று பேசினார்.

    English Summary

    "You spoke about the ₹10 surcharge per bottle at TASMAC—are you not paying it now? Is it justified when it happens during your tenure, but considered corruption when it happens during ours?" asked former Minister K.N. Nehru. Responding to this, Minister Vignesh stated that the DMK was the reason for the additional ₹10 charge; he questioned who had instigated the collection of that extra ₹10 and asked why the DMK had not prevented the practice during their own administration.