சென்னை ஏசி பேருந்தில் இளம்பெண் ரகளை.. கத்தி கூச்சலிட்டு அட்ராசிட்டி! போலீசிடம் ஒப்படைத்த பயணிகள்

  • சென்னை: சென்னையில் நேற்று இரவு ஏசி மின்சார பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பஸ்சில் இருந்த ஒவ்வொரு பயணிகளிடமும் வம்பிழுத்த அந்த பெண் தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார். இதனால் பொறுமை இழந்த சக பயணிகள் மற்றும் நடத்துனர், டிரைவர் அந்த பெண்ணை போலீசிடம் ஒப்படைத்தனர்.

    Advertisement

    சென்னை அசோக் நகர் செல்லும் பேருந்தில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெட்டிசன்கள் பலரும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

    Advertisement

    அரசு பஸ்சில் ரகளை செய்த இளம்பெண்

    சென்னை மாநரக போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏசி மின்சார பேருந்து ஒன்றில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்துக்குள் திடீரென இளம்பெண் ரகளையில் ஈடுபட்டார். தட்டிக்கட்ட பயணிகளிடமும் ஆவேசமாக சண்டையிடுவது போல பேசிக்கொண்டு, பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து கொண்டு பயணிகளிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

    நான் கேப்பில் போக வேண்டியவள்.. இங்கே ஏன் வந்தேன் என்று கத்தி கூச்சல் போட்டார். அந்த பெண் போதையில் இருந்ததை கவனித்த பெண் ஒருவர், இளம்பெண்ணை தட்டிக்கேட்டார். ஆனால் அவரது அறிவுரையை மீறி அந்த பெண், பயணியை தாக்க முற்பட்டார். அதோடு நிற்காமல் பேருந்துக்குள் இருந்த பயணிகள் ஒருவர் விடாமல் வம்பிழுத்த அந்த பெண் ஒருமையிலும் பேசினார்.

    Advertisement

    போலீசார் விசாரணை

    இதனால் பொறுமை இழந்த பயணிகள் சிலர் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். எல்லை மீறி போன அந்த பெண் பயணியால் நொந்து போன சக பயணிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து போயினர். ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் விட்டால் சரிவராது என்று உணர்ந்த பேருந்து டிரைவரும், நடத்துனரும் இளம்பெண்ணை இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசாரும் அந்த பெண் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. சென்னையில் பேருந்துக்குள் இளம்பெண் பயணி போதையில் அநாகரீமாக நடந்து கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. சென்னை அசோக் நகர் செல்லும் பேருந்தில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    நெட்டிசன்கள் வலியுறுத்தல்

    சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். சில நெட்டிசன்கள் அந்த பெண் கடுமையான மன உளைச்சலில் இதுபோன்று நடப்பது போல தெரிகிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.

    English Summary

    Chennai Footage of an intoxicated young woman creating a scene while traveling on an AC electric bus in Chennai last night is going viral on social media. She picked quarrels with fellow passengers and used abusive language. Eventually, the passengers, conductor, and driver lost their patience and handed her over to the police.