அவ்வளவு வெறி.. கிணற்றில் விழுந்த நண்பனை காப்பாற்றாமல் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்கள்.. பாருங்க

  • சென்னை: சாதாரணமாக இன்று ஒரு ரீல்ஸ் வீடியோவை காண நேர்ந்தது. அந்த வீடியோவில் சில இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க போனார்கள் என்று தெரிகிறது. ஒருவர் உள்ளே தவறிவிழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் வெளியேவர முடியாமல் சிக்கி கொண்டிருக்கிறார். அதனை சினிமா வடிவில் ரீல்ஸ் ஆக தொடர்ந்து பதிவேற்றி உள்ளார்கள் அவரது நண்பர்கள். சீரியலில் ஒரு எபிசோட் முடிந்து இன்னொர எபிசோடுக்கு காத்திருப்பது போல், அடுத்த ரீல்ஸ்க்கு காத்திருக்குமாறு கூறி அதிர வைத்தனர். இதனை பார்த்த பலரும் அந்த இளைஞர்களை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

    Advertisement

    இன்றைக்கு 2 கே கிட்ஸ், ஜென்சி கிட்ஸ் இளைஞர்களிடையே ரீல்ஸ் மோகம் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மீடியாக்களுக்கு இருந்த அதே வியூஸ் வெறி இன்று சமூக ஊடகங்களில் அதிக பாலேயர்ஸ் வேண்டும் என்று நினைக்கும் சில இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் உள்ளது. எல்லாவற்றையும் கண்டன்ட் ஆக பார்க்கும் அணுகுமுறை, பாராம்பரிய ஊடகங்களில் உள்ளவர்களுக்கு கூட இருந்தது கிடையாது. அவர்கள் செய்தியை செய்தியாக மட்டுமே பார்ப்பார்கள். எதை காட்ட வேண்டும், எதை காட்டக்கூடாது.. அதனை எப்படி அணுக வேண்டும் என்கிற குறைந்தபட்ச நேர்மையுடன் செய்தியை செய்தியாளர் என்கிற கோணத்தில் பார்ப்பார்கள். ஆனால் இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் என்று கூறி கொண்டு வியூஸ் அதிகரிக்க விரும்பும் இளைஞர்கள் இதுபற்றி எல்லாம் எந்த கவலையும் படுவது இல்லை.. எல்லாவற்றையும் வியூஸ் ஆக பார்ப்பது அதிகரித்துள்ளது.

    Advertisement

    சமூக ஊடகங்களில் யாரோ ஒரு சிலர் சம்பாதிக்கிறார்கள். மற்றவர்கள் லைக்ஸ் மற்றும் வியூஸ் மற்றும் பாலோவர்ஸ்களை உயர்த்த தவறான செயல்களை செய்கிறார்கள். இன்ஸ்டா அல்காரிதமும் இவர்களை ஊக்குவிக்கவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது எங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது என்றால், பல இளைஞர்களை இன்ஸ்டாவிற்கு அடிமையாக்கும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது. அதேபோல் மனிதநேயம் என்பது சிறிதும் இல்லாமல், கோபப்படுத்தும் அளவிற்கு கொண்டு போய் நிறுத்தி உள்ளது. அப்படியான ஒரு ரீல்ஸ் ஒன்றை அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் கண்டித்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவில், இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்றாமல், அங்கு சுற்றியிருந்த இளைஞர்கள், ஹாய் காய்ஸ், நம்ம நண்பர் கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.

    Advertisement

    அவரை காப்பாற்ற போன நண்பரும் தவறி விழுந்துவிட்டார். இருவரையும் காப்பாற்ற எங்களால் முடியவில்லை என்று கேசுவலாக கூறுகிறார் இளைஞர் ஒருவர். தொடர்ந்து இணைப்பில் இணைந்திருங்கள் என்று கூறியவர், அதன்பின்னர், எங்களால் காப்பாற்ற முடியாததால் மேலே நின்று வேடிக்கை பார்க்கிறோம் என்கிறார். தொடர்ந்து தீயணைப்பு துறையினரை அழைத்துள்ளோம். வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேசுவலாக மீண்டும் கூறுகிறார்.

    பின்னர், அவர்களை தீயணைப்பு ஊழியர்கள் காப்பாற்றிய வீடியோவில், குணா படத்தில் கமல்ஹாசன் அபிராமியை காப்பாற்றும் போது வரும்.. என்ன காயம் என்ற போதிலும்.. என் மேனி தாங்கி கொள்ளும் என்று இளையராஜா பாடலை ஒலிக்க விட்டு தத்ரூபமாக அப்படியே வீடியோவை எடுத்துள்ளனர். பின்னர் காப்பாற்றப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்த உடன் அவருடனும் ரீல்ஸ் போடுகிறார்.. இப்படியாக ரீல்ஸ் முடிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.

    English Summary

    tamil nadu : Youths posted Instagram Reels instead of saving a friend who fell into a well. Netizens are reacting strongly to this. Watch the video yourself.